24 special

திமுக கூட்டணியில் இருந்து வேறு கூட்டணிக்கு தாவ நினைக்கும் திருமா

Thirumavalavan,vck, stalin
Thirumavalavan,vck, stalin

கடந்த மூன்று நாட்களாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை எந்த ஒரு சோதனையிலும் ஏற்படாத வகையில் அதிகாரிகளுக்கு பல தாக்குதல் மற்றும் இன்னல் சம்பவங்கள் இந்த சோதனையில் நடந்துள்ளது. இதனால் அதிகாரிகளும் பலர் தாக்கப்பட்டு மருத்துவமனைகள் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.


மேலும் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென்று போலீசார் தரப்பில் புகார் அதிகாரிகள் அளித்துள்ளனர்.  அதன்படி மத்திய அரசே இந்த விவகாரத்தில் தலையிட்டு அதிகாரிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக சி ஐ எஸ் எஃப் வீரர்களை இறக்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் தாக்கப்பட்டது சாதாரணமாக நிகழ்ந்த சம்பவம் அல்ல திட்டமிட்டு திமுக கட்சியினரால் தொடரப்பட்டது என்று நிரூபிக்கும் வகையில் ஆடியோ ஒன்றையும் காவல்துறையிடம் சமர்ப்பிக்க உள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகள் கூறியது செந்தில் பாலாஜி தரப்பில் பயத்தை  உண்டாக்கியுள்ளது. 

முன்னதாக பல போராட்டங்களுக்குப் பிறகு பல எதிர்ப்புகளை  சந்தித்து திமுக அமைச்சரவை மாற்றத்தை தற்போது தான் நிகழ்த்தியது. மேலும் முதல்வரின் மகன் மற்றும் மருமகன் ஆகியோரும் சொத்துக் குவிப்பு, கள்ளச்சார விவகாரத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு போன்ற காரணங்களால் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிப் போய் இருக்கின்ற திமுக தலைமைக்கு ஐ டி ரெய்டு பெரும் தலைவலியை  ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே திமுக தரப்பினருக்கு எதிராகவே கருத்துக்களை கூறி வருகின்ற திமுக கூட்டணியில் இருக்கின்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், கள்ளச்சாராய விவகாரத்தில் அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி போராட்டத்தை மேற்கொண்டால் அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கைகொடுக்கும் என்று கூறியிருந்தார். மேலும் அவ்வப்போது திமுகவிற்கு எதிரான  தனது எதிர்ப்புகளையும் தெரிவித்து வந்து கொண்டிருந்தார், மேலும் அதிமுக தரப்பில் வேறு விசிக கூட்டணிக்கு வந்தால் ஏற்றுக்கொள்ளப்படும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று திடீரென உதயநிதிக்கு சம்பந்தப்பட்ட இடங்களில் அமலாக்க துறையினர் இறங்கி சோதனைகளை மேற்கொண்டுள்ளனர். இந்த அதிரடி ரெய்டில் உதயநிதி அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துக்களையும் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. 

ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி அதிகாரிகள் இறங்கியது, தற்போது முதல்வரின் மகன் உதயநிதிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை இறங்கியது, என இப்படி மாறி மாறி தி மு க விற்கு நெருக்கமான இடங்களில் சோதனைகள் நடைபெற்று வருவது திமுகவின் கூட்டணியில் உள்ள கட்சிகளை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. எனவே நாம் இங்கிருந்தால் நமக்கு ஒன்றும் வேலை ஆகாது என்றும் அப்படியே இக்கட்சியின் கூட்டணியில் இருந்து தேர்தலில் போட்டி போடுவதற்கான சீட்டுகளை பெற்றாலும் அதில் நாம் வெற்றி பெற முடியாது என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தரப்பு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. 

இதன் காரணமாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில், எல்லா ஆட்சியிலும் பிரச்சனைகள் இருந்து கொண்டு தான் உள்ளது எடப்பாடி சொல்லும் அளவிற்கு வன்முறைகள், மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு, 24 மணி நேரமும் அமைதியின்மை என்பது பெரிதாக இல்லை என்றாலும், சட்ட ஒழுங்கு பராமரிக்கப்படுகிறது என்றால் அதை மறுக்கத்தான் முடியும் ஏனென்றால் சட்ட ஒழுங்கை அரசு பராமரிக்கிறது, தமிழகம் அமைதியாக இருக்கிறது என்பதை கூற முடியாத அளவிற்கு எடுத்துக்காட்டாக சாராய மரணங்கள் அமைந்துள்ளது என்று எம்பி திருமாவளவன் கூறியுள்ளார். இப்படி திருமாவளவன் திமுக கூட்டணிக்கு எதிராக பேசியது தற்போது வரை திமுக மற்றும் விசிக ' விற்கு இடையில் இருக்கும் விரிசலை அதிகப்படுத்துவதாகவே தெரிகிறது.