இளைஞர் ஒருவரின் பதிலால் தலைகீழாக மாறிய அரசியல் களம்
தமிழகத்தில் அரசியல் களமும் இளைஞர்கள் பார்வையும் தற்போதைய சூழலில் தலைகீழாக மாறி இருப்பது இளைஞர் ஒருவர் கொடுத்த பதில் மூலம் தெரியவந்து இருக்கிறது, இன்னும் சொல்ல போனால் நேரடியாக இளைஞர் எழுப்பிய கேள்வியில் இராமர், அனுமான் குறித்து கவிதை எழுதியதை வரவேற்கும் ரஞ்சித், வேறு மதம் குறித்து கவிதை எழுதி இருந்தால் வரவேற்பாரா?என இளைஞர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
அதோடு நில்லாமல் கேரளா ஸ்டோரி என்ற படம் வெளிவந்து இருக்கிறது, நீதிமன்றமும் அனுமதி கொடுத்து இருக்கிறது கருத்து சுதந்திரம் என விடுதலை சிகப்பி இந்து கடவுள்கள் குறித்து பேசியதை வரவேற்ற சீமான், அதே கருத்து சுதந்திரம் அடிப்படையில் வெளியான கேரளா ஸ்டோரி படத்தை எதிர்ப்பது ஏன் என நெத்தி அடியாக கேள்வி எழுப்பினார்.
இங்கு எல்லாமே அரசியல்தான் சார், யார் கேள்வி எழுப்பாமல் களத்தில் இறங்காமல் இருக்கிறார்களோ அவர்களது நம்பிக்கையை இழிவாக பேசுவது நடக்கிறது இனியும் அது போல் நடக்க கூடாது என இளைஞர் பேசி இருக்கிறார். இளைஞர் ஒருவர் நேரடியாக தனது கருத்தை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்து இருப்பது தற்போதைய மக்கள் மன நிலை என்ன என்பதை தெளிவாக சீமான் போன்றொருக்கு உணர்த்தி இருக்கிறது.
இனியும் தொடர்ச்சியாக இந்து மதம் சார்ந்த நம்பிக்கையை இழிவு செய்வதோ அதை ஆதரிக்கும் செயல்களில் ஈடுபடும் அரசியல் கட்சிகளை மட்டுமல்லாமல், சினிமா பிரபலங்களையும் கேள்வி கேட்கும் நிலைக்கு மக்கள் வந்து இருப்பது தமிழக அரசியல் களம் பொதுமக்கள் பார்வையில் தலைகீழாக மாறி இருப்பது தெரியவந்து இருக்கிறது.