பதற்றத்தில் இருக்கும் தலைமை திமுக..! அடுத்தடுத்து நடக்க போவது என்ன
உடன்பிறப்புகள் கதறல்...!
தமிழக அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்ட சூழலில் பழனிவேல் தியாகராஜனிடம் இருந்து நிதி துறை மாற்றி அமைக்கப்பட்டு இருப்பது கட்சியில் பெரும் குமுறலை உண்டாக்கி இருக்கிறது குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் செலவு செய்தது நீங்கள் பதவி அவுங்களுக்கா என திமுக எம் எல் ஏ மகன் புலம்பி இருப்பது திமுகவில் அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது.
தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த முறை நிதித்துறை தொடங்கி தொழில்துறை வரை மிகப்பெரிய மாற்றம்
தமிழ்நாடு அமைச்சரவையில் உண்டாகி இருக்கிறது.
இந்த முறையும் புதிதாக ஒருவர் அமைச்சரவையில் இடம் பிடித்திருக்கிறார். கடந்த முறை உதயநிதி அமைச்சராகப் பொறுப்பேற்கும்போது மெய்யநாதனிடம் இருந்த விளையாட்டுத்துறை மட்டும் பிரித்து அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டதோடு சிறிய அளவிலேயே மாற்றம் இருந்தது.
ஆனால், இந்த முறை பால்வளத்துறையைக் கவனித்துவந்த அமைச்சர் நாசர் அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, மன்னார்குடி எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா புதிதாகச் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
டி.ஆர்.பி.ராஜாவிற்கு பொறுப்புகள் வழங்கப்பட்ட நிலையில் பூண்டி கலைவானன் மகன் வெளிப்படையாக செலவு செய்தது நீங்கள் பதவி அவுங்களுக்கா என வேதனையை வெளிப்படுத்தி இருக்கிறார். கருணாநிதிக்காக தொகுதியை இரண்டு முறை விட்டு கொடுத்தவருக்கு இந்த நிலையா என வேதனை அடைந்து இருக்கிறார்கள் டெல்டா உடன் பிறப்புகள்.
இது ஒருபுறம் என்றால் அமைச்சரவையில் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வசமிருந்த நிதித்துறை தங்கம் தென்னரசுவிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
தங்கம் தென்னரசுவிடம் இருந்த தொழில்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை முறையே டி.ஆர்.பி.ராஜாவிடமும், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனிடமும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு அமைச்சரவையில் அதிக விமர்சனத்துக்குள்ளானவர் பி.டி.ஆர்.-தான். உள்ளூர் அரசியல் தொடங்கி கோட்டையில் பிற அமைச்சர்களோடு இணக்கமாகச் செல்லாதது வரை பல்வேறு குற்றச்சாட்டுகள் பி.டி.ஆர்-மீது கட்சி நிர்வாகிகளும் சீனியர் அமைச்சர்களும் முன்வைத்து வந்தனர்.
அவரை மாற்ற வேண்டும் என முதல்வருக்கு நெருக்கமான சீனியர்கள் பலர் முதல்வர் அலுவலகத்திலே காத்துக்கிடந்தனர். ஆனால், முதல்வர் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. இந்நிலையில் ஆடியோ விவகாரம்தான் அப்படியே நிலைமையை மாற்றி காட்டி இருக்கிறதாம்.
Ptr-ரிடம் இருந்து நிதி துறை பறிக்கப்பட்ட நிலையில் நிதி துறை அமைச்சராக கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர் செய்த நிதி மேலாண்மை குறித்து ptr ஆதரவாளர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர், நேர்மையாக கொடுத்த பதவியை செய்தவருக்கு இந்த நிலையா எனவும் அவர்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
அதே வேலையில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் இலவச திட்டங்களைச் செயல்படுத்தாமல் நிதியைக் காரணம் காட்டி எல்லாவற்றையும் தள்ளிப்போடுவது சரியாக இருக்காது என்பதாலேயே இலவச திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதற்கு வசதியாக தங்கம் தென்னரசுவை முதல்வர் தேர்வு செய்து இருப்பதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
தற்போது அமைச்சரவையில் சிறிய மாற்றம் ஒன்றே நடந்தது ஆனால் அதற்கே கட்சிக்குள் மிக பெரிய அளவில் கலக குரல் உண்டாகி இருக்கிறது, நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அமைச்சரவை மாற்றம் செய்தால் குளருப்படி இல்லாமல் இருக்கும் என சமூக வலைத்தளங்களில் உடன் பிறப்புகள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து இருந்த சூழலில்...,
தற்போது நாசர், பூண்டி கலைவானன் மற்றும் PTR தரப்பிற்கு ஆதரவாக உடன்பிறப்புகள் பலரும் கருத்து தெரிவித்து வருவது கட்சிக்குள் புகைச்சல் இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது இதற்கே இப்படி என்றால் நாடாளுமன்ற தேர்தலில் மூத்த தலைவர்கள் வாரிசுகளுக்கு சீட் கொடுக்கவில்லை என்ன அதிர்வலைகள் உண்டாகும் என்ற பதற்றத்தில் இருக்கிறதாம் திமுக தலைமை.