கேரளாவை சேர்ந்த இளம்பெண்கள் வெளிப்படையாக ஊடகங்களில் தெரிவித்த கருத்து பல்வேறு அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது...! கேரளாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிகளை மட்டுமல்லாமல்தமிழகத்தில் ஆளும் திமுக உள்ளிட்ட ஆளும் கட்சியையும் அதிர செய்துள்ள சம்பவம் நாடு முழுவதும் கடும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.
முதலில் பாஜகவிற்கு எதிர் அணியில் உள்ள கட்சிகள் கேரளா ஸ்டோரி திரைப்படத்தை அரசியல் திரைப்படம் என்றும் பாஜகவின் கொள்கைக்கு உதவும் என்றே எளிதில் கடந்து சென்றனர், ஆனால் அவர்கள் எதிர் பார்க்காத வகையில் பாதிக்கப்பட்ட பெண்கள் நேரில், முகத்தை கூட மறைக்காமல் ஊடகங்களிடம் கொடுத்த பேட்டி 10 நாட்கள் கழிந்த நிலையிலும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா? ஆம் அது தான் அரங்கேறி இருக்கிறது.
கேரளாவில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தங்கை இந்த படத்தில் வருவது போன்றே எங்கள் அக்கா மாயமாக போனால், காதல் என்ற ஒற்றை வார்த்தையில் வீழ்ந்த அவள் இன்று நாடு கடந்து சொல்ல முடியாத நிலையில் இருக்கிறாள் அவளை காதலித்து ஏமற்றிய நபர் இதே கேரளாவில் இருக்கிறான், ஆனால் எனது அக்கா அடிமையாக வாழ்வை தொலைத்து ஆப்கானிஸ்தானில் இருக்கிறாள் என கண்ணீர் மல்க கொடுத்த பேட்டியும் சரி.
நானும் இதே போன்று ஏமாற்றப்பட்டு இறுதியில் உண்மையை உணர்ந்து மீண்டும் என் குடும்பத்தை அணுகி இந்து மதம் திரும்பினேன் என தான் அனுபவித்த சித்திரவதைகளை வெளிப்படையாக ஊடகங்கள் மத்தியில் சொன்ன பெண்களால் உண்மையில் முழு கேரளா மாநிலத்தில் மட்டுமல்ல கேரளா எல்லையை ஒட்டிய தமிழகத்திலும் இதன் தாக்கம் பெரும் அளவில் உண்டாகி இருக்கிறது.
ஒரு நாள் வரை கேரளாவில் கம்யூனிசம் பேசி வந்த பலர் தங்கள் பெண்களின் வாழ்வை காக்க ஏதாவது மத்திய மாநில அரசுகள் சட்டம் கொண்டுவர வேண்டும் என வீதியில் இறங்கும் நிலைக்கு வந்து இருக்கிறார்கள். கேரளா ஸ்டோரியை தொடர்ந்து தமிழகத்திலும் நடைபெறும் முக்கிய தகவல்களை மையமாக கொண்டு ஒரு திரைப்படம் எடுக்க வேண்டும் என கேட்கும் அளவிற்கு ஒரு திரைப்படம் மக்கள் மத்தியில் குறிப்பாக பெண்களை பெற்றவர்கள் மனதில் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது.
இது ஒருபுறம் சமூக தாக்கம் என்றால், இனியும் வாக்கு வங்கி அரசியலை கருத்தில் கொண்டு கேரளா ஸ்டோரி போன்று பல்வேறு திரைப்படங்களை ஆளும் கட்சியான பாஜகவிற்கு எதிர் அரசியல் செய்யும் மாநில கட்சிகளான திமுக, கம்யூனிஸ்ட், திரிணமூல் காங்கிரஸ் போன்றவை செய்யப்பட்டால் உண்மையில் சொந்த கட்சியினர் வாக்குகளை கூட இழக்கும் நிலைக்கு செல்லும் சூழல் உண்டாகி இருப்பது ஒரு திரைப்படம் நேரடியாக உணர்த்தி சென்று இருக்கிறது.
மொத்தத்தில் திரைத்துறை மூலம் இந்திய இறையாண்மைக்கு எதிராக கருத்துக்களை கொண்ட திரைப்படங்கள், மதம் கடந்த காதல் என பேசப்பட்ட படங்கள் போன்றவை வெளியான காலம் மாறி, காஸ்மீர் பைல்ஸ், கேரளா ஸ்டோரி என அடுத்தடுத்து இந்தியாவின் பக்கம் நிற்கும் படங்கள் வெளியாகி வருவது கடும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.