24 special

ஒரே கவிதை ஒட்டுமொத்த திமுகவையும் பங்கமாக கலாய்த்த இளம் பெண்!

MKSTALIN
MKSTALIN

தமிழகத்தில் தற்போது திமுகவின் நிலையை பார்த்தால்  பரிதாபமாக உள்ளது என்ற பேச்சுக்கள் தற்போது சமூக வலைத்தளம் முழுவதும் முன்வைக்கப்படுகிறது அதோடு முதல் ஆளாக தனது தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலையும் தொகுதி பங்கிடையும் வெளியிட்ட திமுக பல விமர்சனத்திற்கும் உள்ளாக்கப்படுகிறது. முன்னதாக அவர்களது ஆட்சியைப் பற்றி சற்று திரும்பி பார்த்தால் முற்றிலும் விமர்சனமும் திமுகவிற்கு எதிரான போராட்டங்கள் மற்றும் திமுக அமைச்சர்கள் செய்த ஊழல் விவகாரங்கள் அந்த ஊழலில் பதவி இழந்த அமைச்சர்கள் தற்போது சிறையில் உள்ள அமைச்சர்கள் இன்னும் சிறை செல்ல உள்ள அமைச்சர்களே எங்கள் கண்ணுக்கு தெரிவதாக மக்கள் கொந்தளித்து வருகின்றனர். , மேலும் இவை அனைத்தையும் வைத்து சமூக வலைதளங்களில் திமுகவிற்கு எதிரான விமர்சனங்கள் வலுவெடுத்து வந்தது மேலும் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மீண்டும் அதே வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக தற்போது தேர்தல் வாக்குறுதி பட்டியலையும் திமுக வெளியிட்டு இருப்பதும் அரச்சமாவை திமுக அரைத்துள்ளது என்று விமர்சனத்தை பெற்று வருகிறது. 


இந்த நிலையில் தான் திமுக தனது வேட்பாளர்கள் பட்டியலில் செம கெத்தாக அரசியல் வட்டாரத்தில் முதல் நாளாக வெளியிட்டது. மேலும் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் எந்தெந்த தொகுதியில் போட்டியிட உள்ளது அந்த தொகுதிக்கான வேட்பாளர்கள் யார் எந்த சின்னம் என்பது குறித்த முழு விவரத்தையும் வரிசையாக வெளியிட்டு மற்ற கட்சிகள் அனைத்திற்கும் திமுக பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அந்த பரபரப்பு அனைத்தும் தற்போது திமுக பக்கம் திரும்பி உள்ளது ஏனென்றால் அமைச்சர் உதயநிதி அரசியலுக்கு வருவதற்கு முன்பு வாரிசு அரசியலா நாங்களா செய்கிறோம் என்று கூறிவந்த நிலையில் உதயநிதி அரசியலில் நுழைந்தார் அதற்கு பிறகு ஆமாம் நாங்கள் வாரிசு அரசியல் தான் செய்கிறோம் இதில் என்ன தவறு இருக்கிறது எங்கள் குடும்பமே மக்களுக்கு சேவையாற்றி வருகிறது என்று அதனை வேறு விதமாக மாற்றி பிரச்சாரம் செய்து வந்தது திமுக அதன்படியே தற்போது தங்கள் வேட்பாளர் பட்டியலின் திமுக அறிவித்துள்ளது சமூக வலைதளத்தில் கேலிக்கூத்தாகியுள்ளது. அதிலும் குறிப்பாக திமுகவின் வேட்பாளர் பட்டியலை ஒரு இளம் பெண் பங்கமாக கலாய்த்து வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் படு வைரனாக பகிரப்படுகிறது. 

அதில், தேர்தல் அறிவிப்புகள் வந்த பிறகு வேட்பாளர்கள் பட்டியல் எல்லாம் வெளியாகிறது அதிலும் முந்திக்கிட்டு தனது வேட்பாளர் பட்டியலை அறிவித்தது திமுக தான்! திமுக அதனுடைய கூட்டணி கட்சிகள் யார் யார் என்பதையும் தொகுதி பங்கிடையும் முடித்து விட்டார்கள், அந்த வகையில் திமுக 21 இடங்களிலும் காங்கிரஸ் பத்தி இடத்திலும் மீதி இருக்கும் தொகுதிகளை மற்ற கூட்டணி கட்சிகளுக்கும் ஒதுக்கப்பட்டிருக்கிறது என இந்த செய்தியை நான் பார்க்கும் பொழுது எனக்கு ஒரு கவிதை தான் ஞாபகத்திற்கு வருகிறது!! "தூத்துக்குடிக்கு ஸ்டாலினின் தங்கை கனிமொழி, திருவண்ணாமலைக்கு எவ வேலு மகன், திருநெல்வேலிக்கு சபாநாயகர் அப்பாவு மகன், பெரம்பலூருக்கு நேரு மகன், கள்ளக்குறிச்சிக்கு பொன்முடி மகன், கடலூருக்கு எம் ஆர் கே பன்னீர்செல்வம் மகன், சேலத்துக்கு வீரபாண்டியன் ஆறுமுகம் மகன், வடசென்னைக்கு ஆற்காடு வீராசாமி மகன், மத்திய சென்னைக்கு முரசொலி மாறன் மகன், தென் சென்னைக்கு தங்கம் தென்னரசு தங்கை, தீக்குளிக்க திமுக உடன் பிறப்புகள்! போஸ்டர் ஒட்ட அந்த உடன்பிறப்புகளின் வாரிசுகள்! வருமானத்திற்கு ஜாபர் சாதிக்!  வழக்குகளை நடத்த வடநாட்டு வக்கில்! புத்திக்கு பிரசாந்த் கிஷோர்! சம்பாதிக்க நான்! செலவழிக்க நீ! சொக்கா என்ன விட்டுடு!! இதுக்கு மேல எங்களால முடியல இப்படிக்கு தமிழ்நாடு மக்கள் என்று அந்தப் பெண் ஒரு கவிதையை படித்துக் காட்டி ஒட்டுமொத்த திமுகவையும் தோலுரித்துக் காட்டியுள்ளார் இது இணையத்தில் தற்போது படு வைரலாக உலா வருகிறது.