
திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு இந்த நாடாளுமன்ற தேர்தலில் நாமக்கல் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது அக்கட்சி. அந்த தொகுதியின் வேட்பாளராக அறிமுகமான சூர்யமூர்த்திக்கு அக்கட்ச்சியினர் வரவேற்ப்பு கொடுத்து வந்தனர். ஆனால், இணையத்தில் ஒரு வீடியோ வைரலாக தொங்கியது. அதனை பிறகு அந்த தொகுதியில் திமுக வேட்பாளரை மாற்றம் செய்தது. இந்த சூழ்நிலையில் புதியதாக நியமிக்கப்பட்ட வேட்பாளரும் சர்ச்சையில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் மீண்டும் வேட்பாளர்களை மாற்றம் செய்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. முதல் கட்டமாக தமிழகத்தில் நடைபெறுகிறது. இந்த தேர்தலை பொறுத்தவரை நான்கு முனை போட்டியாக தொடங்கியுள்ளது. திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகிய நான்கு கட்சிகளும் களமிறங்கியுள்ளன. அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்கள் அறிவித்து தீவிர பிரச்சனை மேற்கொண்டுள்ளது. தேர்தல் திருவிழா தீவிரம் அடைந்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அதற்கான பணிகளும் அந்த தொகுதியில் நடைபெற்று வந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் சூரிய மூர்த்தி பேசிய வீடியோ இணையத்தில் பரவியது.
அதில், ஆணவப்படுகொலை செய்வேன். தாயோடு சேர்த்து குழந்தையையும் கருவறுப்போம். வரும் காலத்தில் கொங்கு நாட்டில் பல்வேறு கொலைகள் விழும் என சூர்யமூர்த்தி உளவுத் துறைக்கே சவால் விட்ட வீடியோ வைரலாகி சமூகவலைதளங்களில் பரவியது. ஆணவக் கொலையை ஆதரித்து ஒரு வேட்பாளர் பேசியது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் திமுக கட்சியினர் அறிவித்த பேரில் சூரிய மூர்த்தி மாற்றப்பட்டார். தற்போது வேட்பாளராக மாதேஸ்வரன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் கொமதேகவின் நாமக்கல் மாவட்டச் செயலாளராக உள்ளார்.
சூரிய மூர்த்தி பேசியதன் காரணமாகவே அவருக்கு கொடுக்கப்பட்ட எம்பி சீட்டை மாதேஸ்வரனுக்கு கொடுக்கப்பட்டது. அவரும் தராது சர்ச்சையில் பேசி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குடிபோதையில் காவல் துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் காவல் துறைக்கு சவால் விடுப்பதுமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. தொடர் சர்ச்சை சம்பவங்களில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர்கள் மீது மக்கள் தங்கள் நம்பிக்கையை இழந்து வருகிறார்கள். திமுக போதை பொருளில் இருந்து மீளவே தேர்தல் பாத்திரத்தை கையில் எடுத்தது என்றும் இப்போது கூட்டணி கட்சிகள் விவகாரம் பெரிதாகும் நிலையில் இந்த தேர்தல் திமுகவுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.