![ANNAMALAI](https://www.tnnews24air.com/storage/gallery/d9io4dXniEI9M9uw62RJ53UOUki9hEIxAFGjhkB0.jpg)
இன்னும் ஆறு மாத காலம் தான் இன்னும் மூன்று மாத காலம் தான் இன்னும் ஒரு மாதம் தான் என்று நாட்களை அரசியல் வட்டாரம் முழுவதும் எப்பொழுது என்று எண்ணிக் கொண்டிருந்த நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு தேர்தலுக்கான வாக்குறுதிகள் அறிவிக்கும் வரை சென்று விட்டது. வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் ஆரம்பிக்க உள்ளது இருப்பினும் ஏழு கட்டமாக நடைபெறுகின்றது. ஆனால் தமிழகத்தில் மட்டும் 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது தேர்தல் ஆணையத்தின் தரப்பையும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கட்சிகளும் தனது தேர்தல் பணிகளை அனைத்தும் தீவிரப்படுத்தி தற்போது வேட்பாளர்கள் கூட்டணி கட்சிகளுக்கு வேண்டிய தொகுதிகள் என அனைத்தையும் ஒதுக்கீடு செய்து ஒதுக்கீட்டு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த லோக்சபா தேர்தலை விட தற்போது நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் பாஜக ஒரு மூன்றாவது பிரதான கட்சியாக தமிழகத்தில் உருவெடுத்து தனக்கென்று வெற்றி வாய்ப்பிற்கான கூட்டணியை ஒன்றிணைத்து வெற்றி கூட்டணி கட்சியாக தற்போது உருவெடுத்துள்ளது. ஏனென்றால் 2019 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலின் பொழுது பாஜக அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேர்தலை எதிர்கொண்டது ஆனால் தற்பொழுது பாஜக தலைமையிலான கூட்டணியில் ஐந்திற்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்து அதில் நான்கு கூட்டணி வேட்பாளர்கள் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளது அரசியல் வட்டாரம் முழுவதும் கவனத்தைப் பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த கட்சி எல்லாம் வளர்வதற்கு இன்னும் பல நூறு ஆண்டுகள் ஆகும் என்று கூறி வந்தவர்கள் அனைவரும் வாய் அடைத்து நிற்கும் வகையிலான வளர்ச்சியை பாஜக இந்த நான்கு வருடங்களில் பெற்றுள்ளது என்று கூறினால் மிகையாகாது இதற்கு முக்கிய காரணமாக செயல்பட்டது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என்பதும் அவரின் சீரிய நடவடிக்கைகள் முன்வைக்கும் கருத்துக்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அதோடு அவர் தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகள் அனைத்திற்கும் சென்று மக்களை நேரடியாக சந்தித்து அவர்களிடம் உரையாடியது தமிழக மக்கள் அனைவராலும் வரவேற்பை பெறுகிறது, ஏனென்றால் இதற்கு முன்பு இது போன்ற ஒரு படித்த இளைஞன் தனது படிப்பின் மூலம் கிடைத்த ஒரு லட்சியத்தை விட்டுவிட்டு மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்று வந்ததில்லை அப்படி வந்தவரும் மக்கள் பணியே முதல் பணி என்று கூறி ஒரு சாமானிய மனிதனாக களத்தில் இறங்கி மக்களை சந்தித்து வந்ததும் ஏழை எளிய மக்களின் மனதைக் கவர்ந்தது. இதனால் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அண்ணாமலை பக்கம் தற்போது சற்று திரும்பி இருக்கிறார்கள் என்று அரசியல் விமர்சகர்களாலும் கூறப்படுகிறது அதனை சமூக வலைதளங்களில் உலா வரும் வீடியோக்கள் மூலம் நாமே காணலாம்! மேலும் லோக்சபா தேர்தல் அறிவிப்புகள் வெளியான பிறகு அண்ணாமலை இதில் போட்டியிடுவாரா என்ற கேள்விகள் முன்வைக்கப்பட்ட போதும் கட்சி என்ன சொல்கிறதோ அதை செய்வேன் என்று கூறி வந்த அண்ணாமலை தற்போது கோவையில் நாடாளுமன்ற வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இது அரசியல் வட்டாரம் முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது ஏனென்றால் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் அண்ணாமலையை பாஜக களம் இறக்கி தமிழகத்தின் முதல்வராக அமர்த்தும் என்ற பேச்சுகள் அரசியல் வட்டாரங்களில் உலா வந்தது. ஆனால் லோக்சபா வேட்பாளராகவே அண்ணாமலையை அறிவித்தது யாரும் எதிர்பாராத ஒன்றாகவும் உள்ளது. இந்த நிலையில் அண்ணாமலைக்கு ஒரு ஜோதிடர் ஜாதகம் பார்த்து அவரின் நேரம் எப்படி இருக்கிறது என்பதை பற்றி கூறியுள்ளார், அதாவது சிம்ம லக்கனம் சனி அதிகாரம் பெற்றிருக்கிறார், ஐந்தில் குரு அதிகாரம் பெற்றிருக்கிறார்! பத்தாம் இடத்தில் சூரியன் ராகு புதன் சுக்கிரன் இருக்கிறார்கள்! சுக்கிர திசை நடந்து கொண்டிருக்கிறது 07.04.2025 வரை நடக்கும் பெரிய அளவில் இவர்கள் ஒரு வெற்றியை காணுவார்கள்! 2026 ஆம் வருடத்தில் தான் சுக்கிர திசை முடிவடைகிறது அதற்குப் பிறகு சூரிய திசை வரும் லக்ன திசை வரும் பொழுது மிக உயரிய பதவிகளில் அவர் அமர்த்தப்படுவார் என்பதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று அண்ணாமலையின் எதிர்காலத்தை புட்டு புட்டு வைத்துள்ளார் ஒரு ஜோதிடர்! இது அரசியல் வட்டாரத்தில் உள்ள பிற கட்சியினரை கலக்கமடைய வைத்துள்ளது!