24 special

தேர்தல் அலுவலகத்தில் மோதிக்கொண்ட அதிமுக- திமுக... பரபரப்பை ஏற்படுத்திய களம்..!

Sekarbabu, Jeyakumar
Sekarbabu, Jeyakumar

தமிழ்நாட்டில் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்காக களமே பரபரப்பாக செல்லும் நிலையில், இந்த தேர்தலில் போட்டியானது, திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தலைமையில்  தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், தேர்தலுக்காக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து வரும் சூழ்நிலையில் திமுக அதிமுக இடையே கடுமையான முரண்பாடு ஏற்பட்டுள்ளது.


சென்னையில் மக்களவை தொகுதிகளாக தென்சென்னை, மத்திய சென்னை மற்றும் வட சென்னை என்று  தொகுதிகள் உள்ளது. இதில் வட சென்னையில் திமுக சார்பாக வேட்பாளர் கலாநிதி வீராசாமி போயிடுகிறார். அதிமுக சார்பாக வேட்பாளர் ராயபுரம் மனோ போட்டியிடுகிறார். இவர்கள் இருவரும் இன்று வட சென்னையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் திமுக மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளும்  ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்யவந்த நிலையில் இருவருக்கும் இடையே பிரச்சனை தொடங்கியுள்ளது. 

வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த இடத்தில் திமுக மற்றும் அதிமுக கட்சிகளில் யார் முதலாவதாக மனு தாக்கல் செய்ய வேண்டும் என்ற பிரச்சனை தொடங்கியுள்ளது. அதிமுக சார்பில் வந்திருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும், திமுகவின் அமைச்சர் சேகர்பாபுவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. முதலில் வந்தது அதிமுகதான் என தேர்தல் அதிகாரி கூறியும் சேகர் பாபு ஏற்க மறுத்து வாக்கு வாதம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் திமுகவினர் கொந்தளித்து அதிமுகவினரிடம் வம்புக்கு சென்றுள்ளனர்.

இதற்க்கு மத்தியில் பாஜக சார்பாக வடசென்னையில் போட்டியிடும் பால் கனகராஜ் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். அலுவலகம் பரபரப்பாக சென்றதால் சுமார் 43 நிமிடங்களுக்கு  காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. மேலும், திமுகவை கண்டித்து அதிமுகவினர் அலுவலக வாசலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் முன்னாள் அமைச்சர்  ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  நான் தான் அலுவலகத்திற்கு முதல் ஆளாக வந்திருந்தேன் அப்போது இரண்டு சுயேட்ச்சை வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர். இதனால் வெளியில் வெயிட் பண்ணியிருந்தேன் என்றும் அப்போது திடீரென திமுகவினர் திபுதிபுவென உள்ளே வந்துட்டாங்க. இதனால் திமுகவினர் அதிகார துஷ்பிரயோகம் செய்தனர் எங்களுக்கு தான் முதலில் டோக்கன் வழங்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையே அமைச்சர் சேகர்பாபு, திமுக வேட்பாளர் தான் முதலில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான டோக்கனை பெற்றதாக கூறினார். இதனால் இருவருக்கும் அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக இரு திராவிட கட்சிகளும் அராஜகத்தின் உச்சத்தில் ஈடுபடுவதாக கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.