ஒரு காலத்தில் தமிழகத்தில் முக்கிய மற்றும் முன்னணி ஆளுங்கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கை கொண்ட கட்சியாகவும் தொடர்ச்சியாக இரண்டு ஆட்சி காலம் ஆளும் அரசாங்கமாகவும் இருந்த கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். ஆனால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவிற்குப் பிறகு தற்போது அதிமுக பெரும் திண்டாட்டத்தில் சுக்குநூறாக உடைந்து போய் உள்ளது. முதலில் அம்மாவின் மறைவையொட்டி பன்னீர்செல்வம் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஆனால் சசிகலா அவர்களின் கோரிக்கைக்கு இணங்கி அவர் ராஜினாமா செய்ய எடப்பாடி அவர்கள் முதல்வராக பொறுப்பில் அமர்த்தபட்டார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இறப்பதற்கு முன்பாகவே ஒரு ஆட்சியில் ஆரம்பத்தை விட்டு சென்றார் அந்த ஆட்சியில் அதிமுகவும் பெரிய தூணான ஜெயலலிதா இறந்த பிறகு அந்த கட்சி பெரும் பரிதாவிப்பிற்கு உள்ளானது. அதுமட்டுமின்றி கட்சி தலைமை எடுத்த முடிவுகளின் ஒத்த வராமல் சிலர் மாற்றுக் கட்சியை அன்றே ஆரம்பித்தனர் அப்படி உருவானது தான் டிடிவி தினகரன் தலைமையிலான கட்சி.
இதற்குப் பிறகு எடப்பாடி ஓ பன்னீர்செல்வம் கிடையே நடந்த தகராறு 2021 ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்கு சாதகமாக அமைந்தது அதிமுக மேலும் இரு கட்சிகளாக பிரிய தற்போது அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியே பொறுப்பில் உள்ளார். ஆனால் இவரால் ஜெயலலிதா அவர்கள் எடுத்துச் சென்ற அளவிற்கு கட்சியை கொண்டு செல்ல முடியவில்லை. எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை பெற்றிருந்தாலும் கூட கடுமையான கேள்விகளையும் வாதங்களையும் அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமி முன்வைக்க தவறவிட்டதாகவும் அரசியல் வட்டாரங்கள் தரப்பில் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி கடந்த லோக்சபா தேர்தலிலும் அதிமுக படுதோல்வியை தழுவியது பல இடங்களில் டெபாசிட்டையும் இழந்து,
மூன்றாவது இடத்திற்கும் தள்ளப்பட்டது. இந்த தோல்வி அதிமுகவிற்கு பேரிடியாக இறங்கிய நிலையில் மீண்டும் ஒரு தோல்வியை சந்திக்க வேண்டாம் என்று விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்தது. இவ் ரெண்டுமே அதிமுகவிற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டு வந்த நிலையில் நாங்கள் லோக்சபாவில் தோல்வியை பெற்றிருந்தாலும் சட்டசபை தேர்தலை விட மாட்டோம் ஒரு தோல்விக்கு பிறகு நிச்சயமாக வெற்றி கிடைக்கும் என்று கூறி வந்தார் எடப்பாடி பழனிசாமி. இந்நிலையில் சட்டசபை தேர்தலில் வெற்றி வாய்ப்பை பெறுவதற்கு ஒரு முக்கிய வியூக அமைப்பாளரை நாம் நம் கைக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக பிரபல அரசியல் வியூக அமைப்பாளராக உள்ள பிரசாந்த் கிஷோரை அழைத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. முன்னதாக 2021 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவின் வெற்றி வாய்ப்பை உறுதி செய்து கொடுத்ததும் இவரின் யூகம்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் 2024 லோக்சபா தேர்தலில் திமுக அழைத்த பொழுது கூட அவர்களுக்கு மறுப்பு தெரிவித்த இவர் அதிமுகவிற்கு என்ன பதில் கூறுவார் என்பதை அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறி உள்ளது.
மேலும் மற்றொரு தரப்பு இதுகுறித்து கூறுகையில் ஏற்கனவே பிரசாந்த் கிஷோர் அதிமுகவை இனி காப்பாத்த முடியாது நீங்கள் தென் மாவட்டங்களில் சரிவை சந்தித்துவிடீர்கள் அவர்கள் ஆதரவு இல்லாமல் வர முடியாது எனவே எடப்பாடி அனைவரையும் ஒருங்கிணைத்து செல்ல வேண்டும், குறிப்பாக பாஜக இல்லாமல் நீங்கள் வர முடியாது என அடித்து கூறிவிட்டதாக வேறு சில தகவல்கள் கசிகின்றன...