24 special

அமைச்சர் பொன்முடியின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை!!

ponmudi
ponmudi

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வானூர் பகுதியில் பூத்துறை என்ற கிராமத்தில் செம்மண் குவாரி ஒன்று அமைந்துள்ளது. அந்தப் பகுதியில் அளவுக்கு அதிகமாக செம்மண்ணை அள்ளி அரசுக்கு பேரிழப்பு ஏற்படுத்தியதாக புவர்கள் எழுந்து வந்தது. மேலும் இதனால் அரசுக்கு ரூபாய் 28 கோடி அளவிற்கு வருவாயில் இழப்பீடு ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்பொழுது உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்து வரும் க. பொன்முடி, அவரது மகன், தொகுதியின் நிர்வாகிகள் கோத குமார், கள்ளக்குறிச்சி தொகுதியின் முன்னாள் எம்பி பொன். கௌதம சிகாமணி, சதானந்தன், ராஜமந்திரன் கோபிநாத் மற்றும் ஜெயச்சந்திரன் ஆகிய ஏழு பேர் மீது கடந்த 2012 ஆம் ஆண்டில் விழுப்புரத்தை சேர்ந்த குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து வந்தனர். 


இவ்வாறு இவர்கள் மீது வழக்கு செய்ததை தொடர்ந்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது கௌதமசிகாமணி ஆகிய இருவருமே தலைமறைவாகி இருந்து வந்தனர். இது மட்டுமல்லாமல் இவர்கள் இருவருமே நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு கோரிக்கை அளித்திருந்ததை தொடர்ந்து அமைச்சர் பொன்முடிக்கு முன்ஜாமின் கிடைக்காத காரணத்தினால் பொன்முடி கைது செய்து திருச்சியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி மற்றும் அவருடன் சேர்ந்து மூன்று பேர் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள நீதிமன்றத்தில் வந்து சரண் அடைந்தனர்.

இந்த நிலையில் செம்மண் குவாரி வழக்கானது விழுப்புரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து கொண்டு வருகிறது. இந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்டிருந்த லோகநாதன் தற்பொழுது இறந்து விட்ட நிலையில் அரசு தரப்பில் இருந்து  67 பேர் சாட்சிகளாக இணைக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை 23ஆம் தேதி வரையிலும் சுமார் 40 பேரிடம் விசாரணை நடத்தி வந்த நிலையில் அதில் உள்ள 28 பேர் பிறழ் சாட்சியாக உருவெடுத்து உள்ளனர். 

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் இந்த வழக்கினை விசாரித்து வந்த தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த குற்ற பதிவேடு காவல்துறை தலைமை காவலர் ஜெயச்செல்வி ஆகியோர் சாட்சிகளாக இருந்து ஆஜராகி  வழக்கு தொடர்பான சாட்சிகளை அழித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கானது 29ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து அமைச்சர் பொன்முடியின் அசையும் சத்துக்களையும், அசையா சத்துக்களையும் அமலாக்கத் துறையானது முடக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியது. 

இவ்வாறு அமைச்சர் பொன்முடியின் சத்துக்கள் முடக்கியது மட்டுமல்லாமல் அவருடைய மகனான கௌதம சிகாமணியின் சொத்துக்களையும் அவருடைய குடும்பத்தை சார்ந்தவர்களின் சொத்துக்களையும் முடக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறை தனது இணையதள பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அது தற்பொழுது சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் அமலாக்கத்துறை பதிவிட்டு இருப்பது என்னவென்றால்...

செம்மண் குவாரி  முறைகேடு வழக்கின் தொடர்ச்சியாக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது குடும்பத்தினர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டு இருப்பதாகவும், இவரின் சொத்து மதிப்பு ரூபாய் 14. 21 கோடி உள்ளது என்று தகவல் வெளியாகிறது. இந்த நிலையில் ரூபாய் 14.21 கோடி மதிப்புள்ள அமைச்சர் பொன்முடியின் சொத்துக்கள் அமலாக்கத்துறை முடக்கியுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. இது தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருவதோடு மட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் ஒன்றாக இருந்து சமூக வலைதளங்களில் வைரலாகி  வருகிறது. மேலும் செந்தில்பாலாஜிக்கு இதுபோல்தான் நடந்தது ஆனால் முடிவில் அவர் இப்பொழுது ஒரு வருடம் தாண்டியும் சிறையில் இருந்து வராமல் தவித்துக்கொண்டிருக்கிறார் அதுபோலவே பொன்முடிக்கும் நடக்கிறது என அரசியல் விமர்சனங்கள் எழுந்துள்ளது....