லித்தியம் என்பது ஒரு வகையான உலோகம் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்!! இதனுடைய பயன்பாடுகள் என்னவென்று பார்த்தால் பொதுவாக மின்சாரத்தினால் இயக்கப்படும் வாகனங்களை பேட்டரி பயன்படுத்தி இயக்குவது உண்டு. அவ்வாறு மின்சார வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் பேட்டரிகளை உருவாக்குவதற்கு இந்த லித்தியம் என்பது மிகவும் முக்கிய பங்கு வகித்து வருகிறது. மேலும் வாகனத்திற்கு பயன்படுத்தப்படும் பேட்டரிகளில் மட்டும்தான் இந்த வெத்தியம் பயன்படுத்தப்படுகிறதா என்று கேட்டால் இல்லை என்று தான் கூற வேண்டும்.
பொதுவாக பேக்டரிகள் என்று எடுத்துக் கொண்டாலே நாம் வாகனங்கள், மொபைல் போன்கள் போன்றவற்றிற்கு பயன்படுத்தி வருவது பொதுவானது. இந்த நிலையில் செல்போன்களுக்கு பயன்படுத்தப்படும் பேக்டரிகளில் இருந்து வாகனத்திற்கு பயன்படுத்தப்படும் பேட்டரிகள் வரைக்கும் இந்த லித்தியத்தின் பயன்பாடு என்பது மிகவும் முக்கியமானதாக இருந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தற்பொழுது லித்தியம் அதிகமாக இருக்கும் இடத்தினை அணுசக்தி துறையின் கீழ் செயல்படும் அட்டோமிக் மினரல்ஸ் ஆராய்ச்சி நிலையம் தற்பொழுது கூறியுள்ளது. இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள மாண்டியா, யத்கிரி போன்ற மாவட்டங்களில் அதிகப்படியான லித்தியம் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் மாண்டியா மாவட்டத்தில் மர்லாகல்லா ஏரியாவில் 1,600 டன் லித்தியம் உள்ளதாகவும், யத்கிரி மாவட்டத்தில் தொடர்ச்சியாக ஆராய்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு லித்தியம் ஏராளமாக இருப்பதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் லித்தியம் இருந்து வந்த நிலையில் தற்பொழுது சட்டீஸ்கர் மாநிலத்திலும் லித்தியம் இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இவ்வாறு அதிக அளவில் லித்தியம் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதால் இது தென்னிந்தியாவிற்கே பெருமை சேர்க்கும் விதத்தில் அமைந்திருப்பதாக கூறப்பட்டு வருகிறது.
பொதுவாக தொழில் துறைகளில் லித்தியத்தின் பயன்பாடு அதிகமாக இருந்து வருகிறது. மேலும் பேட்டரி தயாரிப்பு நிறுவனங்கள் லித்தியத்தை அதிக அளவில் பயன்படுத்தி வருவதால் அவற்றிற்கு லித்தியதின் பயன்பாடு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது. பொதுவாக செல்போன் பேட்டரியில் தொடங்கி கார் பைக் எலக்ட்ரானிக்ஸ் ஸ்கூட்டர் என அனைத்து வகையான பேட்டரி பயன்படுத்தும் பொருட்களுக்கும் லித்தியம் கண்டிப்பான முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே எலக்ட்ரானிக் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கும், ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனங்களுக்கும் அவற்றின் உற்பத்தி தொடர்பான பயன்பாடுகளுக்கு லித்தியத்தின் தேவை என்பது இருந்து வருகிறது.
இதுவரை இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் அனைத்துமே லித்தியத்தை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து வந்தது. இந்த நிலையில் தற்பொழுது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் லித்தியம் என்ற உலோகம் இருப்பது தெரிந்து இனி இந்தியாவிலேயே நமக்கு லித்தியம் சுலபமாக கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் நிறுவனங்கள் இருந்து வருகிறது. மேலும் இந்தியாவிற்கு உள்ளேயே கிடைப்பதால் லித்தியத்தின் விலை என்பது குறைவாகவே இருக்கும் என்று கூறப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து லித்தியம் பயன்படுத்தப்படும் லேப்டாப், மொபைல் போன், மின்சார கார் மற்றும் பைக் போன்றவற்றின் விலைகளும் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் மாண்டியா மற்றும் யத்கிரி மாவட்டங்களில் 1600 டன் லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் புதிய நிறுவனங்கள் தொடங்குவதும், தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கவும் வாய்ப்புஇருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பல முன்னணி எலக்ட்ரானிக் நிறுவனங்கள் தற்பொழுது கர்நாடக மாநிலத்தில் தங்கள் தொழிலின் முதலீடுகளை செய்வதற்கு தொடர்ந்து ஆர்வம் காட்டி வருவதாக தெரிய வருகிறது. மேலும் எலக்ட்ரானிக் பொருள்களின் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இது குறித்த செய்தி தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.