
தமிழகத்தில் மக்களவை தேர்தல் முடிவில் அதிமுக பெரிய விளைவுகளை சந்திக்கும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், களத்தில் தீவிரமாக பிரசாரம் செய்து வரும் அதிமுக வேட்பாளர்களிடையே தினகரனின் பேச்சு பரபரப்பை ஏறப்டுத்தியுள்ளது.
மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது, இதில் முதற்கட்டமாக தமிழகத்தில் வரும் 19ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கும் சேர்ந்து தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில், தேர்தலுக்கான பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் முடிவுக்கு வருகிறது. இதனால் வேட்பாளர்கள் அனல் பறக்க பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த தேர்தலை பொறுத்தவரையில் நான்கு முனை போட்டி என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.
பாஜகவுடன் கூட்டணியை முறித்த அதிமுக தொடர்ந்து பாஜக குறித்து எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரத்தில் சீண்டி வருகிறார். பாஜக உடன் கூட்டணியில் இருக்கும் ஓபிஎஸ், டிடிவி மற்றும் தினகரன் அதிமுக கட்சி உண்மையான தொண்டர்கள் கைக்கு வரும் என கூறி வந்த நிலையில், பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து, அவருக்காக வாக்கு சேகரித்து பிரசாரம் செய்தார். அப்போது, ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுக, டிடிவி தினகரன் வசமாகும். முதலிலேயே அதிமுக டிடிவி தினகரன் கையில் சென்றிருந்தால், ஸ்டாலின் முதலமைச்சராக இருந்திருக்கமாட்டார். அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமி ஒப்பந்ததாரர்களுக்கு தாரைவார்த்து விட்டார் என்று குற்றம் சாட்டியிருந்தார்.
தொடர்ந்து, இராமநாதபுரத்தில் ஓபிஎஸ்க்கு திமுகவில் இருந்து எம்ஜிஆர் வெளியேற்றப்பட்டது போல அதிமுகவில் இருந்து ஓபன்னீர் செல்வம் வெளியேற்றப்பட்டதாக பேசினார். இது அதிமுக இடையே கலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படி எடப்பாடி பழனிச்சாமி எந்த பக்கம் திரும்பினாலும் விமர்சனத்தை பெற்று வந்த நிலையில், தினகரன் இன்று தேனியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது: இந்த லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் அதிமுக 3வது இடத்துக்கு தள்ளப்படும் என்று கூறினார். இது குறித்து அரசியல் விமர்சகர்கள் தெரிவிப்பது, அதிமுகவை பொறுத்தவரை இந்த தேர்தல் வாழ்வா சாவா என்ற யுத்தத்தில் உள்ளது.
இதில் கணிசமான தொகுதிகளை பெறவில்லையென்றால் நிச்சயம் அதிமுகவுக்கு பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடலாம் என்றும் ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன இதையெல்லாம் அதிமுக சந்திக்க கூடலாம் என கூறப்படுகிறது. பாஜகவுடன் கூட்டணி மேற்கொண்டபோது தான் அதிமுகவுக்கு பல நன்மைகள் கிடைத்ததாக பாஜகவினர் கூறிவருகின்றனர். அதிமுக இந்த தேர்தலில் ஒரு இடத்தில கூட வெற்றி பெறாது என்ற கருத்து கணிப்பு வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.