24 special

தென்காசியை கவனம் செலுத்தும் தமிழகம்... வெற்றி யார் பக்கம்..?

Krishanasamy, John pandi, Rani
Krishanasamy, John pandi, Rani

2024 மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை மாலை ஆறு மணியுடன் நிறைவடையும் நிலையில், அரசியல் கட்சியினர் தீவிரமாக களத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தென்காசியில் பாஜக கட்சி சார்பாக தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் போட்டியிடுகிறார். 



தென்காசி தொகுதியில் திமுக சார்பாக ராணி போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணி சார்பாக புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன்  களம் இறங்குகிறார். நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது, பரபரப்பாக பிரச்சாரம் செய்து வரும் வேட்பாளர்களிடையே, தென்காசி தொகுதி வெற்றி என்பது தமிழக மக்கள் உற்று நோக்கும் வகையில் தென்காசி தொகுதி அமைந்துள்ளது. இங்கு முன்னணி தலைவர்கள் இருவர் போட்டியிடுவதால் தென் மாவட்ட மக்களை கடந்து தமிழகத்தின் பார்வை இந்த தொகுதி பக்கம் கவனம் செலுத்தி வருகின்றனர்.


டாக்டர் கிருஷ்ணசாமியும், ஜான் பாண்டியனும் தென் தமிழகத்தில் பட்டியல் இன மக்கள் இடையே தீவிரமாக செயல்பட்ட தலைவர்கள், இவர்களில் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ-வாக பதவி வகித்துள்ளார். ஆனால், மக்களவைத் தேர்தலில் அவர் இதுவரை ஒருமுறை கூட வெற்றி பெறவில்லை. இதுவரை மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வந்த கிருஷ்ணசாமி இதுவரை 6 முறை போட்டியிட்டு ஒரு முறை கூட வெற்றி பெறவிலை. இந்த தேர்தலோடு 7வது முறையாகும். தென்காசியை பொறுத்தவரையில், தேவேந்திர குல வேளாளர்கள் சமூகத்தை சேர்ந்த மக்கள் பெருவாரியாக உள்ளனர். இவர்களின் வாக்குகளை வைத்தே வெற்றி என்பது தீமானிக்கும் நிலையாக உள்ளது.


இங்கு, அதிமுக- பாஜக இடையே போட்டி என்றாலும் முன்னதாக பாஜக கட்சியில் இருந்து வரும் ஆனந்த் அய்யாசாமி அப்பகுதி மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்தார். இதன் மூலம் பாஜக வேட்பாளர் ஜான் பாண்டியனுக்கு வாக்குகள் அதிகமாக செல்லும் என கூறப்பட்ட நிலையில், ஜான் பாண்டியன் மகளும்  தமிழக மக்கள் முன்னேற்ற கழக மகளிர் அணி தலைவியுமான வினோலின் நிவேதா தனது அப்பாவுக்காக வாக்குகளை சேகரித்தார். நேற்று தேங்காய் பாராளுமன்ற தொகுதி பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார்.


அப்போது. ' இந்த பிரச்சாரம் வெற்றியை நோக்கி தான் செல்கிறது. குடும்பமாக சென்று வாக்குகளை சேகரித்து வருகிறோம். மக்களின் ஆரவாரத்தையும், ஆதரவையும் பார்க்கையில் கண்டிப்பாக தென் காசியில் தாமரை மலர்ந்தே தீரும். மக்களும் அவர்களின் பிரச்சனைகளை முன் வைக்கின்றனர். கண்டிப்பாக அவர்களின் நம்பிகையை கைப்பற்றுவோம்' என கூறினார். ஒரு பக்கம் திமுக, அதிமுக வேட்பாளர்களும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்தாலும் களம் பாஜக பக்கம் திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. இன்று பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நாட்டா ஜான்பாண்டியன் அவர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை செய்கிறார்.


இந்தசூழ்நிலையில், தமிழக பாஜக வேட்ப்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் தமிழகம் பயணம் மேற்கொண்டு ரோடு ஷோ, பொதுக்கூட்டம் என்று மக்களை கவர்ந்து வருகின்றனர். இந்த தேர்தல் போட்டியில் பாஜக கூட்டணி வேட்பாளர் ஜான் பாண்டியன் வெற்றி பெறுவார் என கூறப்படுகிறது.