அதிமுக கொடி,சின்னம் லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பயன்படுத்த தடை விதிக்க அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி உயர்நீதிமன்றத்தில் வாள்கு தொடர்ந்தார். அதன் விசாரணையில் ஓபிஎஸ்க்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது, அப்படி உத்தரவை மீறினால் நீதிமன்ற கவனத்திற்கு கொண்டு வர இபிஎஸ் தரப்புக்கு உயர் நீதிமன்றம் அறிவித்துஉள்ளது. இதுவே இபிஎஸ்க்கு முதல் அஸ்திவாரம் என்று கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில், அதிமுக விவகாரம் முடிந்த நிலையில் இல்லை. அதவது, அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டிய போது எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு கிடைத்து அதிமுக பொதுக்கூட்டத்தின் மூலம் பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு கட்சியில் இருந்து நீக்கிய ஓபிஎஸ், அவரது ஆதரவாளர்கள் அதிமுக சின்னத்தை பயன்படுத்தி வருவதால் மக்கள் இடத்தில குழப்பம் நிலாவுவதாக இபிஎஸ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணையில் ஓபிஎஸ் அதிமுக சின்னத்தை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்து. இதனை எதிர்த்து ஓபிஎஸ் மேல்முறையீடு செய்தார் மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எடப்பாடி தொடர்ந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் இடைக்கால தடை எதிர்த்து மேல் முறையீடு செய்த மனுவின் நிலைமை என்ன என்று கேட்டு வழக்கை டிச.,11ம் தேதிக்கு ஒத்திவைத்து. மேலும் ஓபிஎஸ் இடைக்கால தடையை மீறக்கூடாது என ஓபிஎஸ் தரப்புக்கு நீதிமன்றம் தடை போட்டது. மேல்முறையீடு மனுவை பொருத்தே உயர் நீதிமன்றத்தில் இபிஎஸ் மனு மீது விசாரணை வரலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்த மனுவும் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்து கொண்டது, இபிஎஸ் தொடர்ந்த வழக்கும் நிலுவையிலே சென்று கொண்டு இருக்கிறது, கொடநாடு கொலை விவகாரத்தில் இபிஎஸ் கைது செய்யப்படலாம் என தகவல் வரும் வேலையில் தேர்தல் நெருங்கும்போது இபிஎஸ் மீது நடவடிக்கை மேற்கொண்டு கைது செய்யப்படவும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை சோதனை நடைபெறலாம் எனவும் கூறப்படுகிறது.
இதுவரை அதிமுக பொது செயலாளராக தேர்தெடுக்கப்பட்டதும் பாஜகவுடன் கூட்டணியில் நீடித்த வரையும் அதிமுக மாஜிகள் மீதான ஊழல் தொடர்பான வழக்குகளை சீண்டாமல் இருந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், பாஜக கூட்டணியில் எப்போதும் செல்ல மாட்டோம் என இபிஎஸ் வெளியில் வந்து அறிவித்த நிலையில், ED அதிமுக பக்கம் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. மேலும் அதிமுக மாஜிகள் ஏக்நாத் ஷிண்டேவாக மாறலாம் என தகவலும் கசிந்தன. இந்த வேலையில் அதிமுக மொத்தமாக ஓபிஎஸ் பக்கம் சென்று இபிஎஸ்யிடம் உள்ள பவரை பிடுங்கப்படலாம் என அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது. வரும் நாட்களில் தமிழக அரசியலில் பெரும் மாற்றம் ஏற்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.