24 special

மழை நேரத்திலும் புத்தியை காண்பித்த SV.சேகர்... உறுதியான அந்த தொடர்பு...

annamalai, sv sekar
annamalai, sv sekar

இதற்கு முன் அதிமுகவில் எம்எல்ஏவாக இருந்துவிட்டு பாஜகவில் பிரதமர் மோடி முன்பு இணைந்த எஸ்.வி சேகர் தற்பொழுது பாஜகவில் ஆக்டிவாக இல்லை எனக் கூறப்படுகிறது. மேலும் அவர் மாநிலத் தலைமை பொறுப்பை அண்ணாமலை ஏற்றது முதல் மாநில தலைமைக்கு எதிராக செயல்பட்டு வந்தார் என விமர்சனங்கள் எழுந்துள்ளது. இது மட்டுமல்லாமல் அண்ணாமலையின் போக்கு சரியில்லை அண்ணாமலை தலைவராக செயல்பட மாட்டேன் என்கிறார், அண்ணாமலை பலரை மதிப்பதில்லை எனக் கூறி அண்ணாமலையை அடிக்கடி சீண்டும் விவகாரத்தில் பாஜக மூத்த பிரமுகர் எஸ் வி சேகர் ஈடுபட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது. 


இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திமுக அரசை பாராட்டி அண்ணாமலையை விமர்சித்து இவர் எக்ஸ் வலைதளத்தில் பதிவுகள் வெளியிட்ட போது இவர் திமுகவின் கையாள் திமுகவில் இவர் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொண்டு பாஜகவை உள்ளிருந்தே எதிர்த்து வருகிறார் என விமர்சனங்கள் எழுந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னை முழுவதும் நேற்று முதல் மழை பெய்து வரும் நிலையில் SV.சேகர் திமுக தொடர்பை உறுதிப்படுத்துமாறு மற்றொரு விஷயத்தை செய்துள்ளார் என சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ பரவுகிறது.எஸ்வி சேகர் தனது சமூக வலைதள எக்ஸ் பதிவில் அவர் வீட்டின் அருகே தண்ணீர் தேங்கியுள்ளதை குறிப்பிட்டு ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவில் இவர் நகராட்சி பணியாளர்கள் உள்ளிட்ட சிலருடன் சுற்றி நிற்பது போலவும், அவர் வீட்டு வாசலில் தண்ணீர் இருப்பது போலவும் வீடியோ பதிவாகியுள்ளது.

மேலும் அவர் அந்த பதிவில் 'எவ்வளவு மழை பெய்தாலும் ஒரு மணி நேரத்திற்குள் வடிந்து செல்லக்கூடிய வழியில் இரவு பகலாக பணியாற்றும் சென்னை மாநகராட்சி களப்பணையாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் என் நன்றியும், வாழ்த்துக்களும்' எனக் கூறியுள்ளார். இதற்கு இணையதளத்தில் பல விமர்சனங்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது, குறிப்பாக SV.சேகர் அவர்கள் வசிக்கும் மயிலாப்பூர் பகுதியில் அதுவும் அவர் இருக்கும் வீடு இருக்கும் பகுதி பெரும்பாலும் மேடான பகுதி. அங்கு தண்ணீர் நின்றாலும் சிறிது நேரத்தில் வடிந்துவிடும், அதுமட்டுமல்லாமல் கொஞ்சம் அங்கு விஐபிகள் வாழும் ஏரியா என்பதால் அந்த பகுதியில் தண்ணீர் வடிந்து விடுவதற்கு மாநகராட்சி அதிகாரிகள் முயற்சி செய்து உடனடியாக வடியவைத்து விடுவார்கள். ஆனால் எஸ்.வி சேகர் சென்னையில் பல இடங்களில் கால் பதிக்காமல் உடனே மாநகராட்சி அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள் எனக் கூறி திமுக அரசை ஆதரிக்கும் விதமாக பதிவிட்டு வந்ததை பலர் விமர்சித்து வருகின்றனர். 

சென்னையில் பல இடங்களில் இன்னும் மழைநீர் வடியவில்லை, நேற்று பெய்த மழையால் ஏன் நீர் வடியவில்லை? நான்காயிரம் கோடி ரூபாய் செலவு செய்து மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது எங்கே என எக்ஸ் வலைதளத்தில் இந்திய அளவில் கேள்விகள் டிரெண்டிங்கில் சென்று கொண்டிருக்கும் பொழுது, எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களும் நிர்வாகிகளும் எங்கே 4000 கோடி ரூபாய் நிதி? ஏன் திமுக அரசு முறையாக மழை நீர் வடிகால் பணிகளை மேற்கொள்ளவில்லை? என கேள்வி எழுப்பி வரும் நிலையில் வீட்டு வாசலில் நின்ற தண்ணி வடிந்து விட்டது என அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் இவர் எப்படி பாஜக நிர்வாகியாகவும், பாஜகவிற்கும் விசுவாசமானவராகவும் இருக்க முடியும்? இவர் திமுகவின் கையாள்தான் என விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். இருப்பினும் இது குறித்து எஸ்வி சேகர் தரப்பில் இருந்து எதுவும் மறுபதிவு வராமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.