24 special

எங்கங்க சின்னவரு...? அலறும் இணையம்...

Tamilnadu,chennai rain
Tamilnadu,chennai rain

தமிழகத்தில் கடந்த மூன்று தினங்களாக கடலோர மாவட்டங்களில் பெருமளவு மழை பெய்து வருகிறது. குறிப்பாக கூற வேண்டும் என்றால் கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் பருவமழை வெளுத்து வாங்குகிறது, இலங்கையை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும் வங்க கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகவும் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது. 


குறிப்பாக கூற வேண்டும் என்றால் சென்னை, கடலூர், விழுப்புரம், பாண்டிச்சேரி, காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் கடலோரப் பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. அவ்வப்போது வெயில் அடித்தாலும் பல இடங்களில் மழை பெய்வது விடவில்லை. 

இந்த நிலையில் தலைநகர் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அதிக அளவு மழை பெய்துள்ளது, இன்னும் குறிப்பாக கூற வேண்டும் என்றால் சென்னையின் பிரதான பகுதிகளில் மழை நீர் தேங்கி அங்கு மழைநீர் வடிகால்கள் முறையாக பராமரிக்கப்படாததால் தண்ணீர் தேங்கி செல்வதற்கு வழியே இல்லை என்பது போன்ற பல இன்னல்களை மக்கள் சந்தித்து வருவது செய்திகளாக வெளி வருகிறது. 

மேலும் முதல்வரின் தொகுதியான கொளத்தூர், டி.நகர், கோடம்பாக்கம் போன்ற இடங்களில் மழை நீர் தேங்குவது வடியவில்லை என மக்கள் குறைபட்டுக் கொண்டு வருகின்றனர். மேலும் தமிழகத்தில் மழை நீர் வடிகால் பணிகளுக்கு நான்காயிரம் கோடி ரூபாயை அரசு ஒதுக்கியது எங்கே அந்த 4000 கோடி ரூபாய் எனவும் இணையத்தில் தேசிய அளவில் ஹேஷ்டேக் செய்து கேள்வி எழுப்பி வருகின்றனர் இணையவாசிகள்.

இந்த நிலையில் மழை நீர் நிவாரண பணிகளை பார்வையிடமும் மழைநீர் நிவாரண பணிகள் எந்த அளவிற்கு நடக்கிறது எனவும் உதயநிதி ஏன் பார்க்க வரவில்லை என எதிர்ப்பு கிளம்பி உள்ளது. கடந்த ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பொழுது ரெயின் கோட் போட்டுக்கொண்டு மழையில் பேண்டை மடித்து விட்டு கொண்டு உதயநிதி இறங்கி ஆய்வு செய்தார். 

மழை பற்றிய சமூக வலைதளத்தில் எல்லாம் கேள்வி எழுப்பி வந்தார், வெள்ளம் சூழ்ந்தது என்ன செய்யப் போகிறீர்கள்? என ஆனால் தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும் போது அதாவது கிட்டத்தட்ட திமுகவின் முக்கிய அமைச்சராக இருக்கும் பொழுது, சேப்பாக்கம் தொகுதியில் எம்எல்ஏவாக இருக்கும் பொழுது, ஏன் துணை முதல்வர் ரேஞ்சில் இருக்குமா உதயநிதி ஸ்டாலின் ஏன் இந்த முறை மழை நிவாரண பணிகளை பார்வையிட வரவில்லை என கேள்வி எழுந்துள்ளது. 

முதல்வர் ஸ்டாலினுக்கு ஆவது வயதாகிவிட்டது அவர் உடல்நலையை காரணம் காட்டி வரவில்லை எனலாம் ஆனால் உதயநிதிக்கு என்ன பிரச்சனை எனவும் இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் சவுக்கு சங்கர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி கூறும்போது 'சினிமா நிகழ்ச்சி என்றால் உதயநிதி இந்நேரம் சென்று நின்று இருப்பார். ஆனால் மழை நிவாரணப்பணிகளை ஏன் பார்வையிட வரவில்லை? இந்த நிலையில் உங்களுக்கு துணை முதல்வர் பதவி அவசியமா? ஏதாவது சினிமா நிகழ்ச்சி, ஆடியோ நிகழ்ச்சி என்றால் முதல் ஆளாக போய் நிற்க வேண்டியது, ஆனால் மழைநீர் வடிகால் பணிகளை வந்து நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம் பார்வையிட்டால் அதிகாரிகள் பயந்து வேலை செய்வார்கள். ஆனால் அவர்களும் பயந்து வேலை செய்யவில்லை ஏன் இப்படி இருக்கிறீர்கள்? என கேள்வி எழுப்பி உள்ளார். இந்த இந்த விவகாரம் தற்பொழுது இணையத்தில் திமுகவிற்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.