24 special

அதிமுக எடப்பாடி அணிக்கு சூசாகமாக பதிலடி "கொடுத்த அண்ணாமலை":..! வரலாம் வரலாம் வா "150" !

Kp munusamy and annamalai
Kp munusamy and annamalai

எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அடுத்து அமைவது எடப்பாடி பழனிசாமி ஆட்சிதான் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்து வருகின்றனர் அதிமுகவை சேர்ந்த கே.பி.முனுசாமி சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர் சந்திப்பில் திமுகவும் அதிமுகவும் பங்காளிகள் தமிழகத்தில் மாறி மாறி நாங்கள்தான் ஆட்சிக்கு வருவோம் வேறு சிலர் பேசுவது நடக்காது என சூசகமாக பாஜகவை விமர்சனம் செய்தார். இந்நிலையில் அதே பாணியில் பதிலடி கொடுத்துள்ளார் அண்ணாமலை.


இன்றைய பாஜக உண்ணாவிரதம் ஆர்ப்பாட்டம் மாநிலம் முழுவதும் நடைபெற்றது அதில் பேசிய அண்ணாமலை, இந்தியா முழுவதும் பா.ஜவை எதிர்க்க கூடிய கட்சிகள் எதுவும் இல்லாமல் ஒவ்வொரு மாநிலத்திலும் வளர்ந்து வருகிறது. பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் கூட பெயருக்காக ஒரு எதிர்க்கட்சி இருக்கிறது. அதுவும், பா.ஜ.க வின் ஆட்சியை பார்த்து கரைந்துவிடுகிறது. இந்த நிலை தமிழகத்திற்கும் வருவதற்கு வெகுதூரம் இல்லை.

தமிழகத்தில் காங்கிரசும், திமுக.,வும் இருப்பது போல, மஹாராஷ்டிராவில் கொள்கைரீதியாக தொடர்பு இல்லாத சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது. ஆனால் தற்போது வெறும் 13 எம்எல்ஏ.,க்களை கொண்ட கட்சி தலைவராக உத்தவ் தாக்கரே உள்ளார். அதேநிலை திமுக.,விற்கும் வரும்.

உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரேவை அமைச்சரவைக்குள் கொண்டு வந்தனர். இதனால் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட எம்எல்ஏ.,க்கள் வெளியேறினர். அதேபோல், தமிழகத்தில் ஸ்டாலின் மகன் உதயநிதியை அமைச்சரவைக்குள் கொண்டுவர முயற்சிக்கின்றனர். இங்கேயும் ஒரு ஏக்நாத் ஷிண்டே வெளியேறுவார். திமுக அதிகமாக பேசுவது சமூக நீதி.

இந்திய அரசியலமைப்பு சட்டம் யாருடைய கையில் இருக்கிறதோ அவரை காணும்போது இந்த நாட்டில் சமூக நீதி இருக்கிறதா இல்லையா என்பது தெரியும். அரசியலமைப்பு சட்டத்தின் பாதுகாவலராக உள்ள ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கு பா.ஜ.,கவிற்கு மூன்று முறை வாய்ப்பு கிடைத்தது.ஜனாதிபதி வேட்பாளரை கூட கண்டுப்பிடிக்க முடியாமல் தவித்து வரும் எதிர்க்கட்சிகள், எந்த தைரியத்தை 2024ல் ஆட்சிக்கு வருவோம் என கூறிவருகின்றன?.

தமிழகத்தில் பா.ஜக ., எதிர்ப்பது பெரும் எதிரிகளை. பணத்தை கையில் வைத்துக்கொண்டு ஜனநாயகத்தை விலைப்பேச முடியும் என நினைக்கும் கட்சிகள் இருக்கும் தமிழகத்தில் 25 எம்.பி.,களை கொண்டு வருவோம் என பா.ஜ.க களத்தில் இறங்கியுள்ளது. 25 எம்.பி.,க்கள் வந்தால்தான் 150 எம்எல்ஏ.,க்களுடன் 2026ல் பா.ஜ., ஆட்சி அமைக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

தமிழகத்தில் பாஜக எதிர்ப்பது பெரும் எதிரிகளை என்று அண்ணாமலை தெரிவித்து இருப்பது எடப்பாடி தரப்பையும் சேர்த்து தான் என்று கூறப்படுகிறது அத்துடன் 2026 தேர்தலில் 150 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறவேண்டும் என்பதன் மூலம் நாங்கள்தான் அடுத்து ஆட்சி அமைப்போம் என தெளிவாக தெரிவித்து இருக்கிறார் அண்ணாமலை என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.