24 special

ஸ்மிருதி இராணியிடம் வாங்கிய பெருத்த அடியால் நாடாளுமன்றத்தில் பதுங்கி ஓடிவந்த ஆ.ராசா...!

A rasa ,shrumithi rani
A rasa ,shrumithi rani

கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு பிரிவினர்களுக்கு இடையே கலவரம் ஏற்பட்டு அந்த கலவரத்தின் ஒரு சம்பவமாக இரண்டு பெண்கள் நிர்வாணமாக மிகவும் துன்புறுத்தப்பட்ட நிலையில் அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து இந்த சம்பவம் மணிப்பூர் மாநிலத்தில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் எதிரொலிக்க, பல தரப்பிடமிருந்து பல எதிர்ப்புகள் கிளம்பியது. மேலும் இந்த சர்ச்சையை காரணமாக வைத்து பல கட்சியினரும் தங்களுக்கு ஏற்ற வகையில் அரசியல் செய்து வந்தனர். பல போராட்டங்கள் பல ஆர்ப்பாட்டங்கள் ஏன் ஏதாவது கேள்வி கேட்டால் கூட அதற்கு இந்த விவகாரத்தை கூறி சமாளித்து விடுவதை தனது வழக்கமாக சிலர் கொண்டு வந்தனர். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு பாஜக தலைவர்களும் பதில் அளிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 


இதற்கிடையில் நாடாளுமன்ற அவை இந்த விவகாரம் தொடர்பாக முழுமையாக நடைபெறாமல் நாடாளுமன்ற அவை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டே வந்தது. இந்த நிலையில் ஆளும் அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்றும் அது குறித்த விவாதம் கடந்த மூன்று நாட்களாக நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வாதத்தில் நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சியின் எம்பியாக ராகுல் காந்தி பேசும் பொழுது மத்திய அரசையும் பாஜக தலைவரையும் கடுமையாக விமர்சித்தார்.  

ராகுல் காந்தியின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, மணிப்பூரை பற்றி பேசும் நீங்கள் தமிழ்நாட்டைப் பற்றி சற்று யோசித்துப் பாருங்கள் பாஜகவை பற்றி பேசும் முன்பு உங்கள் கூட்டணியில் இருப்பவர்களை பற்றி பேசுங்கள் மேலும் ஊழலை பற்றி பேசும் பொழுது உங்கள் கூட்டணியிலே ஊழலுக்கு பெயர் போன திமுகவை பற்றி நினைத்துப் பாருங்கள் இந்தியாவில் ஊழலை அறிமுகம் செய்த கட்சியே நீங்கள் தான்! ஊழல்வாதிகளையும் ஊழலையும் கண்டுபிடித்தவர்கள் இவர்கள் என்று ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்ததால் திமுகவைச் சேர்ந்த எம்பி களும் ஸ்மிருதி ராணி மீது கோபமடைந்தனர். 

மத்திய அமைச்சரின் இந்த விமர்சனத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல் திமுகவைச் சேர்ந்த நீலகிரி எம் பி ஆ ராசா, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தான் உச்ச நீதிமன்றமும் இருக்கிறதா? நாட்டில் இருக்கும் ஒவ்வொரு நீதிமன்றங்களையும் பாஜக அச்சுறுத்தி தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதா! மேலும் ஸ்மிருதி ராணி, கைது செய்யப்படுவீர் என்று என்னை மிரட்டல் விடுகிறார் என குற்றம் சாடியது நாடாளுமன்ற சூழலை பெரும் பரபரப்பாகியது. ஸ்மிருதி ராணியின் கருத்திற்கு எதிர்வாதம் வைக்க முடியாமல் ஆ ராசா இப்படி ஒரு குற்றசாட்டை சுமத்தியது பெரும் பரபரப்பானது. 

அதுமட்டுமில்லாமல் ஸ்மிருதி ராணி பேசியதும் பதில் கொடுக்க முடியாமல் ஆ.ராசா பதுங்கியதும் பின்னனர் நேற்று நடந்த காரசார விவாதத்தில் ஆ.ராசா பாதியில் எழுந்து ஓடிவந்ததும் டெல்லி வட்டாரங்களில் நகைப்புக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மேடைக்கு மேடை பெரிதாக பேசும் ஆ.ராசா நாடாளுமன்றத்தில் ஸ்மிருதி ராணி கேள்விக்கு பதிலளிக்கமுடியாமல், கூட்டத்தை முழுமையாக பூர்த்தி செய்யாமல் நிர்மலா சீதாராமன் கேள்விக்கு பதிலும் அளிக்க முடியாமல் ஓடி வந்தது குறித்து அரசியல் பார்வையாளர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.மேலும் நிர்மலா சீதாராமனின் சிலப்பதிகாரம் குறித்த விளக்கத்திற்கு கப்சுப் என ஆ.ராசா அடங்கிப்போனதும் பேசப்படுகிறது.