24 special

விடாது இறங்கி அடிக்கும் அமலாக்கத்துறை....! வசமாக சிக்கித் தவிக்கும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி...!

Ponmudi, enforcement
Ponmudi, enforcement

அமலாக்கத்துறை தொடர்ந்து திமுகவில் உள்ள முக்கிய அமைச்சர்களை குறிவைத்து ரெய்டு மேற்கொண்டு வரும் நிலையில் அந்த சோதனையில் செந்தில் பாலாஜியை தொடர்ந்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அமலாக்கத் துறையின் வலையில் வசமாக சிக்கியது குறிப்பிடத்தக்கது. 


மேலும் அமைச்சர் பொன்முடி மீது நில அபகரிப்பு வழக்கு மற்றும் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்ப்பு ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டிருந்தது. 1906 முதல் 2001 வரை போக்குவரத்து துறையில் அமைச்சராக இருந்த பொன்முடி அரசுக்கு சொந்தமான 3360 சதுர அடி நிலத்தை போலி ஆவணங்களை தயாரித்து அவரது உறவினர் பெயரில் பதிவு செய்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் இந்த வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் இந்த வழக்கிலிருந்து அமைச்சர் பொன்முடி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு விடுவிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இல்லத்தில் அமலாக்க துறையின் சோதனை நடந்தது அமைச்சர் பொன்முடி அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்தது மட்டுமல்லாமல் செம்மண் குவாரியில் மோசடி செய்து அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தியதாக விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு தொடர்ந்ததை அடிப்படையாகக் கொண்டு அமலாக்க துறையினர் அமைச்சர் பொன்முடி இல்லத்தில் சோதனை நடத்திய போது பல அதிர வைக்கும் ஆவணங்களும் கோப்புகளும் கைப்பற்றியதுடன் அவரை நேரில் ஆஜராகி விசாரணையும் நடத்தி வந்தனர் இதனைத் தொடர்ந்து அமைச்சர் பொன்முடியின் மகனான கௌதம சிகாமணி வெளிநாடுகளில் அதிக பணத்தை முதலீடு செய்ததாக அவரது வீட்டிலும் அமலாக்க துறையின் சோதனை தொடர்ந்த நிலையில் பல சொத்துக்களை அமலாக்கத் துறையினர் கைப்பற்றியது மட்டுமில்லாமல் அமலாக்க  துறை சோதனையை தொடர்ந்த சில தினங்களுக்கு முன்புதான் அமைச்சர் பொன்முடி அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார் என்ற செய்தியும் வெளிவந்தது

இவ்வாறு அமைச்சர் பொன்முடி தொடர்ந்து இரண்டு வழக்குகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். அதாவது நில அபகரிப்பு வழக்கு மற்றும் 2006 ஆம் ஆண்டு அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதிவு செய்த நிலையில் இந்த வழக்கு  வேலூர் நீதிமன்றத்தில்   நீதிபதி வசந்தலீலா தலைமையில்  நடைபெற்ற போது போதிய ஆதாரங்கள் இல்லை என்றும் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி மீது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கபடவில்லை என இந்த வழக்கை தள்ளுபடி செய்து அவர்கள் இருவரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து தான் அமலாக்கத்துறை அமைச்சர் பொன்முடி தொடர்புடைய அனைத்து இடங்களிலும் சோதனையை நடத்தியது அதாவது அமைச்சர் பொன்முடியின் இல்லம் அறக்கட்டளை மருத்துவமனை கல்லூரிகள் உட்பட அனைத்து இடங்களையும் சுற்றி வளைத்தது. இந்நிலையில் அமைச்சர் பொன்முடி இரண்டு முக்கிய வழக்குகளில் இருந்து போதிய சாட்சிகள் இல்லை என விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் குற்ற பிரிவு போலீசார் ஏன் பொன்முடிக்கு எதிராக மேல்முறையீட்டு மனுக்களை தொடர்வதில் ஆர்வம் காட்டவில்லை என கேள்வியை எழுப்பியதுடன் தானாகவே முன்வந்து அமைச்சர் பொன்முடிக்கு எதிராக மேல்முறையீட்டு மனுவை பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இவ்வாறு அமலாக்க துறையின் சோதனையை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் அமைச்சர் பொன்முடியை விசாரணைக்கு அழைத்திருப்பது அமலாக்கத்துறை பொன்முடியின் வழக்கை முடிக்காமல் விடமாட்டார்கள் என தெளிவாக காட்டுகிறது. இவ்வாறு திமுகவின் முக்கிய அமைச்சரான உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கு அடிக்கு மேல் அடி விழுந்து கொண்டிருப்பதால் அமலாக்கத்துறை வசம் சிக்கி எப்படி வெளியே வருவது என்று தெரியாமல் தவித்து வருகிறார் என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது