கொரோனாவை காரணம் காட்டி பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு, பா.ஜ.,வினர், ஹிந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.மாற்று மதத்தினரின் பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் முதல்வர் ஸ்டாலின், விநாயகர் சதுர்த்தி விழாவை விடுமுறை தின வாழ்த்து என்கிறார்.
எனவே பா.ஜ.க , வினர் அவருக்கு 10 லட்சம் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கடிதங்களை அனுப்ப வேண்டும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார், அதன்படி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அஞ்சல் அட்டை மூலம் முதல்வர் அலுவலகம், வீட்டு முகவரி என கடிதங்கள் குவிந்து வருகின்றன.
இந்த சூழலில் பலரும் பல்வேறு கருத்துக்களை முன்னிறுத்தி கடிதம் எழுதி வரும் நிலையில் வாழ்த்து அட்டையில் அண்ணாமலை என்ன கருத்துக்களை எழுத போகிறார் என்ற கேள்வி எழுந்தது, இந்நிலையில் இன்று அண்ணாமலை முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றிணை எழுதியுள்ளார்.
அதில் ‘பாரதிய ஜனதா கட்சி சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி அல்ல..இளைஞர்களே இதை தமிழக மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்’- டாக்டர் கலைஞர் அவர்கள் பேசியது 23.06.99 அன்று முரசொலி நாளிதழில் படத்துடன்.முத்தமிழ் அறிஞரின் புதல்வருக்கு, தமிழக முதல்வருக்கு இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்! என குறிப்பிட்டுள்ளார்.
அதாவது பாஜக சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் பேசிவருவதை அவரது தந்தை கருணாநிதி சொல்லிய தகவல்களை ஸ்டாலினுக்கு நினைவுப்படுத்தி அஞ்சல் அட்டையில் விநாயகர் ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது வாழ்த்தா வஞ்சக புகழ்ச்சியா என தெரியவில்லை என நெட்டிசன்கள் கிண்டல் அடிக்க பாஜகவுடன் திமுக கூட்டணி அமைத்தது என்பதையும் தற்போதைய இளைஞர்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது என பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
தமிழக முதல்வர் @mkstalin னுக்கு பாஜக மாநில தலைவர் @annamalai_k கடிதம் pic.twitter.com/NJWEaAfWTw
— TNNEWS24Air (@tnnews24air) September 9, 2021