
பஹல்காம் தீவிரவாத தாக்குதால் குறித்து பெரும்பாலான தமிழக நடிகர்கள் யாரும் இதுவரை வாய் திறக்கவில்லை ஜாதி, மொழி, இனவாதம் பேசி அதிக அறிவாளிகள் போல பொங்கி எழுந்து, கருத்துகளை கக்கியும், பாஜ, அதிமுக கட்சிகளுக்கு எதிராக வேண்டுமென்றே விமர்சனங்களை செய்தும், இந்தியாவுக்கு மதத்திற்கு எதிரான கருத்துகளை கூறியும் சமூக வலைதளங்களை சூடுபிடிக்க வைத்த சினிமா நடிகர்கள், இரங்கல் கூட தெரிவிக்காமல் கள்ள மவுனம் காத்து வரும் நிலையில் அஜித் பஹல்காம் தீவிரவாத தாக்குதல் குறித்து பேசியுள்ளது கடும் வைரலாகி வருகிறது.குறிப்பாக ராணுவம் குறித்து இராணுவ வீரர்களின் தியாகங்களுக்கு சல்யூட். நாம் நிம்மதியாக தூங்க அவர்கள் கடினமாக உழைக்கிறார்கள். அவர்கள் நமது எல்லையை பாதுகாக்க அயராது உழைக்கிறார்கள். குறைந்தபட்சம் அவர்களின் உழைப்புக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என பேசியது வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் 2025ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், அஜித்குமார் பத்ம பூஷண் விருதை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.பத்மபூஷன் விருது பெற்ற நடிகர் அஜித் குமாருக்கு ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆனால் இதுவரை தமிழக முதல்வர் வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை.
இதனைத்தொடர்ந்து, ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், ” பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள நடிகர் அஜித், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்காக பிரார்த்தனை செய்வதாக கூறியிருக்கிறார்.பஹல்காமில் கடந்த 22-ஆம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு பேர் உட்பட 4 தீவிரவாதிகள் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, ராணுவம், துணை ராணுவப் படை மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல் துறையினர் இணைந்து தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் டெல்லியில் தேசிய விருது வென்ற பின் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த நடிகர் அஜித் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தார்.அஜித் தனது பேட்டியில், “இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்கக்கூடாது என்று நான் பிரார்த்திக்கிறேன். அரசாங்கம் தங்களால் முடிந்ததைச் செய்கிறத. நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் அனுதாபம் கொள்ளக் கற்றுக்கொள்ள வேண்டும்.
நமக்குள் அனைத்து வேறுபாடுகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு அமைதியான சமூகமாக வாழ வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன்.இன்று, ஆயுதப் படைகளைச் சேர்ந்த பலரை நான் சந்தித்தேன். அவர்களின் தியாகங்களுக்கு சல்யூட். நாம் நிம்மதியாக தூங்க அவர்கள் கடினமாக உழைக்கிறார்கள். அவர்கள் நமது எல்லையை பாதுகாக்க அயராது உழைக்கிறார்கள். குறைந்தபட்சம் அவர்களின் உழைப்புக்கு மரியாதை கொடுக்கும் விதமாக, நம் நாட்டிற்குள் நாம் ஒருவருக்கொருவர் மதிக்கவும், ஒவ்வொரு மதத்தையும், ஒவ்வொரு சாதியையும் மதிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன். குறைந்தபட்சம் நமக்குள் சண்டையிட வேண்டாம். அமைதியான சமூகமாக வாழ்வோம்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மத்திய அரசுமற்றும் இந்திய ராணுவத்தினரை குறித்து சில அற்ப அரசியல் வாதிகள் திமுகவுக்கு ஜால்றா அடிக்கும் கூட்டங்கள் தவறாக பேசி வரும் நிலையில் நடிகர் அஜித் மத்திய அரசு குறித்தும் இந்திய ராணுவத்தை குறித்தும் நாட்டு பற்றுடன் நடக்கவேண்டும் என கூறியுள்ளது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது . இந்த நிலையில் அரசியலில் நடிகர் விஜய் பூத் நிர்வாகிகள் கூட்டத்தில் ஒரு இறந்தவர்க்ளுக்கு ஒரு அஞ்சலி கூட செலுத்தவில்லை , அதை பற்றியும் பேசவில்லை அஜித்தை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் விஜய் என சமூக வலைதளத்தில் பேச ஆரம்பித்துள்ளார்கள்