24 special

அண்ணாமலைக்கு பயந்து அமைச்சர் மனோ தங்கராஜ் எடுத்த அதிரடி முடிவு....!

Annamalai,mano thangaraj
Annamalai,mano thangaraj

மக்களுக்காக கொண்டு வரப்படும் நலத்திட்டங்கள் கட்டிடங்கள் அல்லது வேறு ஏதேனும் சேவைகள் இவை அனைத்து மக்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் அதிகாரிகளும் அல்லது வேறு அரசு ஊழியர்களும் அதனை பயன்படுத்த மாட்டார்கள் இது என்ன நியாயம் என்பது போன்ற விவாதங்கள் மற்றும் கருத்துக்கள் இருந்து வந்த சமயத்தில் தமிழகத்தில் ஆவின் பொருள்களின் விலை அதிகரித்ததை அடுத்து ஆவின் நிறுவன தரப்பில் நஷ்டம் என கணக்குகள் வெளியிடப்பட்டது. 


இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்காக ஒவ்வொரு முறை அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் இனிப்புகள் தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர் விடப்பட்டு பெறப்படுவதன் மூலம் கொடுக்கப்படும். மேலும் கடந்த ஆண்டு நடைபெற்ற டெண்டரில் அரசு குறிப்பிடும் இந்த டெண்டரில் பங்கு பெறுவதற்கு குறைந்தபட்சம் 100 கோடி டர்ன் ஓவரை ஒரு ஆண்டிற்கு ஒரு நிறுவனம் செய்திருக்க வேண்டும் என்ற வரைமுறை விதிக்கப்பட்டது. இந்த விதிமுறையால் சிறிய நிறுவனங்கள் பங்கு பெற முடியாமல் மிகப்பெரிய நிறுவனங்கள் மட்டுமே பங்கு பெரும் சூழ்நிலை நிலவியது இதனை எதிர்த்து தனது எதிர்ப்பையும் விமர்சனத்தையும் முன் வைத்தார். 

தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை. அதுமட்டுமில்லாமல் அரசிடமே ஒரு ஆவின் நிறுவனம் அதாவது இனிப்புகளை தயாரிக்க கூடிய ஒரு நிறுவனம் இருக்கும் பொழுது எதற்காக வெளியில் இருந்து டென்டர்கள் எடுக்கப்பட்டு அதற்கு விதிமுறைகள் வகுக்கப்பட்டு தனியாரிடம் இனிப்புகளை வாங்க வேண்டும் ஆவின் நிறுவனத்திடமே இனிப்புகளை வாங்கலாமே என்று முன் வைத்த ஆலோசனையின் அடிப்படையில், தமிழக அரசு ஆவின் நிறுவனத்திடமே இனிப்புகள் பெறப்பட்டு தீபாவளி பண்டிகைக்காக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்ற அறிவிப்பை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்டார். 

அதற்கு முன்னதாக அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் இப்படி விடப்பட்ட தனியார் டெண்டர்களால் நடைபெற்ற ஊழல் ஒன்றையும் தெளிவாக எடுத்துரைத்தது தமிழக அரசுக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது. 

இந்த நிலையில் இந்த வருடம் தீபாவளிக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், கடந்த ஆண்டு போல் அண்ணாமலை இந்த ஆண்டும் இனிப்பு தொடர்பாக ஏதேனும் கேள்வி எழுப்பி விடுவாரோ என்று அதற்கு முன்பாகவே நாம் இது தொடர்பான செயலில் இறங்கி விட வேண்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் அவசர அவசரமாக ஒரு கூட்டத்தைக் கூட்டி ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

தர்மபுரி மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆவின் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் பொருட்களை தரம் மற்றும் சுவை மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளதால் அதன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் எனவும், கடந்தாண்டு தீபாவளியை விட நடப்பாண்டில் நிகழவுள்ள தீபாவளியில் 25 சதவீதம் ஆவின் இனிப்புகளுக்கு தேவை அதிகரிக்கும் எனவும் அதனால் அதற்கான தயாரிப்பு பணிகளில் ஆவின் நிறுவனத்தின் ஊழியர்கள் ஈடுபட வேண்டும் என்றும் அதோடு பால் உற்பத்தியும் அதிக படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். 

இதன் பின்னணியை விசாரித்த பொழுது இன்னும் இரண்டு மாதங்களில் தீபாவளி வர உள்ளதால் கடந்த ஆண்டு இதே மாதத்தில் அண்ணாமலை ஒரு அதிரடி ஊழலை தெரிவித்து நமக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தினார் அதேபோன்ற நிகழ்வு இந்த முறை நடக்கக்கூடாது இதற்கு முன்பாகவே நாம் நடவடிக்கைகளில் இறங்கி விட வேண்டும் என்றும் அண்ணாமலை அறிவிப்பை விட்ட பிறகு நாம் அதற்கான நடவடிக்கைகளை எடுத்தால் அரசியல் ரீதியாக அது மேலும் நமக்கு பின்னடைவை தான் ஏற்படுத்தும் எனவே இந்த ஆண்டு அண்ணாமலை கூறுவதற்கு முன்பாக நாம் செயலில் இறங்கி விட வேண்டும் என திமுக அமைச்சர் மனோ தங்கராஜ் தரப்பு முடிவு எடுத்து செயலில் இறங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.