24 special

ஆளுநர் குறித்து பேசியதற்கு உதயநிதியை தேடி வரும் ஆப்பு! கிளம்பிய பூதம்...!

Udhayanidhi,rnravi
Udhayanidhi,rnravi

ஆட்சியில் அமருவதற்கு முன்பாக நாங்கள் ஆட்சி அமைத்தால் நீட் தேர்வை எப்படி தமிழகத்திலிருந்து தூக்க வேண்டும் என்ற ரகசியம் எங்களுக்கு தெரியும் ஒரே கையெழுத்தில் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளித்து விடுவோம் என்று கூறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தற்போது ஒரு உதயநிதியால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது மக்களின் துணை வேண்டும் அதற்காக நாங்கள் போராட்டத்தை அதுவும் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொள்ள உள்ளோம் என்று தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


முன்னதாக தமிழக ஆளுநருக்கு எதிராகவும் மத்திய பாஜகவிற்கு எதிராகவும் கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி தமிழக முழுவதும் உண்ணாவிரதப் போராட்டத்தை திமுக நடத்தியது. இந்த உண்ணாவிரத போராட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் தலைமை ஏற்று கலந்து கொண்டார்,  உண்ணாவிரத போராட்டத்தின் இறுதியாக மேடையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர் என் ரவி பதவி விலக வேண்டும் என்றும் நீங்கள் சொல்வதை நாங்கள் கேட்கிறோம் ஆனால் அதற்கு முன்பாக நீங்களே ஒரு தொகுதியை தேர்ந்தெடுங்கள் அதில் உங்களுக்கு எதிராக எங்கள் கட்சியின் கடை கோடி தொண்டரை தேர்தலில் நிறுத்தி வெற்றியடைய செய்வோம் ஒருவேளை நீங்கள் தேர்தலில் வெற்றி பெற்றால் நீங்கள் கூறுவதை கேட்டு நீட்டிற்கு ஆதரவாக நான் கருத்துக்களை முன் வைக்கிறேன் என்று உதயநிதி கூறியிருந்தார். 

ஒருவேளை அந்த தேர்தலுக்காக நீங்கள் மக்களை சந்தித்து பேசினால் மக்கள் உங்களை செருப்பால் அடிப்பார்கள் என்று தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பேசி இருந்தார் அமைச்சர் உதயநிதி. மேலும் நீட் தேர்வுக்கு எதிராக எந்த ஒரு மசோதாவையும் நான் அனுமதிக்க மாட்டேன் என்று ஆளுநர் கூறுவதற்கு எவ்வளவு தைரியம் மற்றும் துணிச்சல் திமிரு இருக்க வேண்டும் நீங்கள் யார் இதை கூறுவதற்கு? உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது நீங்கள் என்ன மக்களின் பிரதிநிதியா நீங்கள் வெறும் ஒரு போஸ்ட்மேன் மட்டும்தான் என்று ஆளுநரை வன்மையாக விமர்சனம் செய்தார். 

இந்த சம்பவம் நடைபெற்ற பொழுது ஆளுநர் டெல்லி சென்றது அரசியல் வட்டாரத்தில் ஒரு பதட்டத்தை ஏற்படுத்தியது. அதோடு இப்படி நீட் தேர்விற்கு எதிராக திமுக தமிழகத்தின் மேற்கொண்ட உண்ணாவிரதத்தை பற்றியும் அங்கு முன்வைக்கப்பட்ட விமர்சனங்களை பற்றியும் டெல்லி தலைமையிடம் ஆளுநர் எடுத்துரைத்ததாகவும் ஆளுநர் டெல்லியில் இருந்து திரும்பியவுடன் இதற்கான விளைவுகள் தெரியவரும் என்றும் அரசியல் விமர்சகர்களால் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது சென்னை கொண்டித்தோப்பு பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை விமர்சித்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

அதுவும் இவர் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர். திமுக சார்பில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் தமிழக ஆளுநருக்கு எதிராக தமிழக மக்களை தூண்டிவிடும் வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருக்கிறார், மக்களின் பிரதிநிதியாக இருந்து கொண்டு ஒரு அமைச்சர் இப்படி மக்களின் உணர்வை தூண்டும் வகையில் பேசுவது மிகவும் தவறானது கண்டிக்கத் தகுந்தது ஆதலால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் அளித்த புகாரில் வழக்கறிஞர் ராமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு முறைப்படி விசாரிக்கப்பட்டு அடுத்தடுத்த கட்டங்களுக்கு சென்றால் உதயநிதியின் அமைச்சர் பதவி பறிக்கப்படும் வரை செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என சட்ட வல்லுநர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.