தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக தலைவரும் ,முதல்வருமான மு க ஸ்டாலின் பள்ளி சிறுவர்களுக்கான காலை சிறப்பு சிற்றுண்டி திட்டத்தை கடந்த செப்டம்பர் 15 ம் தேதி அன்று அறிமுகப்படுத்தினார்.
மேலும் நேற்று நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் உள்ள அரசு பள்ளியில் சிறுவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் மாணவர்களுக்கு உணவு வழங்கியதுடன் அவர்களுடன் அமர்ந்து முதலமைச்சரின் மு க ஸ்டாலின் மற்றும் அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பகிர்ந்து கொண்டது தற்போது சமூக ஊடகங்களில் வீடியோக்களாக பரவி வருகிறது மேலும் இந்த முதல்வரின் காலை உணவு திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு தினமும் ஒரு வகை உணவு வழங்கப்படுவதாக செய்திகள் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியது முதல் திமுகவினர் அனைவரும் இந்த திட்டத்தை பற்றி பெரிதாக பேசி வருகின்றனர்
மேலும் இந்தத் திட்டத்தின் முதல் நாள் தொடக்கமாக சர்க்கரை பொங்கல் காய்கறிகளுடன் கூடிய கிச்சடி போன்ற உணவு வகைகள் மாணவர்களுக்கு பரிமாறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன நாடாளுமன்ற தேர்தல் வருவதற்கு இன்னும் சில நாட்கள் இருக்கும் நிலையில் முதல்வர் வரிசையாக இப்படித் திட்டங்களை அறிவித்து வருவது தேர்தலில் வாக்கு வங்கியை அதிகப்படுத்துவதற்கு தான் என்று ஒரு பக்கம் பரவலாக பேச்சு எழுந்து வருகிறது மேலும் முதல்வர் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியதின் காரணம் என்ன இந்த திட்டம் எப்படி உருவாக்கப்பட்டது போன்ற செய்திகளை தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் போட்டு உடைத்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் நடைபெற்ற நொய்யல் பெருவிழாவில் கலந்துகொண்டு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தமிழகத்தில் உள்ள ஆறுகள் மிகவும் மோசமடைந்த நிலையில் இருப்பதாகவும் மேலும் தமிழக ஆறுகளை பாதுகாப்பது தமிழக அரசிடம் தான் உள்ளது என்றும் முதல்வர் இதற்கான தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
மேலும் நாட்டில் நடக்கும் பல பிரச்சனைகளை மையப்படுத்தி தமிழிசை சௌந்தர்ராஜன் பேசியது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதாவது தமிழக அரசுக்கு மசோதாக்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றால் அதற்கான தகுந்த அரசியலமைப்பு சட்டத்தின் மூலம் தமிழக முதலமைச்சர் ஆளுநருடன் கலந்து ஆலசிக்க வேண்டும் அதை விட்டுவிட்டு முரசொலியில் ஆளுநருக்கு எதிராக விவாதங்களை நடத்துவது சரியல்ல என்று சுட்டிக்காட்டி பேசினார்
இதுமட்டுமில்லாமல் தமிழகத்தில் நீட் விவகாரம் குறித்து ஆளுநரை திமுக எதிர்த்து வருவதை மையப்படுத்தி ஆளுநர் மசோதாக்களை எந்த காரணத்திற்காகவும் நிறுத்தி வைத்து இருக்கலாம் அதை அனைத்தையும் உங்களிடம் தெரிவிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று திமுகவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசினார். அத்தோடு நிறுத்தி விடவில்லை அதாவது தற்போது தமிழக அரசு கொண்டுவந்துள்ள காலை உணவு திட்டம் மத்திய அரசின் கல்விக் கொள்கையில் இருந்த உணவு திட்டத்தை காப்பி அடித்து கொண்டுவரப்பட்டது தான் என்று போட்டு உடைத்தது தற்போது திமுகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இப்படி கோடிக்கணக்கில் செலவு செய்து, முதல்வரை 3 நாட்கள் டெல்டா பயணம் செல்லவைத்து, மொத்த மீடியாக்களையெல்லாம் வரவழைத்து திமுக இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியது, இதுமட்டுமில்லாமல் சமூக வலைத்தளத்தில் அதிக விளம்பரங்களை வேறு செய்தது இப்படி திமுக அரசு அமல்படுத்திய ஒரு திட்டத்தை தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் காப்பி அடித்து செய்ததாக மக்கள் மத்தியில் போட்டு உடைத்த காரணத்தினால் திமுக தரப்பு செம்ம கடுப்பில் இருந்து வருகிறது...