24 special

வாயை விட்டு சூர்யாவை வசமாக சிக்க வைத்த கமல்.. பைல்களுடன் விரையும் டெல்லி சிறப்பு குழு...

ANNAMALAI,SURYA,KAMAL
ANNAMALAI,SURYA,KAMAL

நடிகர் சூர்யாவின் அகரம் விழாவில் நடிகர்  கமல்ஹாசன் பேசியது சூர்யாவுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது .தற்போது தமிழ் திரை உலகம் யாரின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். அதிமுக ஆட்சியில் கொந்தளித்தவர்கள் எல்லாம் தற்போது அனைத்து துவாரங்களை அடைத்து கொண்டு இருக்கிறார்கள். அதிலும் மிக முக்கியமானவர் சூர்யா தான் ஜாதி, மொழி, இனவாதம் பேசி அதிக அறிவாளிகள் போல பொங்கி எழுந்து, கருத்துகளை கக்கியும், பாஜ, அதிமுக கட்சிகளுக்கு எதிராக வேண்டுமென்றே விமர்சனங்களை செய்தும், ஹிந்து மதத்திற்கு எதிரான கருத்துகளை கூறியும் சமூக வலைதளங்களை சூடுபிடிக்க வைத்த சினிமா நடிகர்கள், கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராய சாவு, லாக்கப் டெத்,  சாதி ரீதியிலான கொலைகள்.பாலியல் வன்கொடுமைகள் என எதற்குமே கண்டனம் தெரிவிக்காமல் கள்ள மவுனம் காப்பது ஏன் என்று பொது மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.


தமிழக நடிகர் சூர்யா, அவரது மனைவி நடிகை ஜோதிகா, பிரகாஷ்ராஜ், சத்யராஜ், சித்தார்த், விஜய் சேதுபதி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், விஷால், கமல் ஆகியோர் கடந்த காலங்களில் ஜாதி பிரச்னை, மொழி பிரச்னை, இனவாதம், இயற்கை பேரிடர் காலங்களில் அரசின் நடவடிக்கைகளை விமர்சித்து அறிக்கை வெளியிட்டார்கள். சபரிமலை பிரச்னை போன்ற நேரங்களில் ஹிந்து மத நம்பிக்கைகளுக்கு எதிராக பேசினார்கள். அப்பட்டமாக திமுகவுக்கு ஆதரவாக நடந்துகொண்டார்கள்.

மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கை தொடர்பாகவும் அவர் பேசும் போது, 3 வயதிலேயே 3 மொழிகள் திணிக்கப்படுகிறது. முதல் தலைமுறை மாணவர்கள் எப்படி இதனை சமாளிப்பார்கள்..ஓரிரு மொழிகளை கூடுதலாக தெரிந்து கொள்வது ஒருவரின் எதிர்காலத்திற்கு நல்லது என்ற எண்ணமே இல்லாமல் சூர்யா இப்படி ஒரு கருத்தை கூறி இருந்தார். அதுமட்டுமா, இப்போது அவர் மும்பைக்கே குடிபெயர்ந்து விட்டார். விரைவில் ஹிந்தி படங்களிலும் நடிக்க உள்ளார். மனைவி ஜோதிகா ஹிந்தியில் நடித்து வருகிறார். இவர் மட்டும் ஹிந்தி கற்கலாம், ஹிந்தியில் நடிக்கலாம், மற்றவர்கள் ஹிந்தி கற்க கூடாதா என்ன.

ஒரு விருது வழங்கும் விழாவில் ஜோதிகா பேசும் போது, கோவிலுக்காக அதிகம் காசு கொடுக்கிறீர்கள். வண்ணம் அடித்து பராமரிக்கிறீர்கள். கோவில் உண்டியலில் அவ்வளவு பணம் போடுகிறீர்கள். அதே பணத்தை தயவு செய்து பள்ளிகளுக்குக் கொடுங்கள். மருத்துவமனைகளுக்குக் கொடுங்கள் எனக்கூறி சர்ச்சையை உண்டாக்கினார்.தற்போது கோவில் கோவிலாக சுற்றி வருகிறார்கள் 

இது ஒருபுறம் என்றால் 2019ம் ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது கமல்ஹாசன் குடும்ப அரசியலுக்கு எதிராக டிவியை உடைத்தார்.. தற்போது ஒரு எம்.பி பதவிக்காக அறிவாலய வாசலில் நின்றார்.ஊழல் கூடாரத்துக்கு எதிராக தொலைக்காட்சி பெட்டியை உடைத்து வீர வசனம் பேசியவர் தற்போது சுயநலத்திற்காக ஊழல் கூடாரத்தில் இளைபாறி, அவர்களுக்காக டப்பிங் செய்து வருகிறார் கமல். 

சனாதன சங்கிலிகளை, சர்வாதிகார சங்கிலிகளை எல்லாம் நொறுக்கித் தள்ளும் ஒரே ஆயுதம் கல்விதான். இதைத் தவிர வேறு எதையும் கையில் எடுக்காதீர்கள்" என்று நடிகர் சூர்யாவின் அகரம் விழாவில் நடிகரும், கமல்ஹாசன் பேசினார் இது பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. மேலும் அகரம் பவுண்டேசன் டீட்டெய்ல் அனைத்தும் டெல்லி தலைமையிடம் உள்ளது ஸ்டூடியோ கீரின் குறித்த பைல்களும் ரெடியாக உள்ள நேரத்தில் கமல் வாயை விட்டது சூர்யா குடும்பத்திற்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது