திமுக தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருந்த பொழுது அவர்களுக்கு ஆதரவாக சூர்யா பல கேள்விகளை ஆளும் தரப்பிற்கு எதிராக எடுத்துக் கொண்டே இருந்தார். நீட் பிரச்சினைக்கு எதிராகவும் குரல் கொடுத்தார். மத்திய அரசாங்கத்தின் பள்ளிகள் தமிழ்நாட்டுக்குள் வரவே கூடாது, திட்டங்கள் எதுவும் வரக்கூடாது, அவர்கள் கூறும் பாடத்திட்டங்களை படிக்கக்கூடாது, ஹிந்தி மொழியினை எதிர்த்து குரல் கொடுப்பது போன்ற அனைத்து விதமான செயல்களிலும் ஈடுபட்டு வந்தார் நடிகர் சூர்யா. இதற்காக பல இடங்களில் போராட்டங்களும் மேற்கொண்டு வந்தனர். அதோட மட்டுமல்லாமல் அவர் நடித்த ஜெய் பீம் முதல் கொண்டு அடுத்தடுத்து சில படங்களில் சமூகத்தின் பிரச்சனைகளை சார்ந்து, அரசினை விமர்சனம் செய்து எடுக்கப்பட்ட படங்களாகவே இருந்தது. ஆனால் அதன் பிறகு 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பிறகு நடிகர் சூர்யா இது போன்ற பிரச்சனைகளில் தலையிடுவதே கிடையாது. தற்போது அவர் எங்கே இருக்கிறார் என்று கூட தெரியாத அளவிற்கு உள்ளார்.
அவரின் படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் மட்டுமே ஈடுபட்டு வருகிறார். ஹிந்தி மொழியினை எதிர்ப்பேன் என்று கூறிய சூர்யா இப்பொது தனது குடும்பத்தையே ஹிந்தி பேசும் மாநிலத்தில் குடி வைத்துள்ளார். அது மட்டுமல்லாமல் தன்னுடைய பிள்ளைகளுக்கும் ஹிந்தி மொழியினை முதன்மை மொழியாக வைத்து பள்ளியில் படிக்க வைக்கின்றார். இது போன்ற ஒரு சூழ்நிலையில் தான் தற்போது சூர்யா இருந்து வருகிறார். முதலில் எல்லாவற்றிற்கும் குரல் கொடுத்த சூர்யா தற்போது அமைதியாக இருப்பதற்கு இணைய தளங்களில் இருந்து கேள்விகள் எழுந்து கொண்டே தான் உள்ளது. பொதுவில் மக்களுக்கு நிகழும் பிரச்சனைகளில் எல்லாம் கண்டு கொள்ளாமல் இருக்கும் நடிகர்கள் எங்கே போனார்கள்?? என்று பல கேள்விகள் எழுந்து வருகிறது.
தற்போது அரசியல் களமே தேர்தல் வரப்போவதால் பிரச்சாரத்தில் அனல் பறந்து கொண்டே உள்ளது. ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற போவதால் தேர்தல் பிரச்சாரங்கள் விறுவிறுப்பாக ஒவ்வொரு பகுதிகளிலும் நடந்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கட்சிகளும் மற்ற கட்சிகள் செய்யாதவற்றையும், தங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்று குறித்த பிரச்சாரங்களையும் பல வாக்குறுதிகளையும் மக்களின் முன்பு வைத்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக திமுக செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பை சந்தித்து வருகிறது. இப்படி பல இடங்களில் எதிர்ப்பு புதிய சந்தித்துக் கொண்டு வந்திருந்த திமுக என்ன செய்வது என்று தெரியாமல் நடிகர் சூர்யாவின் உதவியை நாடி எங்கள் சார்பாக பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.
இதற்கு நடிகர் சூர்யா கோவிந்தா... சாமி நீங்களும் உங்களோட வேலையும்!! முன்னாடி பண்ண வேலைக்கு இன்று வரை விமர்சனங்கள் வந்து கொண்டே உள்ளது. அதனால்தான் நான் இப்போது அமைதியாக இருக்கேன். எந்த உதவியும் செய்ய முடியாது வேற எதுவுமே கிடையாது என்ற வகையில் திமுகவின் அழைப்பிற்கும் நடிகர் சூர்யா மறுப்பு தெரிவித்துள்ளதாக நம்பத்தகு வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளது. இதைத் தொடர்ந்து தற்போது நடிகர் சூர்யா கொடுமுடியில் உள்ள ஸ்ரீ மகுடேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனத்தை மேற்கொண்டு உள்ளார். இந்த கோவிலுக்கு வரும்போது நடிகர் சூர்யா வெள்ளை வேட்டி சட்டை அணிந்து அரசியல்வாதி போல் உடைகளை அணிந்து வந்திருக்கிறார். இதனை பார்ப்பவர்கள் மத்தியில் இவர் ஏதேனும் கட்சியில் சேர்ந்து உள்ளாரா என்று கேள்விகள் இருக்கிறது?? ஆனால் நடிகர் சூர்யாவோ திமுக அழைப்பை மறுத்துவிட்டு இப்படி கோவிலுக்கு சென்று இருப்பது திமுகவில் உள்ளவர்களுக்கும் அதிருத்தியை ஏற்படுத்தியுள்ளது என்று தகவல்கள் எழுந்து வருகிறது.