24 special

பொள்ளாச்சி பாஜக வேட்பாளர் களத்தில் சொன்ன வாக்குறுதிகள்...!

Vasantha Rajan, Stalin
Vasantha Rajan, Stalin

பொள்ளாச்சி பாரளுமன்ற தொகுதியில் திமுக, அதிமுக வேட்பாளர்களிடையே பாஜக வேட்பாளர் ஒரு படி மேலே சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து நிச்சயம் தீவி கொடுப்பதாகவும், மேலும் பிரச்சாரத்தின் போது மக்களிடத்தில் வாக்குறுதிகளை கொடுத்து வெகுவாக மக்களிடம் கவனம் பெற்று வருகிறார் பாஜக வேட்பாளர் வசந்தராஜன்.


கொங்கு மண்டலத்தின் ஒரு பகுதியான பொள்ளாச்சியில் தொகுதியில் அதிமுக, திமுக இதுவரை நடந்த தேர்தலில் களம் கண்டு வந்தது. இந்நிலையில் பாஜக தலைமயிலான கூட்டணியில் பாஜக மாவட்ட தலைவர் வசந்தராஜன் அவர்களுக்கு சீட் கொடுக்கப்பட்டது. ஆரமப்பதில் அங்கு அதிமுக வேட்பாளருக்கும், திமுக வேட்பாளருக்கும் வாய்ப்பு இருப்பதாக தகவல் வந்த நிலையில், தற்போது பாஜக வேட்பாளர் பக்கம் ஊடகத்தின் கவனம் திரும்பியுள்ளது. பொள்ளாச்சி தொகுதியை பொறுத்தவரை பாஜகவுக்கே களம் சாதகமாக உள்ளதாக தகவல் வந்த வண்ணம் உள்ளன.

பொள்ளாச்சியில் மிக பெரிய பிரச்சனையாக இருப்பது குப்பை கிடங்கு இது அந்த பகுதியின் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக அமைத்துள்ளது. இதற்காக மத்திய அமைச்சர்களை சந்தித்து அகற்ற வேண்டிய பணிகளை சித்து வந்தார். இந்த சூழ்நிலையில் அவருக்கு சீட் கொடுக்கப்பட்ட நிலையில், முதல் வாக்குறுதியாக அப்பகுதி பொதுமக்களிடம் நான் வெற்றி பெற்றதும் குப்பை கிடனாகை அகற்றுவேன் இல்லையென்றால் நான்காவது வருடம் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்வேன் என்று உத்தரவாதம் கொடுத்திருந்தார்.

அதன் தொடர்ச்சியாக மக்களிடம் பிரச்சாரத்தில் ஈடுபடும் பொழுது சாலையோர வியாபாரிகளுக்கு பிரதமர் மோடியின் சலையோர வியாபாரிகளுக்கான கடனை பெற்றுதருவதாகவும். இதுவரை திமுக தரப்பில் வெற்றி பெற்ற எம்பி பொள்ளாச்சியில் பகுதிகளுக்கு வந்து மக்களிடம் என்ன பிரச்சனை என்பதை கேட்டதில்லை வெற்றி பெற்ற பிறகு அவர் எங்கே சென்றார் என்பதும் தெரியவில்லை. அதனால் உங்கள் பகுதியை சேர்ந்தவன் நான் வெற்றி அடைந்த பிறகு இங்கு தான் இருப்பேன் எங்கும் போக மாட்டேன் நீங்கள் என்னிடம் வந்து நேரடியாக கேட்கலாம் என கூறி மக்ளைடத்தில் தீவிரமாக வாகு சேகரித்து வருகிறார்.

அது மட்டுமில்லாமல், மத்திய அரசின் தரம் வாய்ந்த மருத்துவமனையை பொள்ளாச்சி பகுதியில் அமைத்திடுவதாக வாக்குறுதிகளை கொடுத்து வருகிறார். அதேபோல் உலக தரம் வாய்ந்த கேந்த்ரியா பள்ளி அல்லது நவோதயா பள்ளிகளை அமைப்பதாகவும் வாக்குறுதி கொடுத்து வருகிறார். தென்னை விவசாயிகளுக்கு தென்னை வாரியம் அமைத்திட வழி வகுப்பதாகவும், கரும்பு விவசாயிகளுக்கு மத்திய அரசு திட்டத்தை ஏற்படுத்தி தருவதாகுவும் அந்த அந்த சங்கத்தினரிடம் கலந்துரையாடி வாக்குகளை சேகரித்து வருகிறார்.

மேலும், வால்பாறை பகுதியை சுற்றுலாதலமாக அமைக்கப்படும் என்றும் அங்குள்ள விவசாயிகளின் பயிர்களை பாதுகாத்திட வழி வகுப்பதாகவும் வாக்குறுதிகளை கொடுத்து வருகிறார் பாஜக வேட்பாளர் வசந்தராஜன். இப்படி தினமும் மக்களை சந்திக்கும்போது ஒவ்வொரு வாக்குறுதிகளை கொடுத்து வருகிறார். ஆனால், திமுக- அதிமுக வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்கிறன்றார் அது ஏதும் எடுபடவில்லையாம். கோவை தொகுதியில் அண்ணாமலை போட்டியிடுவதால் நிச்சயம் பொள்ளாச்சியில் அதன் தாக்கம் ஏற்படும் என்று அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது.