24 special

நடிகர் விஷால் நடிக்க தடை?.... சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

vishal, highcourt
vishal, highcourt

நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா புரொடக்‌ஷன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. போதிய அவகாசம் வழங்கியும் பணம் திருப்பி தராததால் நீதிமன்றம் நடிகர் விஷாலுக்கு நடிக்க தடை விதிப்பதாக கேள்வி எழுப்பியுள்ளது.நடிகர் விஷால் அவரது பிலிம் பாக்டாரியான விஷால் பிலிம் தயாரிப்பு நிறுவனத்திற்கு பைனான்சியர் அன்புச்செழியனிடம் இருப்பது ஒரு கோடியே இருபத்தொன்பது லட்சம் கடனாகப் பெற்றார், ஆனால் நடிகர் விஷால் அந்த பணத்தை திருப்பிச் செலுத்தத் தவறிவிட்டார். 


இந்த முழு பணத்தையும் லைகா புரொடக்‌ஷன் கடனுக்கு ஒப்புதல் அளித்து, முந்தைய படத்திற்கு நடிகருடன் தயாரிப்பு நிறுவனம் ஒத்துழைத்தபோது விஷால் சார்பாக பணம் செலுத்தியது. இந்த மொத்த பணத்தையும் விஷால் திருப்பி தரும் வரை விஷால் நடிக்கும் அனைத்து படங்களின் உரிமைகளை லைக்கா நிறுவனத்திற்கு தருவதாக கூறி ஒப்பந்தம் போட்டுக்கொண்டதாக தெரிகிறது.ஆனால், விஷால் எந்த படத்தையும் தரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் உரிமைகளை மீறியதாக நடிகர் விஷால் மீது சென்னை உயர் நீதி மன்றத்தில் லைக்கா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் விஷாலின் அசையும் சொத்துக்கள், அசையா சொத்துக்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. லைக்கா நிறுவனம் தயாரிப்பில் வாதம் வைத்த வழக்கறிஞர், விஷாலுக்கு 2021ம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவின்படி 15கோடியாய் இதுவரை செலுத்தவில்லை. மேலும், திரைப்படத்தின் மூலம் கிடைத்த 28 கோடி ரூபாயும் தங்களுக்கு தரவில்லை என்று குற்றச்சாட்டை முன்வைத்தார்.

தொடர்ந்து, விஷால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், படத்தில் அவர் ஒரு நடிகராக நடித்துள்ளதாகவும், விஷால் நடித்த சக்ரா படங்கள் முதல் தற்போது வரை அனைத்து படங்களும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறவில்லை இதனால் வசூல் குவியவில்லை பணத்தை திருப்பி கொடுப்பதில் தாமதம் ஏற்படுவதாக தெரிவித்தார்.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, போதிய கால அவகாசம் கொடுத்தும் விஷால் ஏன் பணம் கொடுக்க தயாராக இல்லை?. பணம் இல்லாதவர் எதற்கு தொடர்ச்சியாக படத்தில் நடிக்க வேண்டும்?, விஷால் திரைப்படத்தில் நடிக்க தடை விதிப்பதில் என்ன தவறு உள்ளது?. என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதை தொடர்ந்து இந்த வழக்கை நீதிபதி ஆஷா விசாரிப்பார் என தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.விஷாலுக்கு தொடர்ந்து நீதிமன்றம் கேள்வி எழுப்பி வரும் நிலையில் தற்போது என் இந்த பணத்தை கொடுக்க தவறி வருகிறார் என கேள்வி எழுந்துள்ளது. தற்போது நடித்த மார்க் ஆண்டனி படமும் நல்ல வரவேற்பை பெற்றும் பணத்தை கொடுக்க மறுத்து வருவது ரசிகர்களிடம் விஷால் மீது கோவம் எழுந்துள்ளது. தொடர்ச்சியாக இப்படி விஷால் செய்து வருவதால் அவருக்கு சினிமாவில் நடிக்க இடைக்கால தடை விதிக்கலாம் என்று கூறப்படுகிறது.