24 special

பாஜக மீதான திமுகவின் பயம் இனி எப்போதும் தொடரும்-அண்ணாமலை!

mk stalin, annamalai
mk stalin, annamalai

பாஜக சார்பில் இன்று மாவட்ட வாரியாக 10ஆயிரம் கொடி கம்பம் நட முயன்ற பாஜக நிர்வாகிகளை திமுக அரசு காவல்துறையையை ஏவிவிட்டு கைது செய்ததற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.கடந்த மாதம் சென்னை பனையூரில் உள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்புறம் சுமார் 50 அடி உயரம் உள்ள கொடிக்கம்பத்தை அமைத்து அதனை ஏற்ற முயன்றனர். அப்போது காவல்துறை உரிய அனுமதி இல்லாமல் நடப்படத்தால் அதனை அப்புறப்படுத்த வேண்டும் என்று பாஜக நிர்வாகிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


அதன் பின் ஜேசிபி இயந்திரத்தை கொண்டு காவல்துறை அப்புறப்படுத்த முயன்றனர் அப்போது காவல்துறைக்கும் பாஜக நிர்வாகிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இந்த சம்பவத்தில் ஜேசிபி வாகனம் அடித்து உடைக்கப்பட்டது. இது தொடர்பாக பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் கொடிக்கம்பம் நடப்படும் என அண்ணாமலை அறிவித்தார்.

அப்போது பாஜகவின் வளர்ச்சியை கண்டு திமுக பயந்து இதுபோல் வன்முறையை கையில் எடுத்துள்ளது என்றும் சும்மா இருந்த பாஜகவை திமுக  தூண்டிவிட்டது போல இப்பொது 10ஆயிரம் கொடி கம்பம் நடப்படும் என்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்று கருத்து எழுந்தது.இந்தநிலையில் பாஜக நிர்வாகிகளை கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக பாஜக தலைமை தமிழ்நாட்டிற்கு ஆய்வு செய்ய குழு ஒன்றை அமைத்தது. அந்த குழுவும் தமிழ்ந்தில் பாஜகவின் வளர்ச்சியை கண்டு அஞ்சி தான் இதுபோல் தமிழக அரசு செயல்படுகிறது என்று தெரிவித்திருந்தது.

அதன் தொடர்ச்சியாக, இன்று நவம்பர் 1ம் தேதி 10 ஆயிரம் கொடி கம்பம் நடுவதற்கான ஏற்பாடுகளை பாஜக நிர்வாகிகள் செய்தனர். அப்போது ஆனால் உரிய முறையில் மாநகராட்சி மற்றும் நகராட்சியில் அனுமதி பெறாத காரணத்தால் கொடிகம்பம் அமைக்க காவல்துறையினர் அனுமதி கொடுக்கவில்லை. இந்தநிலையில், தடையை மீறு தமிழகத்தில் பல இடங்களில் கொடிக்கம்பங்கள் நட முயன்ற பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். இதன் ஒருபகுதியாக கோவை, சென்னை உள்ளிட்ட பல மாவட்டத்தில் அனுமதி பெறாமல் கொடி கம்பத்தை நடக்கூடாது அப்படி நட்டால் மாநகராட்சி, நகராட்சி மூலம் அப்புறப்படுத்த படும் என்று காவல்துறை தெரிவித்தது.

மேலும், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தில் பாஜக நிர்வாகிகளை காவல்துறை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைதுள்ளது.இதற்கிடையில் பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதற்கு மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதாவது, தமிழகம் முழுவதும், பாஜக கொடிக்கம்பம் அமைத்துக் கொடியேற்ற முயன்ற தமிழ்நாடு பாஜக நிர்வாகிகளும், தலைவர்களும், சகோதர சகோதரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். திமுக அரசின் இந்த அதிகார அத்துமீறலை வன்மையாகக் கண்டிக்கிறேன். 

மற்ற கட்சிகளின் கொடிக் கம்பங்கள் அமைக்கப்பட்டிருக்கும் இடங்களில் கூட, பாஜக கொடிக்கம்பம் வைக்க  அனுமதிக்காமல் திமுக தனது பாசிச முகத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் இதற்கெல்லாம் தமிழ்நாடு பாஜக  பின்வாங்கப் போவதில்லை. 1949 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு சுமார் 75 ஆண்டுகள் அரசியலில் இருக்கும் திமுக, பாஜக தொண்டர்களின் உழைப்பைக் கண்டு பயந்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. இத்தனை ஆண்டு காலம், போலி தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்து, மக்களை ஏமாற்றிக் கொள்ளையடித்து, குடும்ப முன்னேற்றத்துக்காக மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கும் திமுகவுக்கு, மக்கள் மத்தியில் இறுதிக் காலம் நெருங்கிவிட்டது. திமுகவின் பயம் இனி எப்போதும் தொடரும். என்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.