"கடந்த பிப்ரவரி மாதம் 4-ம் தேதி நடிகர் விஜய் மற்றும் புதுவை முதல்வர் ரங்கசாமி சந்திப்பு நடைபெற்றது, சென்னை பனையூரில் உள்ள வீட்டில் நடிகர் விஜய்யை புதுச்சேரி மாநிலத்தின் முதலமைச்சர் ரங்கசாமி இரவு 07.00 PM மணியளவில் சந்தித்தார். சுமார் ஒரு மணி நேரம்" நீடித்த இச்சந்திப்பில், ந இருவரும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசித்ததாக தகவல் கூறுகின்றன.
"எனினும், விஜய் உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று முதலமைச்சர் ரங்கசாமி தரப்பு தெளிவு படுத்தியது, விஜயை புதுச்சேரி முதல்வர் சந்தித்தது ஏன் என்ற பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில் ரங்கசாமி விஜய் சந்திப்பிற்கு இருவருக்குமான ஆதாயம் காரணம் என்று தெரியவந்துள்ளது.
"புதுவையில் உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி ஆட்சியில் உள்ள ரங்கசாமி கட்சி மற்றும் பாஜக இரண்டும் தனியே போட்டியிட்டுக்கின்றனர்".. இந்த சூழலில் சிறிய யூனியன் பிரதேசமான புதுவையில் ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்பதால் விஜய் ரசிகர்களின் வாக்குகளை பெற, ரங்கசாமி விஜயை அவரது இல்லத்தில் சந்தித்து இருக்கிறார்.
"அதே நேரத்தில் புதுவை மாநிலத்தில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது அங்கு முதல்வரை காட்டிலும் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் அதிகம், பாஜக அதிகார மையமாக புதுவையில் மாறியுள்ளது, அங்கு ஆளுநராக தமிழிசை இருக்கிறார்", இந்த சூழலில் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள பீஸ்ட் படத்தின் புதுவை மாநில விநியோக உரிமையை விஜய் தனக்கு நெருக்கமானவருக்கு வாங்கி கொடுத்துள்ளாராம்.
அங்கு சினிமா தியேட்டர்களில் பாஜக மூலமாக ஏதேனும் சிக்கல் வராமல் இருக்கவும் படத்தை பெரும்பாலான திரையரங்கில் வெளியிடவும் முதல்வர் ரங்கசாமியிடம் வேண்டுகோள் வைத்துள்ளாராம் விஜய், இப்படி ஒருவருக்கு ஒருவர் ஆதாயம் பார்க்க இருவர் சந்திப்பு நிகழ்ந்ததாக தகவல்கள் TNNEWS24-க்கு கிடைத்துள்ளது.
இந்த சூழலில் இனி வரும் திரைப்படங்களில் எங்கும் பாஜக குறித்து பேசப்போவதில்லை என்ற உறுதியும் விஜய் தரப்பில் கொடுக்கப்பட்டுள்ளதாம். புதுவை என்பது அரசியல் ரீதியாகவும், சினிமா ரீதியாகவும் முக்கியத்துவம் கொண்ட மாநிலம் என்பதால் இருவரும் இணைந்து இந்த முடிவினை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.திடீர் மனமாற்றத்திற்கு காரணம் எல்லாம் முந்தைய வருமான வரித்துறை சோதனை செய்த வேலை என்கின்றன கோடம்பாக்கம் வட்டாரங்கள்.