24 special

நடிகை கஸ்தூரி போட்ட ட்வீட் இப்ப இது தான் ட்ரெண்ட்....! ஆள விடுங்கடா என ஓடிய உதயநிதி...!

Kasthuri, udhayanidhi stalin
Kasthuri, udhayanidhi stalin

சனாதனம் கருத்து தொடர்பாக உதயநிதி, ஆ ராசாவே விமர்சித்து நடிகை கஸ்தூரி பதிவிட்டு இருக்கும் டீவ்ட் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. கடந்த சில நாட்களாகவே சோசியல் மீடியா முழுவதும் உதயநிதியின் சனாதன கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. திமுகவின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனம் தர்மத்தை ஒழிக்க வேண்டும். சிலவற்றை நாம் எதிர்க்க கூடாது. கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா போல அதை எல்லாம் ஒழிக்க தான் வேண்டும் என்று பேசியிருந்தார்.


இதற்கு பதிலளிக்கு விதமாக "டெங்கு மலேரியா உங்க தாய்க்கும் மாப்பிள்ளைக்குமே  முற்றி உள்ளதே...அவங்களை என்ன பண்ணுறதா உத்தேசம்?ஊருக்கு உபதேசம் அதுவே திராவிடிய பரம்பரை யுக்தி. அவ்வளவு சனாதனத்தின் மேல் வெறுப்பு உள்ளவர்களுக்கு இந்து கோவில் சொத்து மட்டும் கேட்குதோ ? முதல்ல உண்டியல்ல இருந்து கைய எடுங்க ! என்று கடுமையாக விமர்சித்து கூறி இருந்தார்.என்ன அக்கறை என்ன அக்கறை. பெண்ணை இழிவுபடுத்துவதில் திமுக காரர்களுக்கு நிகர் உண்டா?  அதை முதலில் ஒழிங்க. வரலாற்றில்   பெண்ணை அடிமைப்படுத்திய மதம் எதுன்னு போட்டி வைத்தால் இந்து மதம் எவ்வளவோ பரவாயில்லை என்று தெரியும்.

அப்போ மற்ற மதத்தை ஒழிப்பேன் என்பாரா?  Liar. என்று தொடர்ந்து உதநிதியை நோக்கி கேள்வி எழுப்பி வந்தார். இந்த நிலையில் தனது கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல், உதயநிதி ட்விட்டர் எக்ஸ் தளத்தில் ப்ளாக் செய்துவிட்ட ஸ்க்ரீன் ஷாட்டையும் பகிர்ந்திருந்தார். இதைத் தொடர்ந்து பேச்சுரிமை பற்றி வானளாவ கதை பேசும் கழக இளவரசர் இப்படி ப்ளாக் செய்துவிட்டு ஓடலாம என விமர்சனங்கள் எழுந்தன.இது இப்படி இருக்க உதநிதிக்கு சப்போர்ட் பண்ணுகிறேன் பேர்வழி என வந்த  திமுக எம்பி ஆ ராசா, அவர் பங்கிற்கு சனாதனம் தர்மம் என்பது எய்ட்ஸ் மற்றும் தொழு நோயை போன்றது என்று பேசி இருந்தார்.

மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016ன் கீழ், தொழுநோய், சுகாதார நிலைமை போன்ற முக்கியமான தலைப்புகளை பற்றி விவாதிக்கும்போது, மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பொறுப்புடனும் செயல்படுவது முக்கியமானது. தலைவர்களின் வார்த்தைகள் மற்றும் அணுகுமுறைகள் பொது மக்களின் கருத்து மற்றும் நடத்தையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எனவே, அவர் தனது கருத்தை மறுபரிசீலனை செய்து பொது வெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சங்க நிர்வாகி நிகிதா சாரா கூறியுள்ளார்.

இந்த நிலையில் உதயநிதி மற்றும் ஆர் ராசாவின் கருத்துக்களுக்கு பதில் அளிக்கும் வகையில் நடிகை கஸ்தூரி ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்று போட்டு மேலும் ஒரு மரண அடி அடித்திருக்கிறார்.  "இளவரசருக்கு டெங்கு, கொரோனா. ராஜாவுக்கு எய்ட்ஸ் தொழுநோய். பொருத்தம் தான். அட, மாநாடு வேணாம்யா, திராவிடிய விழுதுகள் ஊழல் அழிப்பு, பலதாரமணம் எதிர்ப்பு , லஞ்ச ஒழிப்பு என்று ஒரு சின்ன கூட்டமாவது போடுவார்களா? பிடிக்காத விஷயத்தை தானே எதிர்க்க முடியும் என்று கிண்டலாக விமர்சிக்க, பற்றிக் கொண்டது சமூக வலைத்தளம்.

சமூக வலைத்தளம் என்பது வந்தது முதல் இரு வழி கருத்துப் பரிமாற்றம் ஆரம்பித்துவிட்டது. மேடைப் பேச்சை போல ஒரு வழியாக மட்டும் இருந்தால் யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் பேசிச் செல்லலாம் என்று இருந்தது. ஆனால் கஸ்தூரி மாதிரியான பிரபலங்கள் மட்டுமல்லாமல், சாமான்யர்களும் கருத்து யுத்தத்தில் இறங்கியுள்ளது நல்ல முன்னேற்றம் என்றால் அது உண்மைதான்.