சென்னை பனையூரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. திரையுலகில் தனது 30 ஆண்டுகால இசைப் பயணத்தை கொண்டாடும் வகையில் இந்த நிகழ்ச்சியை ஏ.ஆர்.ரஹ்மான் நடத்தினார். இதற்கான பொறுப்பு சென்னையைச் சேர்ந்த ஏசிடிசி என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியால் சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் 2 மணி நேரத்திற்கும் மேலாக பொதுமக்கள் அவதிப்பட்டனர்5000 கொடுத்து டைமண்ட் பாஸ் வாங்கியும் கூட ஆயிரக்கணக்கானோர் இசை நிகழ்ச்சியை பார்க்க முடியாத அளவுக்கு நிகழ்ச்சி ஏற்பாடு மோசமாக இருந்ததாக சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ஆயிரக்கணக்கில் சீட்டிங் அமைத்துவிட்டு 4 லட்சம் டிக்கெட்டுகள் வரை விற்றகப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதுஇந்த இசை நிகழ்ச்சியில் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய பலரும் உள்ளே கூட செல்ல முடியாமல் வெளியிலேயே நிறுத்தப்பட்டனர். இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோல்டு, பிளாட்டினம், சில்வர் என டிக்கெட் வாங்கிய பலரும் இசை நிகழ்ச்சியை பார்க்காமல் வீடு திரும்பியதாக குற்றம்சாட்டியுள்ளனர். கூட்டம் கட்டுக்கடங்காமல் நிரம்பி வழிந்ததால் பலருக்கும் மயக்கம், மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சில்வர் பாஸ் 1000த்தில் தொடங்கி, 5000 வரை டிக்கெட்டுகள் விற்றுத் தீர்க்கப்பட நிலையில், பார்வையாளர்களுக்கு தேவையான எந்த ஒரு ஏற்பாடும் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபகாலங்களில் இப்படி ஒரு மோசமான நிகழ்ச்சி ஏற்பாட்டை பார்த்ததில்லை என்று பலரும் கொந்தளித்தனர்.பாஸ்கள் இத்தனை விலை கொடுத்து வாங்கியதும் இல்லாமல், பார்க்கிங் கட்டணமும் கறாராக வசூலிக்கப்பட்டுள்ளது. எப்படியோ அடித்து பிடித்து உள்ளே போனால், உட்கார இடமில்லை, சரி ஸ்னாக்ஸாவது வாங்கலாம் என திரும்பினால, அது அத்தனையும் அவ்வளவு விலை என பலரும் புலம்பி வருகின்றனர் மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில் ஏ.ஆர்.ரகுமான் நடத்திய இசை நிகழ்ச்சி நிச்சயமாக சென்னை மக்கள் மறக்க முடியாத நிகழ்ச்சியாகத்தன் அமைந்துவிட்டது என்கின்றனர் காசும் போச்சு, நிம்மதியும் போச்சு, சத்தியமா இனி ஏ.ஆர்.ரஹ்மான் எந்த ஒரு கான்செர்ட் போட்டாலும் நிச்சயமாக போகப்போவதில்லை என மக்கள் பலர் முடிவெடுத்து ஆவேசத்துடன் சென்றதை காண முடிந்தது.