கடந்த மே 23-ம் தேதி அன்று ” உயர்கல்வி ஆலோசனை தரும் ‘தினமலர்’ வழிகாட்டி இன்று துவக்கம்; ‘டாப் லெவல்’ நிபுணர்கள் பங்கேற்பு ” எனும் தலைப்பில் பிரபல தினமலர் நாளிதழ் செய்தி ஒன்றை வெளியிட்டு இருந்தது.உயர்கல்வி தொடர்பாக தினமலர் இணையதளத்தில் வெளியான செய்தியில் மாணவிகள் சிலர் ஒன்றாக இருக்கும் புகைப்படம் பயன்படுத்தப்பட்டு உள்ளது.
ஆனால், அந்த படத்தில் உள்ள மாணவிகள் அனைவரின் நெற்றியிலும் ஒரே மாதிரியாக ” பொட்டு ” இடம்பெற்று இருப்பதாக சிலர் திடீர் என விமர்சனம் செய்ய தொடங்கினர் மேலும் மாணவிகள் பொட்டு இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்தும் தினமலர் வேண்டும் என்றே மாணவிகளுக்கு பொட்டு வைத்து இருப்பதாக சிலர் விமர்சனம் செய்தனர்.
இதற்கு நடிகை கஸ்தூரி ட்விட்டரில் ” இங்கு நிறைய சதிக் கோட்பாடுகள் உள்ளன. அது சிக்கலானது அல்ல. ஸ்டாக் போட்டோவில் இருக்கும் வடநாட்டுப் பெண்களை தமிழராக மாற்றும் முயற்சிதான் பொட்டு. எங்கள் திரைப்படங்களில் அதை எப்போதும் செய்கிறோம். எமி ஜாக்சனுக்கு கூட சேலையும், பொட்டும் கொடுத்து தமிழ்ப்பொண்ணு என சொல்லி அனுப்புகிறோம் ”
அதே போல் வடநாட்டு பெண்களை பொட்டு வைத்து தமிழ் பெண்ணாக மாற்றும் ஒன்றுதான் என ட்விட்டரில் விமர்சனம் செய்பவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் நடிகை கஸ்தூரி.
தமிழகத்தில் எத்தனை பிரச்சனைகள் இருக்க, தினமலர் பொட்டு வைத்து விட்டது என்பதுதான் இப்போது விவாதம் செய்யவேண்டியதா என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.