24 special

இந்திய ராணுவத்தில் அதிரடி வரவு..! இனிதான் இருக்கு கச்சேரி!

indian army and modi
indian army and modi

இந்தியா : 2014ல் பிரதமர் மோடி தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி மத்தியில் ஆட்சியமைத்த பிறகு பாதுகாப்பு துறையில் வியத்தகு வளர்ச்சியடைந்து வருகிறது. ஆத்மநிர்பார் எனும் பெயரில் மேக் இந்த இந்தியா திட்டத்தின் கீழ் ஆயுதங்கள் விமானங்கள் மற்றும் பாதுகாப்பு நவீன தொழில்நுட்பங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.


இந்நிலையில் ஆத்மநிர்பர் அல்லது தன்னம்பிக்கை அர்ப்பிணிப்பின் அடிப்படையில் லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்தால் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கே 9 வஜ்ரா பீரங்கி துப்பாக்கிகள் இந்திய பாதுகாப்புத்துறைக்கு கடந்த வருடம் ( தோராய கணிப்பு ) வெற்றிகரமாக சோதிக்கப்பட்டு வழங்கப்பட்டிருந்தது.

தற்போது மீண்டும் நூறு கே.9 வஜ்ரா ரக பீரங்கி துப்பாக்கிகளை வாங்க பாதுகாப்பு செயலர் அஜய் குமார் தலைமையிலான குழுவால் உயர்மட்ட பாதுகாப்பு கொள்முதல் வாரியக்கூட்டத்தில் ஆலோசிக்க இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.  மேலும் பாதுகாப்பு செயலர் தலையில் நடக்க இருக்கும் இந்த கூட்டத்தில் ஆயுதப்படைகளின் துணைத்தலைவர்கள்,

பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த பிரதிநிதி உட்பட அனைவரும் கலந்துகொள்ள இருக்கின்றனர். ஏற்கனவே வஜ்ரா ரக பீரங்கி துப்பாக்கி சோதனை செய்யப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துவிட்டதால் ஐந்து படைப்பிரிவுகளுக்கு ஆர்டர் செய்ய இருக்கும் நூறு துப்பாக்கிகளுக்கு மறுசோதனை தேவையில்லை என கருதப்படுகிறது. 

லார்சன் டூப்ரோ நிறுவனத்துடன் மீண்டும் 5500 கோடி மதிப்பில் இந்திய பாதுகாப்பு துறை ஒப்பந்தம் போடவுள்ளது.  இந்த ஒப்பந்தம் தவிர பினாகா ராக்கெட் லாஞ்சர் 6400 வழிகாட்டுதலுடன் கூடிய நீடிக்கப்பட்ட ராக்கெட்டுகள் வான்வெளி பாதுகாப்பு துப்பாக்கிகள் ஆகியவற்றை வாங்கவுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 6000 கோடியாகும். மேலும் 140,000 துப்பாக்கி குண்டுகளும் 220 துப்பாக்கிகளும் வான்வெளி பாதுகாப்புக்கு வாங்கப்படவிருக்கிறது.