ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பிறந்த நாளை முன்னிட்டு நடிகையும் அமைச்சருமான ரோஜா கிறிஸ்மஸ் தாத்தா வேடமிட்டு மாற்றுத்திறனாளி வீட்டிற்கு சென்று பரிசு பொருட்களை வழங்கி அவர்களுக்கு சர்பிரைஸ் கொடுத்துள்ளார். ஊனமுற்ற நபரின் பெயர் நாகராஜ் என்பதால் தனது தந்தையின் பெயரை கொண்ட ஒருவருக்கு உதவி செய்வதில் பெரு மகிழ்ச்சி அடைவதாக அவர் நெகிழ்ச்சி தெரிவித்தார்.ஆந்திர மாநிலம் விஜயவாடா நகரில் உள்ள பாம்பே காலனியைச் சேர்ந்தவர் நாகராஜ். போலியோ வாழ் இரண்டு கால் செயலிழக்க முடியாமல் மாற்றுத்திறனாளி இவர் சாலைகளில் காலணிகளை விற்று வருகிறார். இவருடைய மனைவி கௌசியா இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். வாழ்க்கை நன்றாகவே சென்று கொண்டிருந்த நிலையில் கௌசிகாவிற்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டு நோய்வாய் பட்டு படுக்கையாக ஆகிவிட்டார்.
இதனால் ஊனமுற்ற நாகராஜ் அனைத்து வீட்டு பணிகளையும் செய்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு மீண்டும் வந்து சாலையில் அமர்ந்து வியாபாரம் செய்து மாலையில் செல்வது வழக்கம் தனது மனைவியின் நோய்க்கு தீர்வு காண பலமுறை அரசுக்கு விண்ணப்பித்துள்ளார். இதனை அறிந்த அமைச்சர் ரோஜா ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் பிறந்த நாளான நேற்று அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். விஜயவாடாவில் இருக்கும் அவர் கிறிஸ்மஸ் தாத்தாவைப் போன்று வேடமடைந்து யாருக்கும் தெரியாமல் அவர் வீட்டிற்கு சென்று குழந்தைகளுக்கு பரிசுகள் அளித்து வியப்பில் ஆழ்த்தினார். வந்தது அமைச்சர் ரோஜா என்று தெரியாத நாகராஜு அவர் தனது பணியை செய்து கொண்டிருந்த நிலையில் அமைச்சர் தான் வந்திருப்பது என்று அறிந்த உடனேயே அறைக்குள் சென்று வியப்படைந்தார். தொடர்ந்து அவரது மனைவிக்கு ஆறுதல் கூறிய அமைச்சர் ரோஜா பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து அவர்களுக்கு தொழிலை மேம்படுத்துவதற்கு 2 லட்ச ரூபாய் அளித்தார். தொடர்ந்து அவரது மனைவியின் சிகிச்சைக்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். திடீரென மாற்றுத்திறனாளி வீட்டிற்கு சென்று ரோஜா சர்பிரைஸ் கொடுத்த வீடியோ தறபோது இணையத்தில் வைரலாகி வருகிறது.