24 special

பிக்பாஸ் தனலட்சுமிக்கு என்ன ஆச்சு ...! ரசிகர்கள் ஷாக்...!

biggboss, dhanalakshmi
biggboss, dhanalakshmi

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் 7 வது சீசன் சண்டைக்கும் சச்சரவுகளுக்கும் பஞ்சம் இல்லை என்று போகிறது. ஆனால்  இந்த சீசனை விட இதற்கு முந்தைய 6வது சீசன் இந்த சண்டை சச்சரவுகளில் டாப்பில் இருந்தது. அதில் தனலட்சுமி சக போட்டியாளர்களான அசீம் மற்றும் ஜிபி முத்துவுடன் போட்ட சண்டையின் மூலமாக பேசுபொருளாக மாறினார். எந்த ஒரு சினிமா, சீரியல், மாடலிங் பின்புலமும் இல்லாமல் தனது டிக் டாக் வீடியோவால் பிரபலமான தனலட்சுமிக்கு பிக் பாசில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்து உள்ளே நுழைந்தார். மொத்தம் 77 நாட்கள் இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்தார்  பிக்காஸில் சென்று விட்டு வந்தால் மக்களிடம் ரீச் கிடைக்கும், இதன் மூலம் படங்களோ அல்லது சீரியல்களிலோ நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று பொதுவான எண்ணம் போட்டியாளர்கள் அனைவருக்கும் இருக்கும் .


ஆனால் இது வரை பிக் பாஸ் போட்டியில் பங்கேற்று சென்றவர்களில் ஆரவ், கவின், ஹரீஷ் கல்யாண் போன்றோர் மட்டுமே படங்களில் நடித்து வருகின்றனர்.பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டு வந்தால் புகழின் உச்சிக்கு போலாம், சினிமாவில் பெரிய அளவில் முன்னேற்றம் கிடைக்கும் என நம்பியிருந்தார் தனலட்சுமி, பிக் பாஸ் போட்டியாளர் பெரும்பாலோனோர் வாய்ப்பு கிடைக்காமல் தான் இருக்கிறார்கள். அதில் தனலட்சுமியும் ஒருவர். அவருக்கு எந்த ஒரு வாய்ப்பும் கிடைக்காமல் தான் இருக்கிறார். இன்ஸ்டாகிராமில் ஆகிட்டவாக இருக்கும் தனலட்சுமி வாழ்க்கையின் முடிவு மரணம் என குறிப்பிட்டு அழுது கொண்டே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் தனலட்சுமி.. இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டாவில் இருந்து அழுத வீடியோவை நீக்கியுள்ளார். விரக்தியில் இதுபோன்று வீடியோவை வெளியிட வேண்டாம் என்றும் பொறுத்தால் நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என தனலட்சுமிக்கு நெருக்கமானவர்கள் ஆறுதல் கூறியதாக தகவல்கள் உலா வருகிறது.