திரையுலகில் மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் விஜய், அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பேச்சு வேறு சமீபத்தில் கிளம்பி பெரும் பதற்றத்தை ரசிகர்கள் இடையே உண்டானது. விஜய் சூப்பர் ஸ்டார் என்பதை ரஜினி ரசிகர்கள் ஒத்துகொள்ளவில்லை. இந்த நிலையில் விஜய் அதற்கெல்லாம் முற்று புள்ளி வைத்தார் லியோ பட வெற்றி விழாவில். இதனால் அந்த சர்ச்சை ஓரளவுக்கு முடிவுக்கு வந்து ரசிகர்கள் இது போல் சர்ச்சையை கிளறாமல் இருந்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோக்களை வைத்து படம் இயக்குவது அவ்வளவு சாதாரணம் கிடையாது, இயக்குனர்கள் எழுதிய கதையை ஹீரோக்களுக்கு ஏற்பது போல் மாற்றத்தை சொல்லவர்கள் இது தான் படம் வெற்றி பெறுவதற்கும், தோல்வி பெறுவதற்கும் மிக பெரிய போர்க்களமாக அமையும் என்பதில் மாற்று கருத்து கிடையாது. குறிப்பாக மேஷ் ஹீரோக்களின் படம் வெளியாகும் என்றால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருப்பார்கள் அதிலும் அந்த படத்தில் எங்கு எங்கு ரசிகர்கள் உற்சாகத்துடன் இருக்க மேஷ் சீன்களை அமைப்பது இயக்குனர்களுக்கு முக்கிய பணியாக இருக்கும். ஆனால், இப்போது வரும் படங்கள் எல்லாம் பெரிய வித்தியாசமின்றி பார்த்த கதைக்களமாக இருக்கிறது என ரசிகர்கள் கூறுகின்றனர்.
விஜய் படத்தில் பாடலாசிரியர் பிரியன் தனக்கு ஏற்பட்ட பாலிடிக்ஸை தெரிவித்துள்ளார், 2011ம் ஆண்டு இயக்குனர் மோகன் ராஜ் இயக்கத்தில் விஜய், ஹன்ஷிகா, சந்தானம் உள்ளிட்ட திரை நட்சத்திரம் நடித்த படம் வேலாயுதம். இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனம் பெற்றது. அந்த நேரத்தில் வேலாயுதம் படத்துடன் 7ம் அறிவு படமும் வெளியானது அது மிக பெரிய வெற்றி பெற்றது. விஜய் படத்திற்காக நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி வேலாயுதம் படத்திற்கு இசையமைத்திருந்தார். அந்த படத்திற்கு பாடலாசிரியர் பிரியன் ' வேலா வேலா வேலாயுதம்' பாடலை எழுதியிருந்தார். இந்த பாடல் தான் அந்த படத்திற்கான ஓப்பனிங் சாங்காக இருக்கும் என நினைத்தாராம். ஆனால், படம் வெளியான போது அது படலாசிரியருக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
இது பிரியனுக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் அங்கே ஏதோ ஒரு பாலிட்டிக்ஸ் நடந்திருப்பதாக பிரியன் கூறினார். விஜய் படம் என்றால் நிச்சயம் பாலிடிக்ஸ் நடக்கும் என்பது தெரிந்த ஒன்று தான். இதனை அப்படியே பிரியன், விஜய் ஆண்டனியிடம் தெரிவிக்க கோபத்தில் அந்த வேலா வேலா வேலாயுதம் பாடலை படமுழுக்க வருகிற மாதிரி ஆங்காங்கே போட்டு தெறிக்க விட்டாராம் விஜய் ஆண்டனி. விஜய் ஆண்டனி வேலாயுதம் மற்றும் வேட்டைக்காரன் படத்தில் விஜயுடன் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.