
நாட்டின் கோடீஸ்வரர்களில் ஒருவராக கருதப்படுபவர் கௌதம் அதானி! அதானி குடும்பம் மற்றும் அதானி அறக்கட்டளையின் நிறுவனரும் தலைவரும் இவரே, குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் பிறந்த இவர் அதானி குழுமம் என்பதை 1988 தொடங்கினார் இது குஜராத்தின் அகமதாபாத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும் ஒரு இந்திய பன்னாட்டு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் கீழ் பல வணிக ஆற்றல்கள், வளங்கள் தளவாடங்கள் ரியல் எஸ்டேட் நிதி சேவைகள் வேளாண் வணிகம் பாதுகாப்பு மற்றும் விண்வெளி ஆகியவையும் இயங்கி வருகிறது. நாட்டில் ஒட்டு மொத்தமாக எதில் எல்லாம் அதிக வருமானம் ஈட்ட முடியுமோ அவை அனைத்தையும் தன்வசம் வைத்திருக்கிறது அதானி குழுமம். மேலும் வருடாந்திர வருவாயாக இக்குழு 13 பில்லியன் டாலரை ஈட்டி வருகிறது. அதுமட்டுமின்றி இந்த குழுமத்தின் நிறுவனங்கள் 50 நாடுகளில் 70 இடங்களில் செயல்படுகிறது..
அதுமட்டுமின்றி நம் நாட்டில் மிகவும் பிரபலமான சமையல் எண்ணெயை பலரால் பயன்படுத்தப்படும் ஃபார்ச்சூனை தனக்கு சொந்தமாகக் கொண்டது. கடந்த 2023 ஆம் ஆண்டு போர்ப்ஸ் நிறுவனத்தின் அறிக்கையின் படி கௌதம் அதானியின் குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு $74.7B பில்லியன் அமெரிக்கன் டாலர் என்றும் உலக பணக்காரர்களில் 15வது இடத்தையும் நாட்டின் இரண்டாவது பணக்காரர் இடத்தையும் கெளதம் அதானியே பெற்றுள்ளார். நிதி நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் அல்லது வணிகத்தைச் சார்ந்த படிப்புகளை மேற்கொள்பவர்கள் நிதியை சார்ந்த படிப்பை மேற்கொள்பவர்கள் பெரும்பாலும் அதானியின் குடும்பத்தையும் அதன் பங்குவர்த்தனைகள் பங்கு நடவடிக்கைகள் நிதி நடவடிக்கைகள் மீது அதிக கவனம் செலுத்தி வருவர். ஏனென்றால் அவர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கைக்குப் பின்னும் நாட்டின் பொருளாதாரத்திலும் மாற்றங்கள் ஏற்படுகிறது. மேலும் ஒரு வருடத்தில் கெளதம் அதானி எந்த இடத்திற்கெல்லாம் தனது பணத்தை செலவிடுகிறார் மற்றும் எங்கெல்லாம் முதலீடு செய்கிறார் என்பதும் வணிகச் செய்திகளில் பரபரப்பாக வெளியாகும்.
வட இந்தியாவில் பிறந்து அங்கு தனது தலைமையகத்தை அமைத்து உலகம் முழுவதும் பல இடங்களில் தனது தொழிலை பெருக்கி வரும் அதானே தமிழகத்திற்கு வர மாட்டார் தமிழகம் பக்கமே எட்டிப் பார்க்க மாட்டார் என்ற ஒரு பேச்சு தமிழகத்தின் நிலவி வந்ததை தற்போது முறியடித்துள்ளார். அதாவது மழையை மட்டுமே நம்பி கடுமையான வெயிலின் வாடி வதங்கும் ராமநாதபுரத்தை தற்போது மின்சார சக்தியாக மாற்றி வருகிறார் கௌதம் அதானி! கடல் மற்றும் கடல் சார்ந்த உணவு அதன் வியாபாரங்களை பெரிதும் நம்பி இருக்கும் ராமநாதபுரம் மக்களுக்கு மின்சாரத்தின் மூலமாகவும் வருமானம் ஈட்ட முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் 2500 ஏக்கர் நிலப்பரப்பில் அதானி நிறுவனம் 648 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட சோலார் மின்சார உற்பத்தி நிலையத்தை கடந்த 2016 ஆம் ஆண்டு அமைத்து செயல்பட ஆரம்பித்து அன்றிலிருந்து நாள் ஒன்றிற்கு சராசரியாக 30 லட்சம் யூனிட் மின்சாரம் சூரிய ஒளியிலிருந்து தயாரிக்கப்படுகிறது. அதோடு இதுவரை 840 கோடி யூனிட் அளவிற்கு இந்த நிலையத்திலிருந்து மின்சாரம் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஆண்டிற்கு 200 நாட்களுக்கு மேலாக வெயிலே அடித்து மிரட்டும் ராமநாதபுரத்தில் சூரிய ஒளியால் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்தி 2.64 லட்சம் வீடுகளுக்கு தேவையான மின்சாரம் விநியோகிக்கப்படுகிறதாம். ஆனா இதே மின்சாரத்தை அனல் மின் நிலையம் மூலம் உற்பத்தி செய்திருந்தால் 77 டன் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றப்பட்டு சுற்றுச்சூழலுக்கும் தீங்கு ஏற்பட்டிருக்கும் ஆனால் சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படாத வகையில் சூரிய ஒளியிலிருந்து இந்த மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அதானி அவருடைய ஊர் வளர்வதற்கு முதலீடு செய்கிறார் என்று கூறி வந்த பலரையும் தற்போது வாயடைத்துப் போய் நிக்க வைக்கும் வகையில் தமிழகத்தில் ராமநாதபுரத்தில் சுற்றுச்சூழலுக்கும் சேதம் விளைவிக்காத வகையில் ஒரு புதிய நம்பிக்கையை ராமநாதபுரத்தில் விதைத்துள்ளார் கெளதம் அதானி!