
தமிழகத்தில் உள்ள தலித் மக்களுக்கு தான்தான் பாதுகாவலர் என்று சுற்றி வரும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன். திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் விசிக மக்களுக்கு நடக்கும் இன்னல்களை கண்டும் காணாமல் இருந்து வருகிறார். புதுக்கோட்டையில் பட்டியலின மக்கள் குடிக்கும் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த சமத்துவம் சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக உள்ளது. இதற்காக திருமாவளவன் குரல் கொடுக்கவில்லை என்பது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விசிகவில் இணைந்த நபருக்கு பதவி கொடுக்கபட்டு தேர்தலில் சீட் கொடுக்க இருக்கும் தகவலால் கட்சி இரண்டாக பிரிந்து செல்வதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு நான்கு தொகுதியை குறிவைத்து திமுகவுடன் பேச்சுவாரத்தை நடத்தியது. கடந்த முறை விசிகாவுக்கு இரண்டு தொகுதிகள் கொடுக்கப்பட்டு, அதில் ஒரு தொகுயில் சொந்த சின்னமும் மற்றொரு தொகுதியில் திமுக சின்னத்தில் போட்டியிட்டது. இந்த முறை அதனை எதிர்க்க விசிக சார்பில் கடந்த மாதம் திருச்சியில் வேலும் சனநாயகம் மாநாடு என்ற பெயரில் திருமாவளவன் நடத்தினார். அடர்க்கு மக்களும் கூட்டம் கூடியது. அதனை கொண்டு இந்த முறை நான்கு தொகுதிகளை குறிவைத்து பணிகளை செய்துவருவதாக கூறப்பட்டது.
திமுக அந்த தொகுதியை கொடுக்குமா என்பது தெரியவில்லை. நான்கு தொகுதியில் விசிக போட்டியிட யார் இருக்கிறார் என அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது. சமீபத்தில் விசிக கட்சியில் இணைந்த லாட்டரி மார்ட்டின் அவர்களின் மருமகன் ஆதவ் அர்ஜுன் கட்சியில் சேர்ந்த உடன் அவருக்கு விசிக கட்சியின் துணை பொதுச்செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. இதனால் அக்கட்சியில் விரிசல் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகிவருகிறது. மேலும், ஆதவ் அர்ஜுனா முன்னாடியே விசிக நடத்திய அந்த மாநாட்டிற்காக 50 கோடி ரூபாய் பணம் கொடுத்து உதவியுள்ளார் லாட்டரி மார்ட்டின்.
அதற்கு பதிலாக தான் விசிக கட்சியில் இருந்து ஒரு எம்பி சீட் வேண்டுமென்று கைமாறு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த எம்பி சீட் தான் கள்ளக்குறிச்சி தொகுதியில் ஆதவ் அர்ஜுனை களம் இறக்க விசிக திட்டம் போட்டு வருவதாக ஒரு தகவல் வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த தொகுதி உடன்பாட்டில் தனி தொகுதிகள் குறைவாக தந்தாலும் போதும் கட்டாயம் ஒரு பொதுத் தொகுதி வேண்டும் என்று திருமாவளவன் அடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏழை, எளிய, பட்டியலின மக்களின் பாதுகாவலன் என்று சொல்லும் திருமாவளவன் அந்த பணத்தை பெற்று சமூக மக்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தாமல் இப்படி கட்சியை அடமானம் வைத்து வருகிறார் என இளைஞர்கள் கதறி வருகின்றனர்.
விசிக கட்சி தொடங்கியதில் இருந்து வன்னியரசு, சங்க தமிழ் ஆகியோர் தொடர்ந்து விசிக்காவில் இருந்து வருகின்றனர். அவர்கள் ஒரு போதும் கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறார் திருமாவளவன் இருந்து வருகிறார். நெற்றி வந்தவர்களுக்கு எல்லாம் கட்சியென்றால் நாளைக்கே கட்சி பிளவுடைந்து இரண்டாக செல்ல வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது.