
சமீப சில மாதங்களாக உணவுகள் மீது அதிக ஆர்வம் கொண்ட உணவு பிரியர்கள் மற்றும் எந்த இடத்தில் எந்த உணவு அருமையாக கிடைக்கும் நள்ளிரவில் சென்றாலும் கூட இந்த இடத்தில் இந்த உணவு கிடைக்கும் என்பதை பல youtube சேனல் தொடங்கி அதில் பதிவிட்டு வருகின்றனர். உணவின் மீது கொண்ட காதலும் மோகமும் தற்போது அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக பிரியாணி லவ்வர் சென்ற ஒரு தனி டிராக்கே தற்போது சென்று கொண்டிருக்கிறது மேலும் நாட்டில் உள்ள அனைத்து வகையான பிரியாணிகளையும் உண்ண வேண்டும் என்று ஒருவர் தனியாக சுற்றுப்பயணம் மேற்கொண்ட வீடியோவும் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது அது மட்டும் இன்றி வீட்டில் சமைப்பதை விட ஹோட்டலுக்கு சென்று சாப்பிடும் விருப்பத்தையும் இளைஞர்கள் மட்டும் இன்றி அதிக குடும்பங்களும் விரும்புகின்றனர். மாதத்திற்கு ஒருமுறை இரண்டு முறை செல்வது கூட சிலர் விருப்பத்திற்காக செல்கிறார்கள் என்று கூறலாம் ஆனால் வாரத்தில் ஒரு முறை நிச்சயமாக நான் ஹோட்டலுக்கு சென்று சாப்பிடுவேன் என்னை அழைத்துச் செல்ல வேண்டும் என்று அடம் பிடிப்பவர்களை விருப்பம் என்று கூறுவதை விட அவர்களது பழக்கம் என்று கூறலாம்.
அப்படி தற்போது பலர் பல நேரங்களில் ஹோட்டலுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ள நிலையில் இந்த ஹோட்டல் சுகாதாரமாக இருக்கும் தட்டுகளை சுத்தமாக கழுவி இருப்பார்கள் இடமும் சுத்தமாக இருக்கும் உணவும் நல்ல தரமானதாக இருக்கும் என்று நம்பி பல செய்கின்றனர். ஆனால் அப்படிப்பட்ட ஹோட்டல்களில் உணவுகள் எப்படி தயாரிக்கப்படுகிறது தயாரிக்கப்படும் பாத்திரங்கள் எவ்வளவு சுத்தமாக இருக்கிறது என்பது குறித்து எந்த ஒரு புரிதலும் தகவலும் இல்லாமல் ஹோட்டலின் வெளிப்புறத்தையும் அங்கு சுவையான உணவு கிடைக்கும் என்று பெறப்படும் செய்தியை மட்டுமே வைத்து அந்த ஹோட்டலுக்கு நிச்சயம் செல்லவேண்டும் என்பதை குறிக்கோளாக கொள்கின்றனர். அப்படிப்பட்ட மிகவும் பிரபலமான சென்னை மாநகரில் உள்ள ஒரு உணவகத்தில் அசுத்தமான தண்ணீரில் அந்த ஹோட்டலில் பயன்படுத்தப்பட்ட தட்டுகளை கழுவும் காட்சிகள் இணையத்தில் வைரலானது. அந்த ஹோட்டலின் பின்புறத்தில் அசுத்தமான தண்ணீர் நிரம்பிய ஒரு டப்பில் அணைத்து சாப்பிட்ட தட்டுகளையும் போட்டு அதை கழுவும் காட்சிகள் வைரலானதோடு ஒரு பிரபலமான ஹோட்டலில் இப்படி நடப்பதை பார்த்து பலரும் இப்படியாத தட்ட கழுவுறாங்க என்று அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் இன்னும் பல ஹோட்டல்களில் பரிமாறப்படும் உணவுகளில் ஈ, பல்லி, கரப்பான் பூச்சி போன்றவை கிடப்பதாகவும் பரபரப்பு செய்திகள் வெளியாவதும் வாடிக்கையாகியுள்ளது. அதுமட்டுமின்றி சிலர் ஹோட்டல் உணவுகளை உண்டு தன் உயிரையும் இழந்து வருகின்றனர். இந்த நிலையில் இதுவரை இப்படி ஒரு பொருள் ஹோட்டலில் வாங்கப்பட்ட உணவில் கிடைக்காதபடியான ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதாவது சென்னை அருகே உள்ள பல்லாவரத்தில் யா முஹைய்யதீன் என்ற ஹோட்டலில் வாங்கப்பட்ட மட்டன் பிரியாணியில் கண்ணாடி துண்டு இருந்துள்ளது. இதனை கண்ட இளைஞர் மிகவும் அதிர்ச்சி அடைந்து, மேலும் கண்ணாடி துண்டு இருந்த பிரியாணியை சாப்பிட்ட அந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது அடுத்து கண்ணாடி துண்டு பெரிதாக இருந்திருக்கிறது அவரால் பார்க்க முடிந்திருக்கிறது ஒரு வேளை அதே கண்ணாடி துண்டு மிகவும் சின்ன சின்னதாக உடைக்கப்பட்டு உணவில் கலக்கப்பட்டு இருந்து அவர் உண்டிருந்தால் அவரது நிலைமை என்ன ஆகி இருக்கும் என்ற வகையில் பரபரப்பான கமண்டுகள் இதற்கு முன்வைக்கப்படுகிறது. மேலும் பிரியாணியில் சிக்கன் பீஸ் மட்டன் பீஸ் இருக்கிறதோ இல்லையோ இதுபோன்று கண்ணாடி துண்டு, பல்லி, கரப்பான்பூச்சி எல்லாமே கிடக்கும் போல என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்படுகிறது.