தமிழகத்தில் அரசியல் களம் ஒருபக்கம் சூடு பிடிக்கிறது என்றால் அரசியல் களத்தை ஓட்டி சினிமா துறையும் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது,முன்பு எல்லாம் விஜய் அஜித் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது என்றால் யார் படம் நீண்ட நாட்கள் திரையில் ஓடுகிறது எந்த படம் நன்றாக இருக்கிறது என்ற விவாதங்கள் எழும்...,
ஆனால் இப்போது விஜய் படம் திரையில் ஓடுமா என்ற சந்தேகம் எழுந்து இருக்கிறது விஜய் அஜித் படங்கள் ஒரே நாளில் வெளியானாலும் அஜித் படத்தை உதயநிதி ஸ்டாலினின் நிறுவனம் வெளியிடுகிறது அதே நேரத்தில் விஜய் படத்தை வேறொரு தனியார் நிறுவனம் வெளியிடுகிறது இதில் என்ன பிரச்சனை என்றால் அஜித் படத்தை உதயநிதி வெளியிடுவதால் விஜய்க்கு போதுமான திரையரங்குகள் கிடைப்பதில்லை.
இது குறித்து பல்வேறு கருத்துக்கள் பல்வேறு நேரங்களில் வெளியானாலும் தற்போது விஜய் படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்த கருத்தால் உதயநிதி விஜய் இடையே விரிசில் இருப்பது உறுதியாக இருக்கிறது, உதயநிதியை நேரடியாக சென்று சந்திக்க இருப்பதாக வாரிசு படத்தின் தயாரிப்பாளர். தெரிவித்து இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
துணிவு படம் அதிக தியேட்டர்களில் ரிலீஸாக இருப்பதாகவும், வாரிசு படத்துக்கு போதுமான தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்ற தகவல் அரசல்புரசலாக வெளியான நிலையில், முதன்முறையாக வெளிப்படையாக பேசியிருக்கிறார் அந்தப் படத்தின் தயாரிப்பிளார் தில் ராஜூ.
தமிழ்நாட்டில் துணிவு படத்துக்கு நிகரான தியேட்டர் வாரிசு படத்துக்கு கிடைக்கவில்லை. பல்வேறு புள்ளிவிவரங்களின்படி விஜய் தமிழகத்தின் நம்பர் 1 ஸ்டாராக இருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் தான் அஜித் இருக்கிறார். ஆனால், அஜித்தின் துணிவு படத்தை ரிலீஸ் செய்யும் உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம், துணிவு படத்திற்கு அதிக தியேட்டர்களை லாக் செய்துவிட்டு, வாரிசுக்கு போதுமான தியேட்டர்களை கொடுக்க மறுக்கின்றனர்.
துணிவுக்கு நிகராக வாரிசை ரிலீஸ் செய்ய போதுமான தியேட்டர்களை ஒதுக்கினாலே போதும்" என்று தில் ராஜூ கூறியிருக்கிறார் மேலும் இது குறித்து உதயநிதியை சந்திக்க இருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன, அதிலும் உறுதியான தியேட்டர்கள் ஒதுக்கப்படவில்லை என்றால் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விஜய் இருப்பதில் எந்த பயனும் இல்லை என விஜய் தரப்பு கருத்துகிறதாம்.
ஒரு படத்தை சொந்த மாநிலத்தில் குறித்த நாளில் அதிகமான திரையறங்குகளில் வெளியிட முடியவில்லை என்றால் தமிழ்நாட்டில் கோடி கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லி கொள்வதில் எந்த பயனும் இல்லை என விஜய் தரப்பி கருதுகிறதாம்.
எனவே ஒரு வேலை வாரிசு திரைப்படத்திற்கு அரசியல் அழுத்தம் உதயநிதி தரப்பில் கொடுக்கப்பட்டால் அரசியல் ரீதியாக திமுகவிற்கு எதிர் சித்தாந்த அரசியல் செய்யும் பாஜக பக்கம் ஆதரவான கருத்துக்களை தெரிவிக்கவும், பாஜக பக்கம் செல்லவும் விஜய் தரப்பு முடிவு எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.
அரசியல் ரீதியாக சினிமா துறையினர் எந்த பக்கம் இருக்கிறார்களோ அந்த பக்கமே அரசியலில் வெற்றி பெற்று இருப்பது வழக்கம் அந்த வகையில் விஜய் திமுகவிற்கு எதிர் நிலைப்பாடு எடுத்தால் அது திமுகவின் நாடாளுமன்ற வெற்றிக்கு பெரிய பாதிப்பை உண்டாக்கும் என்று கூறப்படுகிறது.