தமிழக முதல்வர் ஸ்டாலின் உதயநிதியை அமைச்சரவையில் இணைத்ததன் மூலம் தெலுங்கானா மாநிலத்தில் சந்திர சேகர ராவ் அவரது மகனிற்கு அதிகாரம் கொடுத்து தனது கட்சியின் அடுத்த முகம் என அடையாள படுத்தியது போன்று உதயநிதியை அறிமுகம் செய்து வைத்து இருக்கிறார் சந்திர சேகரராவ் வழியை தொடர்ச்சியாக ஸ்டாலின் அனைத்து விவகாரரங்களிலும் பின் பற்றுவதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
சந்திர சேகர ராவ் மருமகன் போன்று முதல்வர் ஸ்டாலின் மருமகனும் செயல்படுவது ஏற தால உறுதியாகி இருக்கிறது இது ஒருபுறம் இருக்க அரசியலில் நமக்கு பின்னால் வந்த அரவிந் கெஜ்ரிவால் எல்லாம் டெல்லி, பஞ்சாப் மற்றும் வட இந்தியாவில் பல மாநிலங்களில் தடம் பதித்து இருக்கிறார், திமுகவும் அதே போல் வேறு மாநிலங்களில் ஆட்சியை விரிவு படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று இருக்கிறதாம்.
இதையடுத்து புதுச்சேரி மாநிலத்தில் ஆட்சியை பிடிக்கும் வகையில் வியூகம் வகுக்க தயாராகி இருக்கிறதாம் திமுக தலைமை இப்படி நல்லபடியாக சென்ற நிலையில் ஆளும் கட்சியான திமுகவிற்கு இடியாய் விழுந்து இருக்கிறது சமீபத்தில் உளவுத்துறை கொடுத்த அறிக்கை.
அமைச்சர்கள் செயல்பாடுகள் குறித்து அறிக்கைகளை தயார் செய்து குறிப்பிட்ட இடைவெளியில் முதல்வருக்கு உளவு அமைப்புகள் தகவல் கொடுக்கும் அந்த வகையில் சமீபத்தில் உதயநிதி அமைச்சரவையில் இடம்பெற்றது பல மூத்த அமைச்சர்களின் தூக்கத்தை கெடுத்து இருக்கிறதாம், பலரும் வேறு வழியில்லாமல் அனைத்தையும் அனுசரித்து செல்வது போல் இருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
இது தவிர்த்து இனி வரும் நாட்களில் தமிழகத்தில் பாஜக தீவிரமாக களமாட போகிறது எனவும் உதயநிதியை முன்வைத்து குறிப்பாக குடும்ப ஆட்சி என்பதை முன்வைத்து பாஜக தேர்தலை சந்திக்கும் வகையில் வியூகம் வகுத்து இருக்கிறது இது ஒருபுறம் என்றால், இத்தனை நாட்களாக பாஜகவை தீவிரமாக எதிர்த்து வரும் மூத்த பத்திரிகையாளர்கள் பலர் உதயநிதி அமைச்சரவையில் இடம்பெற்றதை கடுமையாக விமர்சனம் செய்வார்கள் ஒரு கட்டத்தில் திமுக ஆட்சிக்கு பாஜக ஆட்சிக்கு வந்தாலே பரவாயில்லை என மக்களுக்கு உணர்த்தும் வகையில் சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் நாராட்டிவ் செட் செய்ய போகிறார்கள் எனவும் அறிக்கை கொடுத்து இருக்கிறதாம்.
இதையடுத்து உதயநிதி மிக கவனமாக ஒவ்வொரு நாகர்வுகளை மேற்கொள்ளவும், மூத்த அமைச்சர்களுக்கு உரிய மரியாதை கொடுக்கவும் குறிப்பாக துறை சார்ந்த நடவடிக்கைகளில் மட்டும் சிறிது காலம் ஈடுபட முதல்வர் அறிவுறுத்தி இருக்கிறாராம் எது எப்படியோ இனி வரும் ஆண்டுகளில் பாஜக தமிழகத்தில் விஸ்வரூபம் எடுக்கும் என்பது திமுக அமைச்சர்கள் பலரே கூறும் கருத்தாக இருக்கிறது.