24 special

சூப்பர் ஸ்டாருக்கு புது தலைவலி..! நடிகர் ரஜினிக்கு பகிரங்க கேள்வி எழுப்பிய நபர்..!

Rajinikanth
Rajinikanth

நடிகர் ரஜினி காந்த் நடிப்பில் வெளியான பாபா திரைப்படம் மீண்டும் வெளியான நிலையில் அது பலருக்கு ரஜினியின் ஆன்மீக நம்பிக்கையை உணர்த்தும் வகையில் அமைந்து இருந்தது இந்த சூழலில் நடிகர் ரஜினி காந்த் திடீர் என திருப்பதி கோவிலும் அதனை தொடர்ந்து தர்காவிலும் வழிபாடு நடத்தினார்.


ரஜினியுடன் இசை அமைப்பாளட் ஏ ஆர் ரஹ்மானும் உடன் சென்று இருந்தார் இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில் தற்போது ரஜினியை பலரும் விமர்சனம் செய்ய தொடங்கி இருக்கின்றனர், நடிகர்கள் தங்களை எப்போதும் நடிகர்களாக மட்டுமே பார்க்கிறார்கள், தங்களது திரைப்படங்கள் வெளியாகும் முன்பு தேவையில்லாத விளம்பரங்களை தேடுகிறார்கள்.

ரஹ்மான் அழைத்த காரணமாக ரஜினி தர்காவில் வழிபாடு நடத்தினார் என்று கூறுகிறார்கள் உண்மையில் அப்படி என்றால் நல்லது ஏன் இதே ரஜினி திருப்பதி சென்ற போது உடன் ரஹ்மானை அழைத்து சென்று இருக்கலாமே அவர் வருவாரா?

 ரஹ்மானின் அம்மா நெற்றியில் திருநீருடன் சென்ற  கவிஞரும் பாடல் ஆசிரியருமான பிறைசூடனிடம் இப்படியெல்லாம் விபூதி வைத்து கொண்டு எங்கள் வீட்டிற்கு வராதீர்கள் என சொன்னார் என நேரடியாக பிறை சூடனே பேட்டியில் கூறி இருக்கிறாரே? அப்படி பட்ட ரஹ்மான் அழைத்தால் எங்கு வேண்டுமானாலும் ரஜினி செல்லலாமா? இதில் கூட விளம்பரம் தேவையா என தஞ்சையை சேர்ந்த வினோத் குமார் ஆவேசமாக ரஜினியிடம் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

இதே போன்று சமூக வலைத்தளமான ட்விட்டரில் ரஜினி முருகன் என்பவர் தலைவா நேற்று உங்களுக்கு பின்பு பல ஆண்டுகள் கழித்து சினிமாவில் தோன்றிய உதயநிதி அமைச்சராக பொறுப்பு ஏற்ற நிகழ்விற்கு வாழ்த்துக்கள் தெரிவித்தீர்கள் அவர் உங்களை இதே டிசம்பர் மாதம் 2019 -ம் ஆண்டு என்ன சொன்னார் தெரியுமா?

 உரிமைக்கான போராட்டத்தைக் கண்டு 'வன்முறை' என்று அஞ்சும் வசதியான, வயதான பெரியவர்களைச் சரியான பாதுகாப்புடன் வீட்டிலேயே விட்டுவரவும் என உங்களை சீண்டினார் ஆனால் இப்போது உதயநிதிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து கொண்டு இருக்கிறீர்கள், அது அடங்குவதற்குள் மசூதியில் வழிபாடு இதெல்லாம் உங்களுக்கு சினிமா வெற்றிக்கு உதவலாம் ஆனால் எங்களை போன்ற பில்லியன் ரசிகர்கள் மனங்களை இழந்து விட்டீர்கள் என உறுக்கமாக பதிவு செய்துள்ளார் தேவகோட்டையை சேர்ந்த ராமகிருஷ்ணன்.

ரஜினி மீது தற்போது சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் ரஜினிக்கு பின்பு சினிமாவிற்குள் வந்த உதயநிதியை வாழ்த்த வேண்டிய கட்டாயத்தில் ரஜினி  வந்து விட்டாரே என கடுமையான விமர்சனங்களும் ரஜினி மீது எழுந்து இருக்கின்றன.

ஏற்கனவே அரசியலுக்கு வருவேன் என தெரிவித்த ரஜினி திமுக தலைமைக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்த கருத்தால் பின் வாங்கியதாக ஒரு குற்றசாட்டு ரஜினி மீது இருக்கையில் தொடர்ந்து அவர்களது தயாரிப்பில் ரஜினி நடிப்பதும் இப்போது ரஹ்மான் உடன் சென்று வழிபாடு நடத்துவதும் ரஜினியின் மீது விமர்சனங்களை உண்டாக்கி இருக்கிறது.