கரூரை தனது கோட்டையாகவும் கரூர் மாவட்டத்தில் ராஜாவாக வலம் வந்து கொண்டிருந்த சமயத்தில் செந்தில் பாலாஜிக்கு இருந்த ஆதரவுகள் என்பது அதிகமாக இருந்தது. கரூர் முழுவதையும் தன் கைக்குள் வைத்துக் கொண்டு மணல் வியாபாரம், மதுபான கடை ஏலம் என அனைத்து நடவடிக்கைகளிலும் கரூர் கும்பல் ஈடுபட்டிருந்தது என்ற செய்தியும் அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டது. இருப்பினும் தனது அரசியல் பலத்தாலும் பண பலத்தாலும் செல்வாக்கின் உச்சியில் இருந்த செந்தில் பாலாஜி தனக்கு சொந்தமாக மாபெரும் பங்களா ஒன்றை கரூரில் கட்டிக் கொண்டிருந்தார். அதற்கான கட்டுமான பணிகள் அனைத்தும் வெகு விமர்சியாகவும் பரபரப்பாகவும் நடைபெற்றது இந்த கட்டுமானத்திற்கு தேவையான பொருட்கள் அனைத்தும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது இப்படி பிரம்மாண்டமாக கோடிக்கணக்கில் செலவழித்து செந்தில் பாலாஜி கட்டிய பங்களா குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பலரால் பகிரப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
அப்படி செந்தில் பாலாஜியின் பங்களா வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானதற்கு பிறகு அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களும் விமர்சனங்களும் அதிகமானது டாஸ்மார்க் ஊழியர்களை கரூர் கம்பெனி என்ற பெயரில் எங்களிடம் பணம் வாங்குகிறார்கள் அதன் காரணமாகத்தான் மதுபான கடைகளில் பாட்டில் ஒன்றுக்கு அதிக விலைகள் வசூலிக்கப்படுகிறது என்று கூறியதை அடுத்து செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை தொடர் சோதனையில் இறங்கியது. சோதனை முழுவதும் முடிந்த பிறகு செந்தில் பாலாஜியை கைது செய்ய அதிகாரிகள் முற்படும்பொழுது தனக்கு நெஞ்சுவலி என்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து இருப்பினும் நீதிமன்ற காவலில் அமலாக்கத்துறை அவரை சிறை பிடித்து, புழல் சிறைக்கு அனுப்பி நீதிமன்றத்தில் போராடி அவரை தன் காவலில் எடுத்து அவருக்கு எதிரான 3000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து இன்றுவரை செந்தில் பாலாஜி ஜாமீனில் விடாமல் புழல் பக்கம் இழுத்து வைத்திருக்கிறது அமலாக்கத்துறை.
இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் பங்களா வீடியோ போன்று மற்றொரு அமைச்சரின் பங்களா வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. அதாவது திமுகவின் கைத்தறி துறை அமைச்சர் ஆர் காந்தி ஒரு மாபெரும் பங்களாவை கட்டி உள்ளார் எனவும் இதுதான் அந்த வீடு எனவும் ஒரு வீடியோ தற்பொழுது வெளியாகி உள்ளது. கிட்டத்தட்ட 120 கோடிக்கு பெரும் பங்களா போன்ற வீட்டை ஜவுளித்துறை அமைச்சர் ஆர் காந்தி கட்டி வருகிறார் என்ற செய்தி பல விமர்சனங்களை பெற்றுள்ளது. இதுகுறித்து மூத்த அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் 120 கோடிக்கு வீடு கட்டி வரும் ஜவுளித்துறை அமைச்சர் ஆர் காந்தி எம்எல்ஏ விற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் கிரகப்பிரவேசத்திற்கு கூப்பிடுங்கள் சார் என்று கலாய்த்துள்ளார். அதுமட்டுமின்றி ஒரு அமைச்சருக்கு இந்த சின்ன குடிசையை கூட கட்ட உரிமை இல்லையா என்று அமைச்சர் ஆர் காந்தி அவர்களை கிண்டல் செய்யும் பல விமர்சன கமெண்ட்கள் இணையங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே ஒரு பங்களா வீடியோ வெளியானதால் புழல் சிறையில் தவித்து வரும் செந்தில் பாலாஜி இன்று வரை எப்பொழுது வெளியில் வருவார் என்பது தெரியாமல் தவித்து வருகிறார். இந்த நிலையில் ஜவுளி துறை அமைச்சர் ஆர் காந்தியின் பங்களா வீடியோ வெளியானது குறித்து திமுக தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது.