Cinema

எனக்கு டிமென்ட் அதிகம் மோசமாக பேசும் பயில்வான்...ஒரே வார்த்தையில் கப்சிப் நடந்தது என்ன?

Bayilvan Ranganathan
Bayilvan Ranganathan

தமிழ் சினிமாவில் பயில்வான் ரங்கநாதன் திரைப்படங்களில் காமெடியனாகவும் நடித்து வந்த இவர் தற்போது சினிமா விமர்சகராக மாறி தனியாக ஒரு யூடியூப் சேனலை தொடங்கி அதனை மூலம் புது படங்கள் குறித்து விமர்சனம் மற்றும் நடிகர் நடிகைகளை குறித்து பழைய விமர்சனங்களை பேசி குடும்பத்தில் தகராறு ஏற்படும் வகையிலும் பேசி வருகிறார். பயில்வான் ரங்கநாதன் தற்போது நேர்காணலில் தொகுப்பாளர் ஒருவரிடம் பேசியது சர்ச்சையாக மாறியுள்ளது.


1983ம் ஆண்டு வெளியான முந்தானை முடிச்சிட்டு படத்தின் மூலம் பயில்வான் ரங்கநாதன் ஒரு சிறப்பு தோற்றத்தில் அறிமுகமானார். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் துணை நடிகராக நடித்து வந்தார். தற்போது சினிமாவில் இருந்து விலகி பாத்து படங்களின் விமர்சனம் மற்றும் தனியாக ஒரு யூடியூப் சேனலை தொடங்கி அதன் மூலம் விமர்சித்து வரும் இவர் பல சர்ச்சைகளிலும் சிக்கியிருக்கிறார். சினிமா துறையை சேர்ந்த ஒருவரை இவர் கடுமையாக விமர்சனம் செய்தது தொடர்பாக பொது வெளியில் அந்த பெண் பயில்வானை அடித்ததும் பெரும் பேசு பொருளாக மாறியது. அதன் பிறகு தான் மக்கள் இடத்தில் பயில்வான் குறித்து விளம்பரம் தானாக வெளி வந்தது என்றே சொல்லலாம். 

ரங்கநாதன் பயில்வான் சினிமா துறையில் இருந் நடிகர், நடிகைகள் என யாரையும் விட்டு வைக்காமல் விமர்சனம் செய்வதால் அவர்களது குடும்பத்தில் பிரச்சனையை கொளுத்தி போட்டு இருக்கிறார் என்பது விறல் விட்டு என்ன முடியாத அளவிற்கு உள்ளது என சொல்லலாம். இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த பயில்வான் ரங்கநாதனிடம் பழைய நடிகர், நடிகையரின் அந்தரங்க விஷயங்களை தற்போது பேசுவது அவர்களது குடும்ப வாழ்க்கையை பாதிக்காதா? அவர்களின் வாழ்க்கை எப்படி போனா உங்களுக்கு என்ன,உங்களுக்கு காசு வந்தா போதுமா என்று கேள்வி கேட்டார் தொகுப்பாளினி. 

இதற்கு பதில் அளித்த பயில்வான் ரங்கநாதன், என்னை பற்றி என் ரசிகர்களுக்கு நன்றாக தெரியும், நான் எதையும் ஆதாரம் இல்லாமல் சொல்ல மாட்டேன். புரட்சித் தலைவர் எம்ஜிஆர்,பாக்யராஜ் போன்ற நல்ல மனிதர்கள் தான் என்னை சினிமாவில் வளர்த்துவிட்டார்கள். இதனால், சினிமாவில் உள்ள சாக்கடையை அகற்ற வேண்டும் என்பதற்காகத்தான் இப்படி பேசுகிறேன் என்றார். நன்றாக சென்ற நிகழ்ச்சி தொகுப்பாளர் இந்த சாக்கடையில் தான் நீங்க வளர்ந்தீங்க என்பதை மறந்துவிடாதீர்கள் என்று பேச, இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. ஒரு கட்டத்தில் டென்ஷனான பயில்வான் என் வெயிட்டுக்கும், உடம்புக்கும் எட்டி மிதிச்சேன் சட்னி ஆய்டுவ என்று சொல்ல, தொகுப்பாளினி முன்புதான் நீங்க பயில்வான் இப்போது நீங்க நொந்த பயில்வான் என்றார்.

இதனால், கோபத்தின் உச்சத்திற்கு சென்ற பயில்வான் ரங்கநாதன், எனக்கு பாடி டிமெண்ட் அதிகம், ரூமுக்கு வா நான் பயில்வானா இல்லையா என்பதை காட்டுகிறேன் என்று படுமோசமாக பேசினார். இதனால் நிகழ்ச்சி பாதியிலேயே தடைபட்டதாக கூறப்படுகிறது. பயில்வான் ஒரு பெண் தொகுப்பாளினிடம் பேசியது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பயில்வான் மீது மக்கள் கடும் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். எனவே பயில்வான் ரங்கநாதன் அந்த பெண் தொகுப்பாளினிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் விமர்சனம் எழுந்துள்ளது. தற்போது அந்த யூடியூப் சேனலில் சம்பாதிப்பதற்காக தான் இது போன்று ஓப்பனாக பயில்வான் பேசுவதாகவும் சினிமா துறையை சேர்ந்தவர்கள் விமர்சிக்க தொடங்கியுள்ளனர ன்பது குறிப்பிடத்தக்கது.