கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அதிமுக பாஜக கூட்டணி முடிவுக்கு வருகிறதாக அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பொழுது திருமாவளவன் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மேலும் அவருக்கு ஓய்வு தேவை என்றும் இந்த ஓய்வு நேரங்களில் சுவாச ரீதியான பல சிகிச்சைகளை ஊருக்கு சென்று மேற்கொள்ள உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் மற்ற கட்சியினரும் திருமாவளவனை சந்திப்பதற்காக சென்று அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் பூரண குணமடைந்து அவரே திரும்புவார் என்று திமுக சார்பில் திருமாவளவனை பார்க்க சென்று வந்த கட்சியினர் சிலர் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்ததும் அரசியல் வட்டாரங்களில் கவனத்தைப் பெற்றிருந்தது.
மேலும் அந்த சமயத்தில் திருமாவளவன் அதிமுகவுடன் இணைவதற்கான திட்டத்தை போட்டுக் கொண்டிருந்தார் எனவும், அதிமுக பாஜகவுடன் இணைந்த ஒரே காரணத்திற்காக அதிமுகவுடன் இணைமுடியாத சூழ்நிலையில் இருந்து வந்த திருமாவளவனுக்கு பாஜக அதிமுக கூட்டணி விலகல் என்ற செய்தி பெரும் நற்செய்தியாக அமைந்துள்ளது எனவும் சில தகவல்கள் கிடைத்தன.மேலும் திருமாவளவன் தரப்பில் இருந்தும் திமுகவும் தமக்கு சரியான அங்கீகாரத்தை கொடுக்க தவறுகிறது ஆட்சிக்கால ஆரம்பத்திலிருந்து தொடர் பின்னடைவுகளையும் அதிருப்திகளையும் மக்களிடம் இருந்து பெற்று வருகிறோம், இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை திமுகவுடன் இணைந்து எதிர் கொண்டால் நிச்சயம் நமக்கு பெருந்தோல்வி தான் ஏற்படும் அதனால் மூன்று தொகுதிகளை கேட்டு ஒரு கோரிக்கை வைத்து விடுவோம் அதில் ஏற்படும் பிரச்சனையில் திமுகவில் இருந்து கழண்டு வந்து அதிமுகவில் இணைந்து கொள்ளலாம் என்ற ஒரு ஆசையிலும் திருமாவளவன் இருந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.
இந்த நிலையில் அவரது உடல்நிலை முழுவதும் குணமாக்கப்பட்டு பல மேடை நிகழ்ச்சிகளையும் கூட்டங்களையும் நடத்தி வருகிறார் சில நிகழ்ச்சிகளுக்கு தலைமையேற்றம் வருகிறார் அந்த வகையில் தற்போது கலந்துகொண்ட நிகழ்ச்சியின் மேடையில் அவர் செய்த செயல் ஒன்று பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கடந்த பத்தாம் தேதி அன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகரத்தில் நடைபெற்ற மகாலட்சுமி பல்நோக்கு மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்து கொண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருமாவளவன் இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பங்கு பெற்ற சின்னத்திரை நடிகை ஒருவரை திருமாவளவன் தவறாக பார்த்ததாகவும், திருமாவளவனிடம் மற்றவர் பேச்சு கொடுக்க முற்படும் பொழுதும் சால்வை அணிய முற்படும் பொழுதும் அவற்றை கவனிக்காமல் அந்த தொகுப்பாளினியவே அவர் பார்த்துக் கொண்டிருந்த புகைப்படங்களும் வீடியோ காட்சிகளும் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவுகிறது.
ஒரு சில மாதங்களுக்குப் பிறகு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் திருமாவளவன் மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்து கொண்ட தொகுப்பாளினியை பார்த்து அவர் செய்த முக பாவனைகள் குறித்த போட்டோக்களும் பல்வேறு சர்ச்சை கருத்துக்களுடன் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இருப்பினும் இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் வட்டத்தில் விசாரிக்கும் பொழுது இது திருமாவளவனை பற்றி அவதூறு பரப்பும் வகையில் செய்த வீடியோ மற்றும் போட்டோக்கள் தான் மற்றபடி அவர் இப்படி அது மாதிரி எல்லாம் கிடையாது என்று கூறியுள்ளனர். மேலும் அரசியல் விமர்சகர்கள் சிலரிடம் கேட்டபோது, இது அரசியல் ரீதியாக கூறப்படும் சமூக வலைதள விமர்சனம் இது சில நாளைக்கு பேசுபொருளாக இருக்கும் என கூறினார்கள்..