24 special

வைரமுத்து விற்கு அடுத்தபடியாக சின்மயியிடம் சிக்கிய பொன்முடி....

ponmudi, chinmayi
ponmudi, chinmayi

பிரபல பாடகியான சின்மயி கடந்த 2018 ஆம் ஆண்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பாடலாசிரியர் வைரமுத்து தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டது குறித்து பதிவிட்டு இருந்தார். அவரைத் தொடர்ந்து பெங்களூருவை சேர்ந்த பத்திரிக்கையாளர் சந்தியா மேனன் என்பவரும் வைரமுத்துவை குறித்து குற்றம் சாடி தனது வாட்ஸ் அப் செய்தியை பதிவு செய்திருந்தார். இரண்டு குற்றச்சாட்டுகளும் பிரபல பாடல் ஆசிரியரான வைரமுத்து மீது சுமத்தப்பட்டு இருப்பது தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது பெரும் வைரலாக பேசப்பட்ட இந்த விவகாரம் குறித்து பாடல் ஆசிரியர் வைரமுத்து அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் தற்பொழுது நாகரீகமாகி வருகிறது! அவற்றில் இதுவும் ஒன்று காலமே உண்மையை சொல்லும் உண்மைக்கு புறமான எதையும் நான் பொருட்படுத்துவது இல்லை என்று தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்தார்.


இருப்பினும் வைரமுத்துவின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றதற்கு வைரமுத்து மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை காரணம் என்றும் பரவலாக பேசப்படுகிறது. இதைத் தவிர பாடகி சின்மயி பெண்கள் குறித்த பல கருத்துக்களையும் ஏதேனும் அநீதி நடந்தால் அது குறித்த விமர்சனங்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு தண்டனை பெற்றுள்ள அமைச்சர் பொன்முடி குறித்த தகவல்களையும் தனது சமூக வலைதளத்தில் சின்மயி பதிவிட்டுள்ளார். அதாவது 2011ல் வருமானத்திற்கு அதிகமாக அமைச்சர் பொன்முடியும் அவரது மனைவி விசாலாட்சியும் சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தது.

இதனை அடுத்து கடந்த 2015 இந்த வழக்கு குறித்த விசாரணை விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகிய இருவரும் குற்றவாளிகள் என்பதை நிரூபிக்கும் வகையிலான சாட்சிகள் போதிய அளவில் இல்லை எனக் கூறி இருவரையும் சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது. ஆனால் சில நாட்களுக்கு முன்பு மீண்டும் இந்த வழக்கு மறு விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவரும் குற்றவாளிகள் அதனால் அவர்களை விடுதலை செய்து உத்தரவிட்ட சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்யப்படுவதாக உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார். இந்நிலையில் நேற்றைய தினம் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி மீதான குற்றச்சாட்டுக்கு தண்டனைகள் தீர்ப்பளிக்கப்பட்டது மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது இவற்றிற்கு 30 நாட்கள் அவகாசத்தையும் அளித்து உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்துள்ளார்.

இதற்கிடையில் நீதிமன்றத்தில் அமைச்சரின் வயதையும் மருத்துவ காரணங்களின் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் பொன்முடியின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என் ஆர் இளங்கோ வாதம் செய்ததை குறித்து சின்மயி விமர்சனம் செய்துள்ளார். அதாவது, ஒரு எம்எல்ஏ அல்லது அமைச்சர் போன்ற அரசியல் பதவியில் இருக்கும் போது அவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள், ஆனால் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும்போது, திடீரென்று வயதானவர்களாகவும், மருத்துவப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்களாகவும் மாறிவிடுகிறார்கள் எப்படி இது? என விமர்சித்து பதிவிட்டுள்ளார் சின்மயி இது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஆகமொத்தத்தில் மக்கள் முதல் திரைத்துறையினர் வரை பொன்முடி விவகாரத்தில் திமுகவிற்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.