நேற்று பொன்முடிக்கு ஊழல் வழக்கில் வந்த தீர்ப்பு வந்த அதிர்ச்சியில் இருந்தே திமுவினர் இன்னும் மீளாத நிலையில் நேற்று முன்னாள் அமைச்சர் வீட்டுக்களில் கர்நாடக மாநில போலீசார் அதிரடியாக இறங்கிய சம்பவம் குறித்த செய்தி தான் இன்று இணையத்தை ஆக்கிரமிப்பு செய்து இருக்கிறது.முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி மகன் வீட்டில் கர்நாடக லோக் ஆயுக்தா காவல்துறை சோதனை...திமுக விளையாட்டு அணி மாநில துணைச் செயலாளராக பொறுப்பில் இருப்பவர் பைந்தமிழ் பாரி. இந்நிலையில்கோவை கிருஷ்ணா காலணியில் உள்ள பைந்தமிழ் பாரி வீட்டில் 15 பேர் கொண்ட கர்நாடகா லோக் ஆயுக்தா போலீசார் திடீர் என அதிரடியாக சோதனை நடத்தினர்.
கர்நாடகாவில் பைந்தமிழ் பாரி மற்றும் அவரது தந்தை பொங்கலூர் பழனிச்சாமி ஆகியோர் கல்குவாரி வைத்து தொழில் செய்து வரும் நிலையில் கல்குவாரி முறையாக நடத்தாமல் விதிமுறைகளை மீறி செயல்படுத்தி உள்ளனர் என்றும் அரசிற்கு செலுத்த வேண்டிய பணத்தில் ஊழல் நடைபெற்று இருப்பதாகவும் புகார் எழுந்தது.இந்நிலையில் கர்நாடக பதிவு எண் கொண்ட இரண்டு வாகனங்களில் வந்த அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர் கையில் ஆவணங்களை சேகரித்தவர்கள் அதனை கைப்பற்றி மீண்டும் கர்நாடக மாநிலம் சென்றனர்.பாஜக அமலாக்க துறையை வைத்து எங்கள் திமுகவினரை பழி வாங்க பார்க்கிறது என திமுகவினர் தற்போது வரையில் பேசி வரும் நிலையில் தற்போது கர்நாடக மாநிலத்தில் ஆட்சியில் இருப்பது காங்கிரஸ் கட்சி அம் மாநில போலீசாரே தற்போது திமுகவின் முக்கிய உறுப்பினர் வீட்டுகளில் அதிரடியாக ஊழல் புகாரில் சோதனை நடத்தி இருப்பது பொதுமக்கள் மத்தியில் திமுகவினர் என்றாலே ஊழல் தானா என்ற விமர்சனத்தை உண்டாக்கி இருக்கிறது.