24 special

அப்போ கனிமொழி..... அடுத்து கீதா ஜீவன்.... ஜோடியாக சிக்கிய தூத்துக்குடி திமுக பெண் தலைவர்கள்....

kanimozhi, geetha jeevan
kanimozhi, geetha jeevan

குமரி கடலில் ஏற்பட்ட வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய நான்கு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கனமழை பெய்தது இந்த கனமழையானது இதுவரை தென் மாவட்டங்கள் காணாத மழை என கூறப்பட்டது. இதனால் திருநெல்வேலி தாமிரபரணி ஆறு வெள்ளப்பெருக்கை கண்டு குடியிருப்பு பகுதிகள் முழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி மக்கள் அனைவரும் முகாம்களிலும் திருமண மண்டபங்களிலும் தங்க வைக்கப்பட்டனர். இதற்கிடையில் திருச்செந்தூரில் இருந்து சென்னை சென்று கொண்டிருந்த ரயில் ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்தப்பட்டது. நிறுத்தப்பட்ட ரயிலை சுற்றி சில ஏரிகளின் கரை உடைந்து வெள்ளம் சூழ்ந்து கொண்டதால் ரயிலில் உள்ள பயணிகளை மீட்க முடியாமலும் அவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க முடியாமலும் போயிட்டு! 


இருப்பினும் ஸ்ரீவைகுண்ட பகுதி மக்கள் வெள்ளத்தில் சிக்கிய பயணிகளுக்கு தேவையான உணவுப் பொருட்களை வழங்கி உள்ளனர். கரையோரம் இருக்கும் அனைத்து ஊர்களும் வெள்ளத்தால் மூழ்கியது. இதனால் பெரும்பாலான சாலை இணைப்புகள் துண்டிக்கப்பட்டு பெரும்பாலான பகுதிகள் தனித்து விடப்பட்டது. உயிர் சேதம், சொத்துக்கள் சேதம், பொருள் சேதம், பயிர் சேதம், பெரும்பாலான கால்நடைகள் இறப்பு எனப் பல சேதங்களால் இரண்டு நாட்களாக பெய்த மழையால் தென் தமிழகம் பாதிக்கப்பட்டுள்ளது. தென் தமிழகத்தில் மழை பொழிவதற்கு முன்பாக சென்னை கடும் மழையை சந்தித்து வெள்ளப்பெருக்கில் சிக்கி நிவாரணப் பொருட்களில் இல்லாமல் சென்னை மக்கள் திமுக அரசை கடுமையாக சாடினர் அதேபோன்று நிகழ்வும் தென் தமிழக மக்களுக்கும் ஏற்பட்டது தமிழக அரசுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

கனமழை குறித்த முன்னெச்சரிக்கைகள் அனைத்தும் மத்திய அரசால் முன்கூட்டியே கொடுக்கப்பட்ட போதிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏன் எடுக்கப்படவில்லை என்ற கேள்விகளும் தமிழக அரசின் மீது எழுப்பப்படுகிறது. சென்னையைப் போலவே தூத்துக்குடி திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பாதிப்படைந்த பகுதிகளை காணச் சென்ற திமுக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு தங்களது உரிமைகளை கோபத்துடன் கேட்டு வருகின்றனர். பாதிப்பே இல்லாத பகுதிகளுக்கு பல நிவாரண பொருட்கள் செல்வதாகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஒரு அமைச்சர் கூட வருவதில்லை நிவாரண பொருட்களும் கிடைப்பதில்லை என்று மக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் திமுகவின் 2024 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு தோல்வியை கொடுப்பதற்கான அடிக்கல்லாக  அமைந்து விட்டது என விமர்சனங்கள் எழுந்துள்ளது. மழையால் தென் தமிழகம் பாதிக்கப்பட்டதால் போக்குவரத்து மின்சாரம் தொலைதொடர்பு என அனைத்தும் துண்டிக்கப்பட்டிருந்தது இந்த நிலையில் மழை நின்று சிறிது சிறிதாக மக்கள் தங்களது வாழ்க்கைக்கு திரும்ப முயற்சி மேற்கொண்டிருக்கின்றனர்.

அதோடு தொலை தொடர்பு வசதிகளும் ஆங்காங்கே இணைக்கப்படுகிறது. இந்த நிலையில் மழை வெள்ளத்தில் மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கும் பொழுது எடுக்கப்பட்ட வீடியோக்கள் ஒவ்வொன்றும் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது, அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தின் ஒரு பகுதியில் மக்கள் அனைவரும் மழையால் செல்ல முடியாமல் சாலையில் குவிந்திருக்கும் பொழுது திமுக அமைச்சர் கீதா ஜீவன் தனது சொந்த பள்ளி வாகனத்தை அனுப்பி தன் கணவரை மட்டும் அங்கிருந்து மீட்டு சென்றுள்ளார். அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் சிலர் எங்களை அந்த டோல்கேட் பக்கத்தில் இறக்கிவிடுங்கள் என கேட்டும் அந்த வேனில் ஏற்றவில்லையாம், அப்பள்ளி வாகனத்தில் இருக்கைகள் அனைத்தும் வெற்றிடமாக இருக்கும் பொழுதும் பாதிக்கப்பட்ட மக்களையும் மீட்டு செல்லாமல் தன் கணவரை மட்டும் கீதா ஜீவன் அனுப்பிய ஆட்கள் மீட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது. இதனால் மொத்தமாக தூத்துக்குடி பகுதியில் திமுக கூண்டோட காலி எனவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது.