24 special

தமிழகம் திருப்பிய கையோடு முதல் வேலையாக முதல்வருக்கு ஆப்பு வைத்த அண்ணாமலை

Mk stalin,annamalai
Mk stalin,annamalai

சென்னை திரும்பிய கையோடு முதல்வருக்கு முதல் ஆப்பு வைத்த அண்ணாமலைகர்நாடக தேர்தல் களத்தில் தீவிரமாக பணியாற்றி வந்த அண்ணாமலை தற்போது தமிழகம் திரும்பி இருக்கிறார் அண்ணாமலை சென்னை வந்ததும் முதல் விஷயமாக முதல்வர் ஸ்டாலின் குறித்தும் அவருக்கு எவ்வாறு பதிலடி கொடுக்க இருக்கிறோம் என தெரிவித்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.


இனி, தமிழக அரசியல் தான் முக்கியம். 'தி.மு.க., பைல்ஸ்' என்ற பெயரில் நான் தி.மு.க.,வினர் சொத்து பட்டியல் மற்றும் முதல்வர் தொடர்பான ஊழல் விவகாரத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததும், வழக்கறிஞர் 'நோட்டீஸ்' அனுப்பி மிரட்டி பார்க்கின்றனர். இதற்கு இந்த அண்ணாமலையும் பயப்பட மாட்டான்; பா.ஜ.,க வும் பயப்படாது. முதல்வர் ஸ்டாலின், என் மீது நேரடியாக அவதுாறு வழக்கு போட்டுள்ளார்; அதை வரவேற்கிறேன். அவருக்கு என் மனமார்ந்த நன்றி.

வரும் ஜூலை 9ல் துவங்கும், 'என் மண்; என் மக்கள்' என்ற பாதயாத்திரை, டிசம்பரில் முடியும். பாதயாத்திரையின் போது, தமிழக அரசு மற்றும் அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட ஊழல்கள் தொடர்ச்சியாக அம்பலப்படுத்தப்படும்.

இந்த பாதயாத்திரை வாயிலாக, அனைத்து மாவட்ட மக்களையும் சந்திக்க இருக்கிறேன் என அண்ணாமலை தெரிவித்தார் மேலும், கர்நாடகாவில் துவக்கத்தில், பா.ஜ.,க ஆட்சி அமைக்கக்கூடிய அளவுக்கு போதுமான எண்ணிக்கையில், 'சீட்'களை பெறுவது கடினம் என, ஆருடம் கூறினர்.

அதற்கான பிம்பத்தை கட்டமைத்தனர். ஆனால், பிரசாரத்துக்காக மாநிலம் முழுதும் சுற்றி வந்தபோது, அப்படியொரு நிலை களத்தில் இல்லை என்பதை உணர்ந்தேன். இதை கட்சி மேலிடத்தில் கூறியதும், தொண்டர்கள், தலைவர்கள் மத்தியில் உற்சாகம் கரை புரண்டது.

பிரதமர் மோடி, கர்நாடகாவில் கூடுதலாகவே பிரசாரம் செய்தார். இது, மக்கள் மத்தியில் பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தியது. நேர்மறையான விஷயங்களை கூறியே ஓட்டு கேட்டோம். கர்நாடக தேர்தல் வேலைகளில் ஈடுபட்டது, புது விஷயங்களை கற்று கொடுத்திருக்கிறது; நல்ல அனுபவம் கிடைத்துள்ளது என அண்ணாமலை தெரிவித்தார்.

ஒரு நாள் திமுக பைல்ஸ் வீடியோ வெளியிட்டதே மிக பெரிய அளவில் மாநிலம் முழுவதும் ஆளும் கட்சி வட்டாரத்தில் புகைச்சலை உண்டாக்கிய நிலையில், முதல்வர் போட்ட அவதூறு வழக்கை சட்டப்படி சந்திப்பேன் என்றும், ஜூன் 9 ம் தேதி பாதயாத்திரை தொடங்க போவதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டு இருப்பது ஆளும் கட்சிக்கு அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.

சென்னை திரும்பிய கையோடு முதல் தகவலாக பாதயாத்திரை தொடங்கும் நாள் குறித்தும், முதல்வர் போட்ட அவதூறு வழக்கு குறித்தும் அண்ணாமலை பேசி இருப்பது ஆளும் கட்சியினர் மத்தியில் மீண்டும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.